Showing posts with label இஸ்லாம். Show all posts
Showing posts with label இஸ்லாம். Show all posts

Saturday, July 18, 2009

குரான் முரண்பாடுகள்-44

அவர்கள் இந்த குர்-ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள். குர்-ஆன் 4:82
 
 
 
 
இயேசுவின் பிறப்பு அறிவிப்பின் போது மரியாளின் கேள்வி
(கீழ்கண்ட வசனங்களில் ஆங்கில வார்த்தைகளை நாம் இட்டுள்ளோம்)
3:47 (அச்சமயம் மர்யம்) கூறினார்; "என் இறைவனே! என்னை ஒரு மனிதனும் தொடாதிருக்கும்போது எனக்கு எவ்வாறு ஒரு மகன்(Walad) உண்டாக முடியும்?" (அதற்கு) அவன் கூறினான்; "அப்படித்தான் அல்லாஹ் தான் நாடியதைப் படைக்கிறான். அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், அவன் அதனிடம் 'ஆகுக' எனக்கூறுகிறான், உடனே அது ஆகி விடுகிறது." 
19:20 அதற்கு அவர் (மர்யம்), "எந்த ஆடவனும் என்னைத் தீண்டாமலும், நான் நடத்தை பிசகியவளாக இல்லாதிருக்கும் நிலையிலும் எனக்கு எவ்வாறு புதல்வன்(Ghulam) உண்டாக முடியும்?" என்று கூறினார். 

 

 
 
 
 
 
 
 
தொடரும்...


மேலும் வாசிக்க .................

 
குரான் முரண்பாடுகள்-1

குரான் முரண்பாடுகள்-2

குரான் முரண்பாடுகள்-3

குரான் முரண்பாடுகள்-4

குரான் முரண்பாடுகள்-5

குரான் முரண்பாடுகள்-6

குரான் முரண்பாடுகள்-7

குரான் முரண்பாடுகள்-8

குரான் முரண்பாடுகள்-9

குரான் முரண்பாடுகள்-10

குரான் முரண்பாடுகள்-11

குரான் முரண்பாடுகள்-12

குரான் முரண்பாடுகள்-13

குரான் முரண்பாடுகள்-14

குரான் முரண்பாடுகள்-15

குரான் முரண்பாடுகள்-16

குர்‍ஆன் முரண்பாடுகள்-17

குர்‍ஆன் முரண்பாடுகள்-18

குர்‍ஆன் முரண்பாடுகள்-19

குர்-ஆன் முரண்பாடுகள்-20

குர்‍ஆன் முரண்பாடுகள்:21

குரான் முரண்பாடுகள்-22

குரான்முரண்பாடுகள்-23

குரான் முரண்பாடுகள்-24

குரான் முரண்பாடுகள்-25
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Wednesday, July 15, 2009

குரான் முரண்பாடுகள்-42

அவர்கள் இந்த குர்-ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள். குர்-ஆன் 4:82
 
 
 
தேவ தூதரிடம் ஜகரியா பேசுகிறார்
3:40 அவர் கூறினார்; "என் இறைவனே! எனக்கு எப்படி மகன் ஒருவன் உண்டாக முடியும்? எனக்கு வயது அதிகமாகி (முதுமை வந்து) விட்டது. என் மனைவியும் மலடாக இருக்கின்றாள்;" அதற்கு (இறைவன்), "அவ்வாறே நடக்கும்;, அல்லாஹ் தான் நாடியதைச் செய்து முடிக்கின்றான்" என்று கூறினான். 
19:8 (அதற்கு அவர்) "என் இறைவனே! என் மனைவியோ மலடாகவும், முதுமையின் தள்ளாத பருவத்தை நான் அடைந்தும் இருக்கும் நிலையில் எனக்கு எவ்வாறு ஒரு புதல்வன் உண்டாகுவான்?" எனக் கூறினார். 

 

 
 
 
 
 
தொடரும்...


மேலும் வாசிக்க .................

 
குரான் முரண்பாடுகள்-1

குரான் முரண்பாடுகள்-2

குரான் முரண்பாடுகள்-3

குரான் முரண்பாடுகள்-4

குரான் முரண்பாடுகள்-5

குரான் முரண்பாடுகள்-6

குரான் முரண்பாடுகள்-7

குரான் முரண்பாடுகள்-8

குரான் முரண்பாடுகள்-9

குரான் முரண்பாடுகள்-10

குரான் முரண்பாடுகள்-11

குரான் முரண்பாடுகள்-12

குரான் முரண்பாடுகள்-13

குரான் முரண்பாடுகள்-14

குரான் முரண்பாடுகள்-15

குரான் முரண்பாடுகள்-16

குர்‍ஆன் முரண்பாடுகள்-17

குர்‍ஆன் முரண்பாடுகள்-18

குர்‍ஆன் முரண்பாடுகள்-19

குர்-ஆன் முரண்பாடுகள்-20

குர்‍ஆன் முரண்பாடுகள்:21

குரான் முரண்பாடுகள்-22

குரான்முரண்பாடுகள்-23

குரான் முரண்பாடுகள்-24

குரான் முரண்பாடுகள்-25
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Tuesday, July 14, 2009

குரான் முரண்பாடுகள்-41

அவர்கள் இந்த குர்-ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள். குர்-ஆன் 4:82
 
 
ஸமுது கூட்டத்தாரை ஸாலிஹ் எச்சரிக்கிறார்
7:73 ஸமூது' கூட்டதாரிடம், அவர்கள் சகோதரராகிய ஸாலிஹை (நம் தூதராக அனுப்பி வைத்தோம்); அவர் (அவர்களை நோக்கி) "என் சமூகத்தார்களே! அல்லாஹ்வையே வணங்குங்கள்; அவனன்றி உங்களுக்கு வேறு நாயனில்லை இதற்காக, நிச்சயமாக உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து ஒரு தெளிவான அத்தாட்சியும் வந்துள்ளது அல்லாஹ்வுடைய இந்த ஒட்டகமானது உங்களுக்கு ஓர் அத்தாட்சியாக வந்துள்ளது எனவே இதை அல்லாஹ்வின் பூமியில் (தடையேதுமின்றி) மேய விடுங்கள் - அதை எத்தகைய தீங்கும் கொண்டு தீண்டாதீர்கள், அப்படிச்செய்தால் உங்களை நோவினை செய்யும் கடும் வேதனை பிடித்துக் கொள்ளும்" என்று கூறினார். 
11:64 "அன்றியும், என் சமூகத்தாரே! உங்களுக்கு ஓர் அத்தாட்சியாக, இதோ இது அல்லாஹ்வுடைய (ஒரு) பெண் ஒட்டகம்; ஆகவே, அல்லாஹ்வின் பூமியில் (எதேச்சையாக) அதை மேய விட்டு விடுங்கள்; எந்த விதமான தீங்கும் செய்யக்கருதி அதைத் தீண்டாதீர்கள்; (அப்படி நீங்கள் செய்தால்) அதிசீக்கிரத்தில் உங்களை வேதனை பிடித்துக் கொள்ளும்" (என்று கூறினார்). 
26:154-155 அவர் சொன்னார்; "இதோ (அத்தாட்சியாக) ஒரு பெண் ஒட்டகம்! (கிணற்றிலிருந்து) அதற்கு (ஒரு நாள்) தண்ணீர் குடிப்புண்டு உங்களுக்கும் குறிப்படப்பட்ட ஒரு நாளில் தண்ணீர் அருந்தும் முறை வரும்."  "இன்னும், அ(வ்வொட்டகத்)தை எவ்விதத் தீங்கைக் கொண்டும் நீங்கள் தீண்டாதீர்கள்; அவ்விதமாக(க எதுவும் செய்வீர்களா)யின், கடினமான ஒரு நாளின் வேதனை உங்களைப் பிடித்துக் கொள்ளும்." 

 

 
 
 
தொடரும்...


மேலும் வாசிக்க .................

 
குரான் முரண்பாடுகள்-1

குரான் முரண்பாடுகள்-2

குரான் முரண்பாடுகள்-3

குரான் முரண்பாடுகள்-4

குரான் முரண்பாடுகள்-5

குரான் முரண்பாடுகள்-6

குரான் முரண்பாடுகள்-7

குரான் முரண்பாடுகள்-8

குரான் முரண்பாடுகள்-9

குரான் முரண்பாடுகள்-10

குரான் முரண்பாடுகள்-11

குரான் முரண்பாடுகள்-12

குரான் முரண்பாடுகள்-13

குரான் முரண்பாடுகள்-14

குரான் முரண்பாடுகள்-15

குரான் முரண்பாடுகள்-16

குர்‍ஆன் முரண்பாடுகள்-17

குர்‍ஆன் முரண்பாடுகள்-18

குர்‍ஆன் முரண்பாடுகள்-19

குர்-ஆன் முரண்பாடுகள்-20

குர்‍ஆன் முரண்பாடுகள்:21

குரான் முரண்பாடுகள்-22

குரான்முரண்பாடுகள்-23

குரான் முரண்பாடுகள்-24

குரான் முரண்பாடுகள்-25
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Monday, June 8, 2009

குரான் முரண்பாடுகள்-40

அவர்கள் இந்த குர்-ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள். குர்-ஆன் 4:82
 
 
 
 
 
இஸ்ரேல் மக்களுக்கு கட்டளைகள்
2:58 இன்னும் (நினைவு கூறுங்கள்;) நாம் கூறினோம்; " இந்த பட்டினத்துள் நுழைந்து அங்கு நீங்கள் விரும்பிய இடத்தில் தாராளமாகப் புசியுங்கள்; அதன் வாயிலில் நுழையும் போது, பணிவுடன் தலைவணங்கி 'ஹித்ததுன்' (-"எங்கள் பாபச் சுமைகள் நீங்கட்டும்") என்று கூறுங்கள்; நாம் உங்களுக்காக உங்கள் குற்றங்களை மன்னிப்போம்;மேலும் நன்மை செய்வோருக்கு அதிகமாகக் கொடுப்போம். 
7:161 இன்னும் அவர்களை நோக்கி; "நீங்கள் இவ்வூரில் வசித்திருங்கள், இதில் நீங்கள் விரும்பிய இடத்திலெல்லாம் (நீங்கள் நாடிய பொருட்களைப்) புசித்துக் கொள்ளுங்கள்; 'ஹித்ததுன்' (எங்களுடைய பாவங்கள் மன்னிக்கப்படுவதாக,) என்று கூறியாவாறு (அதன்) வாயிலில் (பணிவோடு) தலைதாழ்த்தியவர்களாக நுழையுங்கள்; நாம் உங்கள் குற்றங்களை மன்னிப்போம்.நன்மை செய்பவர்களுக்கு நாம் அதிகமாகவே (கூலி) கொடுப்போம்" என்று கூறப்பட்டபோது. 

 

 
 
 
 
 
தொடரும்...


மேலும் வாசிக்க .................

 
குரான் முரண்பாடுகள்-1

குரான் முரண்பாடுகள்-2

குரான் முரண்பாடுகள்-3

குரான் முரண்பாடுகள்-4

குரான் முரண்பாடுகள்-5

குரான் முரண்பாடுகள்-6

குரான் முரண்பாடுகள்-7

குரான் முரண்பாடுகள்-8

குரான் முரண்பாடுகள்-9

குரான் முரண்பாடுகள்-10

குரான் முரண்பாடுகள்-11

குரான் முரண்பாடுகள்-12

குரான் முரண்பாடுகள்-13

குரான் முரண்பாடுகள்-14

குரான் முரண்பாடுகள்-15

குரான் முரண்பாடுகள்-16

குர்‍ஆன் முரண்பாடுகள்-17

குர்‍ஆன் முரண்பாடுகள்-18

குர்‍ஆன் முரண்பாடுகள்-19

குர்-ஆன் முரண்பாடுகள்-20

குர்‍ஆன் முரண்பாடுகள்:21

குரான் முரண்பாடுகள்-22

குரான்முரண்பாடுகள்-23

குரான் முரண்பாடுகள்-24

குரான் முரண்பாடுகள்-25
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Wednesday, April 1, 2009

குரான் முரண்பாடுகள்-34

 
 
அவர்கள் இந்த குர்-ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள். குர்-ஆன் 4:82
 
எரியும் புதரிலிந்து அல்லாஹ் மோசேயிடம் பேசுகிறார்
27:9 "மூஸாவே! நிச்சயமாக நானே அல்லாஹ்! (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கோன். 
27:10 "உம் கைத்தடியைக் கீழே எறியும்;" (அவ்வாறே அவர் அதை எறியவும்) அது பாம்புபோல் நெளிந்ததை அவர் கண்ட பொழுது, திரும்பிப் பார்க்காது (அதனை விட்டு) ஓடலானார் "மூஸாவே! பயப்படாதீர்! நிச்சயமாக (என்) தூதர்கள் என்னிடத்தில் பயப்பட மாட்டார்கள்." 

 

 
 
தொடரும்...


மேலும் வாசிக்க .................

குரான் முரண்பாடுகள்-1

குரான் முரண்பாடுகள்-2

குரான் முரண்பாடுகள்-3

குரான் முரண்பாடுகள்-4

குரான் முரண்பாடுகள்-5

குரான் முரண்பாடுகள்-6

குரான் முரண்பாடுகள்-7

குரான் முரண்பாடுகள்-8

குரான் முரண்பாடுகள்-9

குரான் முரண்பாடுகள்-10

குரான் முரண்பாடுகள்-11

குரான் முரண்பாடுகள்-12

குரான் முரண்பாடுகள்-13

குரான் முரண்பாடுகள்-14

குரான் முரண்பாடுகள்-15

குரான் முரண்பாடுகள்-16

குர்‍ஆன் முரண்பாடுகள்-17

குர்‍ஆன் முரண்பாடுகள்-18

குர்‍ஆன் முரண்பாடுகள்-19

குர்-ஆன் முரண்பாடுகள்-20

குர்‍ஆன் முரண்பாடுகள்:21

குரான் முரண்பாடுகள்-22

குரான்முரண்பாடுகள்-23

குரான் முரண்பாடுகள்-24

குரான் முரண்பாடுகள்-25
 
 
 
 
 
 
 
 

Thursday, March 19, 2009

குரான் முரண்பாடுகள்-33

 
அவர்கள் இந்த குர்-ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள். குர்-ஆன் 4:82
 
மோசே எரியும் புதரைக் காண்கிறார்
20:10 அவர் நெருப்பைக் கண்டு தம் குடும்பத்தாரிடம் "நீங்கள் (இங்கு சிறிது) தங்குங்கள்; நிச்சயமாக நான் நெருப்பைக் கண்டேன்; ஒரு வேளை அதிலிருந்து உங்களுக்கு ஓர் எரி கொள்ளியைக் கொண்டு வரவோ, அல்லது நாம் செல்ல வேண்டிய பாதையை அந் நெருப்பி(ன் உதவியி)னால் கண்டு பிடிக்கவோ செய்யலாம்" என்று (கூறினார்). 
27:7 மூஸா தம் குடும்பத்தாரை நோக்கி; "நிச்சயமாக நான் நெருப்பைக் காண்கிறேன்; உங்களுக்கு நான் அதிலிருந்து (நாம் செல்ல வேண்டிய வழி பற்றிய) செய்தியைக் கொண்டு வருகிறேன், அல்லது நீங்கள் குளிர்காயும் பொருட்டு (உங்களுக்கு அதிலிருந்து) நெருப்புக் கங்கைக் கொண்டு வருகிறேன்" என்று கூறியதை (நபியே!) நினைவு கூர்வீராக! 
28:29 ஆகவே மூஸா (தம்) தவணையை முடித்துக்கொண்டு, தம் குடும்பத்துடன் பயணம் செய்து கொண்டிருந்த போது 'தூர்' (மலையின்) பக்கத்தில் ஒரு நெருப்பைக் கண்டார்; அவர் தம் குடும்பத்தாரிடம் "நீங்கள் (இங்கு சிறிது) தங்குங்கள்; நிச்சயமாக, நான் ஒரு நெருப்பைக் காண்கின்றேன். நான் உங்களுக்கு அதிலிருந்து ஒரு செய்தியையோ, அல்லது நீங்கள் குளிர் காயும் பொருட்டு, ஒரு நெருப்புக் கங்கையோ கொண்டு வருகிறேன்" என்று கூறினார். 

 

 
 
 
தொடரும்...


மேலும் வாசிக்க .................

குரான் முரண்பாடுகள்-1

குரான் முரண்பாடுகள்-2

குரான் முரண்பாடுகள்-3

குரான் முரண்பாடுகள்-4

குரான் முரண்பாடுகள்-5

குரான் முரண்பாடுகள்-6

குரான் முரண்பாடுகள்-7

குரான் முரண்பாடுகள்-8

குரான் முரண்பாடுகள்-9

குரான் முரண்பாடுகள்-10

குரான் முரண்பாடுகள்-11

குரான் முரண்பாடுகள்-12

குரான் முரண்பாடுகள்-13

குரான் முரண்பாடுகள்-14

குரான் முரண்பாடுகள்-15

குரான் முரண்பாடுகள்-16

குர்‍ஆன் முரண்பாடுகள்-17

குர்‍ஆன் முரண்பாடுகள்-18

குர்‍ஆன் முரண்பாடுகள்-19

குர்-ஆன் முரண்பாடுகள்-20

குர்‍ஆன் முரண்பாடுகள்:21

குரான் முரண்பாடுகள்-22

குரான்முரண்பாடுகள்-23

குரான் முரண்பாடுகள்-24

குரான் முரண்பாடுகள்-25
 
 
 
 
 
 
 

Thursday, February 19, 2009

சகோதரர் சாரியாஹ் அவர்களின் சாட்சி


 

 

Brother Chariah's Testimony

நான் மலேசியாவில் உள்ள ஒரு முஸ்லிம் குடும்பத்தில் ஆண் மகனாகப் பிறந்தேன். என் குடும்பத்தார் சமயத் துறையிலும் அரசியல் துறையிலும் மலேசியாவில் பிரபலம் வாய்ந்தவர்கள். இஸ்லாமிய நாட்டின் பிரபலமானவர்களாக இருந்ததால், இஸ்லாமிய மதம் மட்டுமே எங்களுக்கு முக்கியமானதாகும், எங்கள் வாழ்வின் முக்கிய நோக்கமாகவும் இருந்தது.

இஸ்லாமிய பாரம்ரியத்தில் நான் வளர்க்கப்பட்டதோடு மட்டுமல்லாமல், அரபி மொழி, குர்ஆன் கல்வி, சுத்திகரிக்கும் சடங்குகள்(cleansing rituals), தொழுகை, நோம்பு(உபவாசம்) போன்றவைகள் கற்பிக்கப்பட்டு வளர்க்கப்ப்டடேன். அதே வேளையில் பல அயல் நாடுகளைச் சுற்றிப் பார்க்கவும், இதர கலாச்சாரங்களையும் சமயங்களையும் அறியவும் வாய்ப்பு கிட்டியது. புத்த, இந்துத்துவ, யூத, கிறிஸ்தவ பக்தர்களோடு பழகும் வாய்ப்பு கிடைத்தது மற்றும், உண்மையான மார்க்கம் எது என்று அறிய வேட்கையும் ஏற்பட்டது. இறைவன் ஒருவராக இருக்கும்போது ஒன்றுக்கு ஒன்று முரண்பட்ட போதனைகளையுடைய வெவ்வேறு மார்க்கங்கள் இருக்க முடியாது. எனவே, ஒரே இறைவன் வெவ்வேறான சமயக் கல்வியை மனிதனுக்குக் கொடுக்க வாய்ப்பில்லை. அவர் படைத்த உலகைப் பாருங்கள். இயற்பியல்களைக் கற்றுக் கொள்ளுங்கள். நாம் அனுதினமும் இவ்வுலக படைப்பாளியின் இப்படைப்பைக் கண்டு, கற்பனைக்கு எட்டாத அவரின் ஞானத்தையும், அறிவையும் அனுபவிக்கமுடியும். இவ்வுலக மார்க்கங்களில் உள்ள குழப்பங்களைப் போல, படைப்பாளியாகிய இறைவன் குழம்பிப்போய இவ்வுலகை படைக்கவில்லை.

நான் ஆறு வயதாய் இருந்த போது எனக்கு ஏற்பட்ட ஓர் அனுபவம் நினைவுக்கு வருகிறது. அலுவல் காரணமாக என் தந்தை வெளியூருக்குச் சென்று விடுவதால், மாதக் கணக்கில் நான் அவரைச் சந்திக்க முடியாமல் போவதுண்டு. ஒரு நாள் அவர் மேல் எனக்கு அளவு கடந்த ஏக்கம் உண்டாகி, அவரைச் சந்திக்க வேண்டும் என்று விரும்பினேன். அல்லாஹ்விடம் என் தந்தையை வீட்டுக்கு அழைத்து வரவேண்டும் என்று ஜெபிக்க என் சிந்தனையில் தோன்றியது. ஆனால், அப்போது எனக்கு ஒரு பெரிய பிரச்சினை ஏற்பட்டது. அரபி மொழியில் தொழுதுக் கொள்ளும் முறையையும், சுத்தம் செய்துக்கொள்ளும் சடங்குகளையும் அறிந்திருந்த நான், ஒரு குறிப்பிட்ட தேவைக்காக எப்படி வேண்டிக்கொள்ள வேண்டும் என்று அறிந்திருக்கவில்லை. அந்த விருப்பத்தை அல்லாஹ்விடம் தெரிவிக்க முறையாக ஜெபிப்பது எப்படி என்பதையும் வரிசைக்கிரமமாக வாக்கியங்களைக் கூறவும் எனக்குத் தெரியவில்லை. பரிசுத்தம் நிறைந்த அல்லாஹ் வெகு தொலைவில் இருக்கிறார் என்றுதான் நான் அறிந்திருக்கிறேன். அல்குர்ஆனையும் அதன் கட்டளைகளையும் அறிவுப்பூர்வமாக ஆராய்ந்து, நம்மை சடங்குகளால் சுத்திகரித்துக் கொண்டு, சரியாக அரபி மொழியைக் கற்றிருந்தால் மட்டுமே அந்த பரிசுத்த அல்லாஹ்வை அடைய முடியும். மாறாக, கிறிஸ்தவம் அன்பையும் மன்னிப்பையும் அடிப்படையாகக் கொண்ட எளிய மதம் என்றும் பலவீனமான மற்றும் தகுதியில்லாதவர்களையும் ஏற்றுக்கொள்ளும் மதம் என்பதையும் அறிந்து வைத்திருந்தேன். இளம் வயதில் கிறிஸ்தவத் திரைப்படங்களைப் பார்த்து எப்போதும் வியப்பதுண்டு. குவோ வாடிஸ்(Quo Vadis) என்ற படத்தில், ரோமாபுரியர்களால் துன்புறுத்தப்பட்ட கிறிஸ்தவர்கள் அந்தக் கேவலமான செயலை எப்படி முன் வந்து மன்னித்தார்கள் என்பது இந்த உதாரணங்களில் ஒன்று. பிறகு இந்தக் கிறிஸ்தவர்கள் பசியாக வாடும் சிங்கக் கெபியுக்குள் தூக்கி எறியப்பட்டு வேட்டையாடப்பட்டார்கள். உயிர் துறக்கும் நிலையிலும்கூட அவர்கள் தங்கள் தேவனைத் துதித்து வணங்கினார்கள். இப்படிப்பட்ட கிறிஸ்தவர்களினால் நான் விவரிக்க முடியாத பலத்தை பெற்றதாக உணர்ந்தேன். பலவீனத்திலும் அவர்கள் பெலன் கொண்டார்கள். அவர்கள் மரித்துக்கொண்டு இருந்தார்கள், ஆனால், நித்தியத்தில் வாழ்வோம் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருந்தது. எனக்கு இது வியப்பாகவும் குழப்பமாகவும் இருந்தது. இறுதியில் எந்த மதமும் சாராமல், என் தந்தை தாமதமின்றி மறுநாள் வீட்டுக்குத் திரும்ப வேண்டும் என்று வேண்டினேன்.

மறுநாள் காலையில் யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்டது. கதவைத் திறந்து பார்த்த போது புன்முறுவலுடன் நின்ற என் தந்தையின் முகம் தெரிந்தது. எதிர்பாராத வருகை தந்து எங்களை இன்பக் கடலில் அழ்த்த வேண்டும் என்பதற்காகவே, இப்படிச் செய்ததாக அவர் தெரிவித்தார். அல்லாஹ் எங்கள் ஜெபத்தைக் கேட்டார் என்றுணர்ந்து நான் பேரானந்தம் கொண்டேன். அப்போது அல்லாஹ் இருக்கிறார் என்று நம்பத் தொடங்கினாலும், அந்த அல்லாஹ் உண்மையில் யார் என்று அறியும் வேட்கை அதிகரித்தது.

மலேசியாவில் வாழும்போது, இஸ்லாமிய சாங்கியங்களும்(சடங்குகளும்) சட்டதிட்டங்களும் பின்பற்றுவதற்கு மிகவும் சிறமமாக இருந்தது. நோன்பு மாதமாகிய ரமலானில்(ரம்ஜான்) நான் உமிழ் நீரை விழுங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டது. தொழுகுகைக்கு முன்பு ஆசனவாயில் இருந்து துர்காற்று வெளியேறி விட்டால், மீண்டும் ஒருமுறை என்னைச் சுத்தப் படுத்திக் கொள்ள வேண்டும். கொட்டாவி விட்டு விட்டால், வாய் வழியாக தீய ஆவிகள் நுழைந்து விடாமல் இருக்க, குர்ஆனிய வசனங்களை வாசிக்க வேண்டும். உயிருள்ள நாயைத் தொடுவதற்கும் குறைந்தபட்சம் பொம்மை நாயோடு விளையாடுவதற்கும் தடை விதிக்கப்பட்டது. குர்‍ஆன் வசனங்களைக் கொண்ட தாயத்தை நான் அணிந்திருந்தேன். கழிவறைக்குச் செல்வதற்கு முன்பு குர்ஆனிய வசனங்கள் கொண்ட சங்கிலியை(தாயத்தை) கட்டாயம் கழற்றி விட வேண்டும். அணுசரிக்க வேண்டிய ஆயிரக் கணக்கான சட்ட விதிகள் இருந்தன. அவற்றை மீறினால், என்ன விபரீதம் ஆகிவிடுமோ என்ற பயம் என்னைச் சூழ்ந்திருந்தது. இதனால் எனக்கு மன அமைதி கிட்டவில்லை.

ஒரு காலக் கட்டத்தில் நான் வாசிப்பதற்கு பைபிள்(வேதாகமப் புத்தகம்) கிடைத்தது. நான் அதை வாசிக்க தொடங்கினேன். புதிய ஏற்பாட்டில் உள்ள மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகிய நான்கு சுவிசேஷங்களையும் வாசித்தேன். வாசித்த ஒவ்வொரு வசனமும் என் உள்ளத்தை தொட்டது. இறைவனுக்கு முன்பாக நாம் அனைவரும் பாவிகளாக இருக்கிறோம் என்று உணர்ந்தேன். எவ்வளவு தீவிரமாக சட்டதிட்டங்களைப் பின்பற்றினாலும், நம்மால் வெல்ல முடியாது. நாம் நினைத்துப் பார்த்ததை விட இறைவன் மிகவும் பரிசுத்தமானவர். ஒரே ஒரு சிறிய பாவம் கூட நாம் பரலோகம் செல்லும் பாக்கியத்தை இழக்கச் செய்கிறது. மேலும் என் வாழ்வில் ஒரு முறையாவது நான் பாவம் செய்திருக்கிறேன் என்று உணர்ந்திருக்கிறேன். ஆனால், எபேசியல் 2.8இல் கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல (நீங்கள் கட்டளைகளை பின்பற்றுவதினால் அல்ல), இது தேவனுடைய ஈவு; என்று சொல்லியிருக்கிறார்.

****

ஒரு நாள் நானும் என் தந்தையும் கடும் நோய்க்கு ஆளானோம். பல வைத்தியர்களைச் சந்தித்தும் அவர்களால் நோயைக் கண்டறிய முடியவில்லை. வழங்கப்பட்ட எல்லா மருந்துகளையும் சாப்பிட்டப் பிறகும் நாளுக்கு நாள் எனது நோய் அதிகரித்துக் கொண்டே போனது. எனது உடல் எடை 12 கிலோ குறைந்ததோடு மரணம் என்னை நெறுங்கி விட்டது என்றும் உணர்ந்தேன். நான் தேவனிடம் ஜெபிக்க தொடங்கினேன். என் பாவங்கள் அனைத்தையும் அவரிடம் அறிக்கையிட்டேன். என்னை மன்னிக்கும் படி அவரிடம் வேண்டினேன். என் பாவங்களுக்காக தன் குமாரனாகிய இயேசு கிறிஸ்து மூலமாக கொடுத்த தியாக பலியை நான் அங்கீகரித்தேன். உண்ணவோ நிற்கவோ மற்ற எந்த சரீரப்பிரகாரமான காரியங்களைச் செய்ய முடியாவிட்டாலும் கூட ஜெபித்து எனது பாவங்களுக்காக நியாயந்தீர்க்கப்படும் நாளைச் சந்திக்கத் தயாரானேன். பரலோகத்திற்குச் செல்வதுதானே எனது குறிக்கோள்!

நான்கு ஐந்து வாரங்களாக சிகிச்சையின்றி படுக்கையில் இருந்த நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். அநே நேரத்தில் என் தந்தை சிறப்புக் கவனிப்புப் பிரிவில் (ICU – Incentive Care Unit) அனுமதிக்கப்பட்டார். ஒரு காலைப் பொழுதில் உறக்கத்தில் இருந்த என்னை உறவினர்கள் எழுப்பி, தந்தை மரித்தத் துயரச் செய்தியை அறிவித்தனர்.

இருதயம் செயலிழந்ததால் என் தந்தை மரித்தார் என்றுச் சொன்னார்கள். ஆனால், மருத்துவர்கள் எங்கள் இருவரின் நோயின் காரணத்தை அறியகூடாமற் போனது. நாங்கள் இருவரும் விஷமிடப்பட்டோம் அல்லது பில்லி சூனியத்திற்கு ஆளானோம் என்ற வதந்தியும் பரவியது. மாற்கு 16.17-18ல் வாக்கு அளித்தபடி

விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள். நவமான பாஷைகளைப் பேசுவார்கள்; சர்ப்பங்களை எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக்குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்றார்.

நான் இன்னும் உயிரோடு வாழ்கிறேன் என்று விசுவாசித்தேன். சில வருடங்களுக்குப் பிறகு நான் நரம்பு தளர்ச்சி(Nervous breakdown) நோய்க்கு ஆளானேன். மனவியல் மருத்துவர்கள் (Psychologists) கூட எனக்கு உதவ முடியவில்லை. மிக நெறுக்கமான சூழ்நிலையிலும் கூட உதவக் கூடிய தேவனை என் மனதில் நினைத்துக் கொண்டேன். தங்களை துன்பப்படுத்தி கொல்லப்பார்க்கும் எதிரிகளையும் மன்னித்து, மரிக்கும் நேரத்திலும் தேவனை துதிக்கும் படி, தன் விசுவாசிகளை தேவன் தயார்படுத்துகிறார். விஷம் அருந்தி ஒருவன் உயிருக்குப் போராடும் நிலையிலும் கூட தேவன் இரட்சிக்க வல்லவராயிருக்கிறார். தற்செயலாக என் மனைவி ரே ஜென்னிங்ஸ்(Ray Jennings) என்ற ஓர் அமெரிக்க சுவிசேஷகரின் ஜெபக் கூட்டத்திற்கு அழைத்துச் சென்றார். அங்குதான் நாங்கள் குடும்பமாக கிறிஸ்தவத்தை விசுவாசிக்கத் தொடங்கினோம். அந்த சுவிசேஷகர் என் மீது கரம் வைத்து சுகத்திற்காக ஜெபித்தார். தேவனின் வாக்குப்படியே, "விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: ...வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்" உடனடியாக எனக்குச் சுகம் கிடைத்தது.

நான் இன்று தேவனோடு வாழ்ந்துக்கொண்டு இருக்கிறேன். அவர் என்னோடு இருக்கிறார். இஸ்லாமியர்களே, பைபிளில் கூறப்பட்டுள்ள இயேசுவை விசுவாசிக்கத் தீர்மானித்தால், அவர் உங்களையும் வழிநடத்துவார் என்பதை நீங்கள் அறிய வேண்டுமென்று நான் விரும்புகிறேன்.

Source: http://www.answering-islam.org/Testimonies/chariah.html 

Sunday, February 1, 2009

வேகமாக வளர்ந்தால், அது உண்மையானதாக இருப்பதாக பொருளா?

 

More is Better?

மற்ற மார்க்கங்களை விட இஸ்லாம் தான் உண்மையானது மற்றும் சிறப்பானது என்பதை நிருபிப்பதற்காக இஸ்லாமியர்கள் சொல்லும் ஒரு "ஆதாரம்" இது தான், அதாவது "உலகின் பல பாகங்களில் இஸ்லாம் மிகவும் வேகமாக வளருகிற மதமாக இருக்கிறது". இந்த வாதம் கீழ் கண்ட விதமாக அமைந்துள்ளது.

வாதம்:

மற்ற எல்லா மதங்களை விட இஸ்லாம் தான் உண்மையானது

இதற்கு ஆதாரம்:

இஸ்லாம் தான் மிகவும் வேகமாக வளருகிற மதமாக உள்ளது

முடிவு/ஊக‌ம்:

வேகமாக வளருகிற மதம் தான் உண்மையான மதமாக இருக்கிறது

 ---

Claim:

Islam is superior to all other religions

Support:

Islam is the fastest growing religion

Warrant/ Assumption:

The fastest growing religion is the superior religion

இந்த‌ வாத‌த்தின் மூல‌ம் கிடைத்த "முடிவு" விவாத‌த்திற்கு உட்ப‌ட்ட‌து, ம‌ற்றும் இத‌ற்கு ச‌ரியான‌ சான்று த‌ர‌ப்ப‌ட‌வேண்டும். இந்த கேள்விக்கு இஸ்லாமியர்கள் பதில் சொல்லியாக வேண்டும், அதாவது:

"வேகமாக வளருகிற மதம் தான் மற்ற மதங்களை விட சிறந்தது/உண்மையானது என்று நீங்கள் எதை வைத்து நம்புகிறீர்கள்?

why do you believe that the fastest growing religion is the superior religion?
"

இக்கேள்விக்கான‌ ப‌தில் குழ‌ப்ப‌முள்ள‌தும், இதற்கு இன்னும் அனேக ஆதாரங்கள் தேவையாயும் உள்ளது. நான் இதுவரை எந்த முஸ்லீமிடமிருந்தும் இக்கேள்விக்கான சரியான பதிலை பெறவில்லை. இப்போதாவது, இக்கேள்விக்கான சரியான பதிலை இஸ்லாமியர்கள் சிந்தித்து தரும்படி அவர்களை கேட்டுக்கொள்கிறேன். முஸ்லீம்கள் பதிலை கொடுப்பதற்கு முன்பாக, இந்த வாதத்தில் உள்ள பிரச்சனைகளை நான் உங்களுக்கு முன்பாக வைக்க விரும்புகிறேன்.

1. மேற்கத்திய நாடுகளில் மெக்டொனால்ட்சஸ்(McDonalds) என்ற துரித உணவகம், மிகவும் வேகமாக வளருகிறது. பெரும்பான்மையாக ஒவ்வொரு சிறிய பட்டணத்திலும் இந்த மெக்டொனால்ட்ஸ் என்ற உணவகம் இருக்கும். உண்மையைச் சொல்லப்போனால், இந்த உணவகத்தின் உணவுகளில் அவ்வளவு அதிகமாக ருசி இருப்பதில்லை. இப்படி இருந்தும் இந்த மெக்டொனால்ட்ஸ் ஏன் இவ்வளவு வேகமாக வளருகிறது என்று அனேகருக்கு புரியாத புதிராகவே உள்ளது. மெக்டொனால்ஸ் அமோகமாக வளர்ந்துள்ளது, இதற்கு காரணங்கள் இவைகளாகும், உணவுகளின் விலை மிகவும் மலிவானது, வேகமாக பரிமாறப்படுகிறது, குழந்தைகள் விளையாடுவதற்கு தேவையான வசதிகள் அங்கு அதிகமாக இருக்கிறது, மற்றும் உணவுகள் அவ்வளவு ருசி குறைவாக இருந்தாலும், ஊட்டச்சத்துக்கள் குறைந்ததாக இருந்தாலும், "இவ்வுணவுகள் நமக்கு வேண்டாம் என்றுச் சொல்லும் அளவிற்கு மோசமாக இல்லை" என்பதாலும் இவ்வுணவகங்கள் வேகமாக வளருகிறது. ஆக, இதே போல உள்ள காரணங்கள் இஸ்லாமுக்கும் பொருந்தக்கூடியவைகளாக இருக்கும்.

2. வைரஸ்கள் என்றுச் சொல்லக்கூடிய நுண்ணுயிர்கள் ஒரு உயிரினத்தில்(உடலில்) நுழைந்த உடன் அவைகள் மிகவும் வேகமாக வளருகின்றன, மற்றும் அதிக வேதனையை உண்டாக்கி விடுகின்றன. விஷயம் இப்படி இருப்பதினால், மனிதனை விட வைரஸ்கள் சிறப்பானவைகள் என்று பொருள் கொள்ளமுடியுமா? வளரும் வேகத்தைக் கண்டு வேண்டுமானால் வைரஸ்கள் நம் உடலை விட சிறப்பானது என்றுச் சொல்லமுடியுமே தவிர, வைரஸ்கள் நம்மைக் காட்டிலும் அறிவிலும், சிந்திக்கும் ஆற்றலிலும், ஆன்மீகத் தன்மையிலும் சிறப்பானது என்றுச் சொல்லமுடியுமா? சொல்லமுடியாது என்பது தான் உண்மை. இன்னும் சில வைரஸ்கள் ஒரு குறிப்பிட்ட வகையான உயிரினங்களில் இன்னும் அதிகமாக வளருகிறது என்பதை நாம் அறிவோம்.

3. மேற்கத்திய நாடுகளின் கலாச்சாரமும், முதலாளித்துவமும்(Western culture and Capitalism) இஸ்லாமிய நாடுகளில் அதிகமான வேகத்தில் வளர்ந்து வருகிறது. அப்படியானால், இஸ்லாமிய கலாச்சாரத்தை விட மேற்கத்திய கலாச்சாரம் மிகவும் சிறந்தது/உயர்ந்தது என்றுச் சொல்லமுடியுமா? மேற்கத்திய தொலைக்காட்சி சானல்கள், தொழில் நுட்பங்கள், இசை, திரைப்படங்கள் போன்றவைகள் இஸ்லாமிய நாடுகளில் தங்கள் பாதத்தை பதித்து, வேகமாக வளர்ந்து வருகின்றன. இஸ்லாமிய கலாச்சாரம் மேற்கத்திய கலாச்சாரத்தால் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துவருகிறது. இஸ்லாமியர்கள் சொல்லும் வாதங்களின் அடிப்படையில், "மேற்கத்திய கலாச்சாரம் மற்றும் முதலாளித்துவம் போன்றவைகள், அல்லாஹ்வினால் உண்டாக்கப்பட்ட இஸ்லாமிய கலாச்சாரத்தை விட சிறந்தது/மேன்மையாது என்று கண்டிப்பாக‌ச் சொல்லலாம்".

இப்படிப்பட்ட கணக்கிலடங்கா உதாரணங்களை என்னால் தரமுடியும். வேகமாக வளருவது தான் மற்றவைகளை விட மேன்மையானதாக/உண்மையானதாக இருக்கும் என்ற வாதம் எவ்வளவு மடமையாக உள்ளது என்பதை இதன் மூலம் அறியலாம்.

இஸ்லாம் இங்கும் அங்குமாக‌ வ‌ள‌ர‌லாம், இஸ்லாமைப்போல‌ மெக்டொனால்ஸ்ஸும் வ‌ள‌ருகிற‌தே, அவ்வ‌ள‌வு ஏன், எயிட்ஸ் என்ற‌ வியாதி கூட‌ வேக‌மாக‌ ப‌ர‌வுகிற‌தே! இஸ்லாம், மெக்டொனால்ஸ், ம‌ற்றும் எயிட்ஸ் என்னும் உயிர்க் கொள்ளி நோய், இவைக‌ள் அனைத்தும் வேக‌மாக‌ வ‌ள‌ருகிற‌து என்ப‌தால், ம‌ற்ற‌வைக‌ளை விடை இவைக‌ள் சிற‌ந்த‌து என்றுச் சொல்ல‌முடியுமா? ஒரு மார்க்க‌ம் உண்மையான‌தாக‌ இருக்கிற‌து என்ப‌த‌ற்கு, "வேக‌மாக‌ வ‌ள‌ருவ‌து" ஒரு ஆதார‌மாக‌ இருக்க‌முடியுமா?

****

இப்போது நீங்கள் என் மீது குறைகூறுவீர்கள், இப்படி ஒப்பிட்டுப் பார்ப்பது, ஆப்பிளையும், ஆரஞ்சுப் பழத்தையும் ஒப்பிடுவதற்கு சமம் என்றுச் சொல்வீர்கள். மதம் சம்மந்தப்பட்ட விஷயங்களில் மக்களின் வளர்ச்சி விகிதம் மற்ற மதங்களை விட இம்மதம் சிறந்தது என்பதை காட்டும் அளவுகோளா?

கடந்த 10 ஆண்டுகளில், அமெரிக்காவில் இஸ்லாமின் வளர்ச்சியை விட‌ மற்ற மதங்கள் அதிகமான வளர்ச்சி அடைந்துள்ளன. 1991 லிருந்து 2001 வரையுள்ள 10 ஆண்டுகளில்( World Almanacன் படி) அமெரிக்காவில் 6 மில்லியன் முஸ்லீம்கள் இருந்திருக்கிறார்கள். இந்த 10 ஆண்டுகளில், யோகோவா விட்னஸ் என்ற மதத்தவர்கள் 26% வளர்ச்சி அடைந்துள்ளார்கள். யூனிடேரியன் என்பவர்கள் 20% வளர்ச்சி அடைந்துள்ளார்கள், மர்மோன்ஸ் என்ற பிரிவினர் 18% வளர்ச்சியடைந்துள்ளார்கள். இஸ்லாமியர்களின் வாதத்தின் படி, அமெரிக்காவில் இஸ்லாமை விட யேகோவா விட்னஸ், யூனிடேரியன் மற்றும் மர்மன்கள் வேகமாக வளர்ந்துள்ளார்கள், இதன் படி பார்த்தால், இஸ்லாமை விட இந்த மார்கங்கள் தான் உண்மையான மார்க்கங்கள் என்று உலக இஸ்லாமியர்கள் நம்மை நம்பச் செய்கிறார்கள், அப்படித்தானே! இப்போது இஸ்லாமியர்கள் World Almanac என்ற நிறுவனம் நடத்திய கணக்கெடுப்பை நாங்கள் நம்பமாட்டோம், ஏனென்றால், இந்த நிறுவனம் சியோன்காரர்களால் நடத்தப்படுகிறது என்று பதில் சொல்வார்கள். எந்த கணக்கெடுப்பும் புள்ளிவிவரங்களும் இஸ்லாமியர்களின் வாதத்திற்கு எதிராக இருக்குமானால், உடனே "கிறிஸ்தவர்கள் யுதர்களின் இரகசிய சூழ்ச்சி இது(Christian-Zionist Conspiracy Theory)" என்று சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள் இஸ்லாமியர்கள், சரி தானே!

Source: www.answering-islam.org/Assumptions/moreisbetter.htm

Thursday, January 29, 2009

புதுவிதமான யானைக் கதை



 

நண்பர் உமர் அவர்கள் இந்த கட்டுரை எழுதக்காரணமாக இருந்தது ஏகத்துவம் என்ற இணையத்தில் வந்த கட்டுரையாகும்.அதை அறிந்துகொள்ள http://www.tamilchristians.com/modules.php?name=Forums&file=viewtopic&p=27916#27916 
 
 
 
உமர் அவர்களில் பதில் கட்டுரை
 
என்னுடைய இந்த பதிவு, பல கட்டுரைகளை படித்து சேகரிக்கப்பட்ட விவரங்களாகும். இங்கு முன் வைக்கப்படும் தொடுப்புக்களுக்குச் சென்று மேலும் விவரங்களை தெரிந்துக் கொள்ளும் படி கேட்டுக் கொள்கிறேன்.

1. குர்‍ஆன் 105ம் அதிகாரம் "யானை".

 
Quote:
(நபியே!) யானை(ப் படை)க் காரர்களை உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா? (105:1) அவர்களுடைய சூழ்ச்சியை அவன் பாழாக்கி விடவில்லையா? (105:2) மேலும், அவர்கள் மீது பறவைகளைக் கூட்டங் கூட்டமாக அவன் அனுப்பினான். (105:3) சுடப்பட்ட சிறு கற்களை அவர்கள் மீது அவை எறிந்தன. (105:4) அதனால், அவர்களை மென்று தின்னப்பட்ட வைக்கோலைப் போல் அவன் ஆக்கி விட்டான். (105:5).


சிறு குறிப்பு: யெமன் என்ற நாட்டில் (எத்தியோப்பியா) ஒரு பெரிய சர்ச் அதாவது கிறிஸ்தவ சபையை ஒரு அரசன் அப்ரஹா கட்டினானாம், எல்லாரும் அவ்விடம் வந்து தொழுதுக் கொள்ள கட்டாயப்படுத்தினானாம், இன்னும் அனேக செயல்களைச் செய்தானாம். மக்காவிலிருந்து ஒரு மனிதன், அந்த சர்சை அசுசிப்படுத்தி, கெடுத்துவிட்டானாம், அதற்காக காபாவை அழிப்பதற்காக, யெமன் என்ற நாட்டிலிருந்து, அப்ரஹா என்பவர் பல யானைகளோடு, 60,000 ஆயிரம் இராணுவத்தோடு மக்காவிற்கு வந்தாராம், அப்போது காபாவை காப்பாற்ற அல்லாஹ், பறவைகளை அனுப்பி, சூடான கற்களை அவர்கள் மீது எரிந்து கொன்றாராம்.(http://www.al-islam.org/lifeprophet/4.htm)




2. கிறிஸ்தவர் கேட்டார் என்று முன்வைக்கப்பட்ட கேள்வி:

 
Quote:
கேள்வி: 1400 ஆண்டுகளுக்கு முன்பு அரேபியாவில் யானைகள் ஏதும் இல்லை என்று கிறிஸ்தவர்கள் கூறுகிறார்கள். எத்தியோபாவிலும் கூட யானைகள் ஏதும் இல்லை என்று கூறுகிறார்கள். இப்படியிருக்கும் நிலையில் அவர் கூற முயற்சிப்பது 'அலம் தர கைஃப பஅல ரப்புக பி அஸ்ஹாபில் ஃபீல்' என்ற குர்ஆன் வசனத்தை பொய் என்று கூற முயல்கிறார். ஏன் என்றால் அந்த நாட்களில் யானை இருந்தது என்று கூறுவதற்கு ஆதாரம் இல்லை என்று கூறுகிறார்.


இந்த கேள்வியை சிறிது மாற்றி கேட்டு இருக்கவேண்டும். யானைகள் அக்காலத்தில் உலகில் எங்கும் இல்லை என்பது சரியாகாது, இந்நாடுகளில் (எத்தியோப்பியாவில்) மனிதர்கள் யானைகளை பயன்படுத்தினார்களா? அல்லது குறைந்த பட்சம் போரிலாவது பயன்படுத்தினார்களா? என்று கேட்டு இருக்கவேண்டும்.


3. முஹம்மதுவின் காலத்தில் எத்தியோப்பியாவில் யானைகளை போரில் பயன்படுத்தினார்களா?


யானைகள் ஆப்ரிக்காவில் இருந்திருக்கும், ஆனால் மனிதன் தன் தேவைக்கு பயன்படுத்தினானா? என்பது தான் கேள்வி?

முஹம்மதுவின் காலத்தில் எத்தியோப்பியாவில்(ஆப்ரிக்காவில்) யானைகளை மனிதன் பயிற்சி கொடுத்து பயன்படுத்தவில்லை என்று எத்தியோப்பிய பல்கலைக் கழக பேராசியர்கள் கூறியுள்ளார்கள்.



 
Quote:
The Problem

There is only one problem. Elephants in Africa, including Ethiopia, were never domesticated and used by humans. By "Never", I mean throughout history. I came to know this fact through talking with three Ethiopian university professors. True, elephants were and still are domesticated and used for labor in Southeast Asia, but never in Africa.

Source: http://www.islam-watch.org/Kammuna/Quran-Sura-Alfeel-A-Myth.htm



4. குர்‍ஆன் சொல்வது போல, யானைகளோடு அப்ரஹா மன்னார் வந்ததாக நினைத்தாலும் கீழ் கண்ட பிரச்சனைகள் புதிதாக உருவாகின்றன.

4.1 யெமன் நாட்டிலிருந்து மெக்காவிற்கு இடையே உள்ள தூரம் : 500 மைல்கள்


குர்‍ஆன் சொல்வது போல, யானைகளோடு அப்ரஹா அரசர் வந்தார் என்ற விவரம் மற்றும் அல்லா பறவைகள் மூலமாக அவர்களை விரட்டியடித்தார் என்பதை ஏற்றுக்கொண்டால், பல பிரச்சனைகள் வருகின்றன. யெமன் நாட்டிலிருந்து மெக்காவிற்கு நேர்க்கோட்டில் தூரத்தை கணக்கெடுத்தால் 500 மைல்கள் இருக்கின்றன, அதாவது, 800 கிலோமீட்டர் தூரம் உள்ளது. காடு மலைகள், போன்றவற்றிலும் நடந்து நேரடியாக வந்தால் தான் இவ்வளவு தூரம் இருக்கும், ஆனால், தடைகளை சுற்றி வரவேண்டுமானால் இன்னும் தூரம் அதிகமாகும்.



Miles: 507.97
Kilometers: 817.47
Source: http://www.mapcrow.info/Distance_between_Sanaa_YM_and_Mecca_SA.html



இதனை கவனத்தில் கொண்டு அடுத்த விவரத்தை படிக்கவும்.

4.2 எத்தனை யானைகளோடு, இராணுவத்தோடு மெக்காவிற்கு வந்தார்?


அப்ரஹா மன்னர் 9 அல்லது 13 யானைகளோடும், 60,000
இராணுவத்தோடும் மக்காவிற்கு வந்தாராம்.


 
Quote:
So, in 570 or 571 A. D., he took 60,000 troops and 13 elephants (according to another tradition, 9 elephants) and set off for Makkah.

Source : Syed Maududi's Commentary for Surah #105

http://www.islamicity.com/Mosque/QURAN/maududi/mau105.html


இந்த விவரத்தையும், கவனத்தில் கொண்டு அடுத்த விவரத்தை படிக்கவும்.


4.3 யானைகளின் தேவைகளாகிய உணவு, தண்ணீர், பயணிக்கும் தன்மைகள் பற்றிய குறிப்பு:


இப்போது யானைகள் பற்றிய விவரங்களை கவனிப்போம்.


ஒரு ஆரோக்கியமான யானை தினமும்:


189 லிட்டர் (50 gallons) தண்ணீர் குடிக்கும். (http://www.jstor.org/pss/294124 )


• உணவு கிடைக்காத பட்சத்தில், உணவிற்காக ஒரு நாளுக்கு 50 மைல்கள் ஒரு யானை பயணிக்குமாம். (http://www.sandiegozoo.org/wordpress/default/how-far-do-elephants-walk-in-one-day/)


• 300 லிருந்து 350 Pound(159 Kilograms) அளவுள்ள உணவை ஒரு யானை ஒரு நாளுக்கு உண்ணுமாம்.( http://www.jstor.org/pss/294124)


• யானைகள் ஒரு நாளில் 16 மணி நேரம் சாப்பிடுவதற்கு செலவிடுமாம்.( http://en.wikipedia.org/wiki/Elephant)

யானைகளின் உடலில் வியர்வை சுரப்பிகள் இருப்பதில்லை, எனவே, தங்கள் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க, அவைகள் சேறு மற்றும் தண்ணீர் உள்ள இடங்களில் அதிக நேரம் செலவழித்து, சேற்றை வாறி தங்கள் உடல்களில் போட்டுக் கொள்கின்றன.





4.4 யெமனிலிருந்து மெக்காவிற்கு வர ஒரு யானையின் தேவை:


யெமனிலிருந்து மெக்காவிற்கு நேர்க்கோட்டிலேயே பயணம் செய்ததாக நாம் கற்பனை செய்துக் கொண்டாலும், 500 மைல்கள் கடக்கவேண்டும், அப்படியானால்:


ஒரு நாளுக்கு 50 மைல்கள் ஒரு யானை பயணித்தால், 500 மைல்களை
கடக்க 10 நாட்கள் ஆகும். அதாவது :


தண்ணீர்: 189* 10 = 1890 லிட்டர் தேவை

உணவு: 159 * 10 = 1590 பவுண்ட்கள் தேவை


[16 மணி நேரம் உணவிற்காக மட்டும் யானை செல்வழித்தால், இவ்வளவு
தூரம் (50 Miles) செல்லமுடியாது, அதே நேரத்தில் தன்னை குளிர்ச்சியாக்கிக் கொள்ள பாலைவனத்தில் யானைக்கு வசதி இருக்காது. இதனால், தொடர்ந்து போகமுடியாமல், 500 மைல்கள் கடக்க 10 நாட்கள் அல்ல அதற்கும் அதிகமாகவே தேவைப்படும். அதுவும் விமானம் போல, நேர்க்கோட்டில் பயணித்தால் தான், மேடு பள்ளங்களை சுற்றிச் செல்லவேண்டுமானால், பாலைவன மணலில் செல்லவேண்டுமானால், இன்னும் கால தாமதம் ஆகும். அந்த அரசனோடு வந்த இராணுவனும் யானைகளைப் போல வேகமாக ஒரு நாளுக்கு 50 மைல்கள் நடக்கமுடியாது]


ஒரு யானைக்கே இவ்வளவு தண்ணீர், உணவுகள்(இலைகள் etc..) தேவைப்படுமானால்,

9 or 13 யானைகளுக்கு எவ்வளவு தேவைப்படும்? ஒரு பேச்சுக்கு 10 யானைகள் என்றே வைத்துக் கொண்டாலும்,

தண்ணீர் : 1890 * 10 = 18, 900 லிட்டர் தேவை

உணவு: 1590 * 10 = 15, 900 பவுண்ட்கள் தேவை



இவ்வளவு உணவுப்பொருட்களை வைத்துக் கொண்டு போருக்கு வரமுடியுமா? இது சாத்தியமா? வாசகர்கள் சிந்திக்கட்டும்.





4.5 60,000 இராணுவத்தோடு வந்தாராம்:

யானைகள் மட்டுமல்ல, 60, 000 (அறுபது ஆயிரம்) இராணுவத்தோடு வந்தாராம்? இத்தனை பேருக்கு உணவு எப்படி பாலை வனத்தில் கிடைக்கும், இவர்களுக்கு தண்ணீர் எப்படி கிடைக்கும்? மட்டுமல்ல், பாலைவன வெயிலில் யானைகளானாலும் சரி, மனிதர்களானாலும் சரி, தினமும் அதே வேகத்தில் நடக்கமுடியாது?


இவைகள் தான் குர்‍ஆன் 105ம் அதிகாரத்தில் சொல்லப்பட்ட விவரங்களின் சாத்தியக் கூறுகள்.



4.6 யானைகளைக் கொண்டு நடத்தப்பட்ட போர்களின் பட்டியல்:

• ….
• ….
• 190 BC, Battle of Magnesia
• 167 BC-160 BC, Revolt of the Maccabees
• 164 BC, Battle of Beth-zur
• 153 BC, Roman siege of Numantia (Spain)
• 149 BC-146 BC, Siege of Carthage
• 108 BC, Battle of Muthul
• 46 BC, Battle of Thapsus
• AD 451, Battle of Vartanantz
• 636, Battle of al-Qādisiyyah
• 738, Battle of Rajasthan
• 1214, capture of Cremona by Frederick II, Holy Roman Emperor
• 1659, Battle of Khajwa
• 1526, First Battle of Panipat
• 1556, Second Battle of Panipat
• 1761, Third Battle of Panipat


Source : http://en.wikipedia.org/wiki/List_of_battles_involving_war_elephants




இந்த மேலே உள்ள பட்டியலில், கி.பி. 570 நடந்த யானைப்போர் தென்படுகிறதா பாருங்கள். அடுத்த முறை, கண்டிப்பாக குர்‍ஆன் 105ம் அதிகாரத்தின் யானைப்போரும் கட்டாயமாக சேர்த்துவிடுவார்கள்.

எத்தியோப்பியா அரசர் இருந்தது உண்மைத் தான், ஆனால், யானைகளோடு வந்தாரா? என்பது தான் இப்போது சந்தேகம். மேலே உள்ள அனேக பிரச்சனைகள் விடையளிக்கப்பட்டால் தான் சந்தேகங்கள் தீரும்.

இங்கு ஒரு விவரம் குறிப்பிடவேண்டும், அல்லா 360 விக்கிரகங்கள் உள்ள காபாவை, குரைஷி மக்களுக்காக ஏன் காப்பற்றவேண்டும்? அதுவும் வேதம் அளிக்கபப்ட்டவர்களை (கிறிஸ்தவர்களை) அழித்து, விக்கிரகங்களை வணங்கும் குரைஷிகளை காப்பாற்ற வேண்டிய‌ அவசியமென்ன? அப்ரஹா மன்னன் மக்காவை நெருங்கும் போது, காபாவை காப்பற்றும் படி, அல்லாவிடம் வேண்டிக் கொண்டார்களாம் மக்கா மனிதர்கள். மக்காவில் இருந்த அந்த 360 கற்களில் ஒரு கல் கண்டிப்பாக அல்லாவாக இருந்திருப்பார் இல்லையா?


அந்த ஆண்டில் தான் முஹம்மது(A.D 570) பிறந்தாராம், ஒரு சிலர் கூறுகிறார்கள், அந்த அரசன் போர் தொடுத்த ஆண்டு கி.பி. 552ம் ஆண்டு ஆகும். 552ம் ஆண்டு முஹம்மது பிறந்திருந்தால், தனக்கு 70 வயதான போது தான் அவர் ஆயிஷாவை(6 வயது சிறுமியை திருமணம்) செய்திருக்கவேண்டும், 50 வயதாகும் போதல்ல, இது இன்னும் பெரிய சிக்கலை உண்டாக்குகிறாது (Prophet of Doom, Page 112, and 113)

இப்படி பல கேள்விகள் எழுகின்றன.


இது மட்டுமல்ல, இஸ்லாமியர்கள் குர்‍ஆனில் விஞ்ஞானத்தை கண்டுபிடிக்க மிகவும் அதிகமாக உழைக்கிறார்கள், அதனால், தான் இப்படியான எழுதுகிறார் ஒரு இஸ்லாமிய அறிஞர்:


 
Quote:

திருக்குர்ஆனின் இந்த 105வது அத்தியாயத்தில் அறிவியல் உண்மையும் உள்ளடங்கி இருக்கிறது என்பது தான் அந்த சான்று. அதாவது, அதிகமாக வெப்பம் ஏற்றப்பட்ட சிறிய ஆயுதங்கள் மூலம் மிகப் பெரிய சேதத்தை ஏற்படுத்த முடியும் என்பதற்கு இது முன்னோடியாக அமைந்துள்ளது. ஏனெனில் இந்நிகழ்ச்சியை வெறும் அற்புதமாக மட்டும் இறைவன் குறிப்பிடவில்லை. நீர் சிந்திக்கவில்லையா? என்றும் இந்த அத்தியாயத்தின் துவக்கத்தில் குறிப்பிடுவதால் மனிதன் சிந்தித்துப் பார்த்து இது போன்ற ஆயுதங்களைக் கண்டு பிடிக்க முடியும் என்ற கருத்தும் இதனுள் அடங்கியிருக்கிறது. (திருக்குர்ஆன் 105:5)





இதை எழுதியவர், நம் அருமை இஸ்லாமிய அறிஞர், பிஜே அவர்கள் தான், அவரது குர்‍ஆன் மொழிபெயர்ப்பில் இப்படி எழுதியுள்ளார்.

இந்த யானை விவரம் பற்றி இப்போதைக்கு இவ்வளவு விவரங்கள் தான்.

ஆக, யானைகளை எத்தியோப்பியாவில் போரில் அக்காலத்தில் பயன்படுத்தினார்களா என்பதை முதலில் விளக்கப்படவேண்டும், இரண்டாவது, அப்படி பயன்படுத்தினாலும், அவ்வளவு தூரம், அத்தனை பேர்களோடு பாலைவனத்தில் வருவது என்பது முடியாத காரியம். அப்படி வந்தார்கள் என்றுச் சொன்னால், எப்படி வந்தார்கள், மற்றும் மேலே நாம் கண்ட கேள்விகளுக்கு பதில்கள் தரப்படவேண்டும்.

References:
http://www.answering-islam.org/Responses/Saifullah/rahman_av.htm#elephants
http://www.elephant.se/elephant_foot_and_nail_problems.php
http://www.jstor.org/pss/294124
http://www.sandiegozoo.org/wordpress/default/how-far-do-elephants-walk-in-one-day/
http://en.wikipedia.org/wiki/Elephant
http://www.onlinepj.com/vilakkam/vilakkam8.htm
http://www.mapcrow.info/Distance_between_Sanaa_YM_and_Mecca_SA.html
http://en.wikipedia.org/wiki/List_of_battles_involving_war_elephants

இத்தொடுப்புக்களில் சென்று படிக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்.