Sunday, February 1, 2009

வேகமாக வளர்ந்தால், அது உண்மையானதாக இருப்பதாக பொருளா?

Posted on 9:55 PM by justdial

 

More is Better?

மற்ற மார்க்கங்களை விட இஸ்லாம் தான் உண்மையானது மற்றும் சிறப்பானது என்பதை நிருபிப்பதற்காக இஸ்லாமியர்கள் சொல்லும் ஒரு "ஆதாரம்" இது தான், அதாவது "உலகின் பல பாகங்களில் இஸ்லாம் மிகவும் வேகமாக வளருகிற மதமாக இருக்கிறது". இந்த வாதம் கீழ் கண்ட விதமாக அமைந்துள்ளது.

வாதம்:

மற்ற எல்லா மதங்களை விட இஸ்லாம் தான் உண்மையானது

இதற்கு ஆதாரம்:

இஸ்லாம் தான் மிகவும் வேகமாக வளருகிற மதமாக உள்ளது

முடிவு/ஊக‌ம்:

வேகமாக வளருகிற மதம் தான் உண்மையான மதமாக இருக்கிறது

 ---

Claim:

Islam is superior to all other religions

Support:

Islam is the fastest growing religion

Warrant/ Assumption:

The fastest growing religion is the superior religion

இந்த‌ வாத‌த்தின் மூல‌ம் கிடைத்த "முடிவு" விவாத‌த்திற்கு உட்ப‌ட்ட‌து, ம‌ற்றும் இத‌ற்கு ச‌ரியான‌ சான்று த‌ர‌ப்ப‌ட‌வேண்டும். இந்த கேள்விக்கு இஸ்லாமியர்கள் பதில் சொல்லியாக வேண்டும், அதாவது:

"வேகமாக வளருகிற மதம் தான் மற்ற மதங்களை விட சிறந்தது/உண்மையானது என்று நீங்கள் எதை வைத்து நம்புகிறீர்கள்?

why do you believe that the fastest growing religion is the superior religion?
"

இக்கேள்விக்கான‌ ப‌தில் குழ‌ப்ப‌முள்ள‌தும், இதற்கு இன்னும் அனேக ஆதாரங்கள் தேவையாயும் உள்ளது. நான் இதுவரை எந்த முஸ்லீமிடமிருந்தும் இக்கேள்விக்கான சரியான பதிலை பெறவில்லை. இப்போதாவது, இக்கேள்விக்கான சரியான பதிலை இஸ்லாமியர்கள் சிந்தித்து தரும்படி அவர்களை கேட்டுக்கொள்கிறேன். முஸ்லீம்கள் பதிலை கொடுப்பதற்கு முன்பாக, இந்த வாதத்தில் உள்ள பிரச்சனைகளை நான் உங்களுக்கு முன்பாக வைக்க விரும்புகிறேன்.

1. மேற்கத்திய நாடுகளில் மெக்டொனால்ட்சஸ்(McDonalds) என்ற துரித உணவகம், மிகவும் வேகமாக வளருகிறது. பெரும்பான்மையாக ஒவ்வொரு சிறிய பட்டணத்திலும் இந்த மெக்டொனால்ட்ஸ் என்ற உணவகம் இருக்கும். உண்மையைச் சொல்லப்போனால், இந்த உணவகத்தின் உணவுகளில் அவ்வளவு அதிகமாக ருசி இருப்பதில்லை. இப்படி இருந்தும் இந்த மெக்டொனால்ட்ஸ் ஏன் இவ்வளவு வேகமாக வளருகிறது என்று அனேகருக்கு புரியாத புதிராகவே உள்ளது. மெக்டொனால்ஸ் அமோகமாக வளர்ந்துள்ளது, இதற்கு காரணங்கள் இவைகளாகும், உணவுகளின் விலை மிகவும் மலிவானது, வேகமாக பரிமாறப்படுகிறது, குழந்தைகள் விளையாடுவதற்கு தேவையான வசதிகள் அங்கு அதிகமாக இருக்கிறது, மற்றும் உணவுகள் அவ்வளவு ருசி குறைவாக இருந்தாலும், ஊட்டச்சத்துக்கள் குறைந்ததாக இருந்தாலும், "இவ்வுணவுகள் நமக்கு வேண்டாம் என்றுச் சொல்லும் அளவிற்கு மோசமாக இல்லை" என்பதாலும் இவ்வுணவகங்கள் வேகமாக வளருகிறது. ஆக, இதே போல உள்ள காரணங்கள் இஸ்லாமுக்கும் பொருந்தக்கூடியவைகளாக இருக்கும்.

2. வைரஸ்கள் என்றுச் சொல்லக்கூடிய நுண்ணுயிர்கள் ஒரு உயிரினத்தில்(உடலில்) நுழைந்த உடன் அவைகள் மிகவும் வேகமாக வளருகின்றன, மற்றும் அதிக வேதனையை உண்டாக்கி விடுகின்றன. விஷயம் இப்படி இருப்பதினால், மனிதனை விட வைரஸ்கள் சிறப்பானவைகள் என்று பொருள் கொள்ளமுடியுமா? வளரும் வேகத்தைக் கண்டு வேண்டுமானால் வைரஸ்கள் நம் உடலை விட சிறப்பானது என்றுச் சொல்லமுடியுமே தவிர, வைரஸ்கள் நம்மைக் காட்டிலும் அறிவிலும், சிந்திக்கும் ஆற்றலிலும், ஆன்மீகத் தன்மையிலும் சிறப்பானது என்றுச் சொல்லமுடியுமா? சொல்லமுடியாது என்பது தான் உண்மை. இன்னும் சில வைரஸ்கள் ஒரு குறிப்பிட்ட வகையான உயிரினங்களில் இன்னும் அதிகமாக வளருகிறது என்பதை நாம் அறிவோம்.

3. மேற்கத்திய நாடுகளின் கலாச்சாரமும், முதலாளித்துவமும்(Western culture and Capitalism) இஸ்லாமிய நாடுகளில் அதிகமான வேகத்தில் வளர்ந்து வருகிறது. அப்படியானால், இஸ்லாமிய கலாச்சாரத்தை விட மேற்கத்திய கலாச்சாரம் மிகவும் சிறந்தது/உயர்ந்தது என்றுச் சொல்லமுடியுமா? மேற்கத்திய தொலைக்காட்சி சானல்கள், தொழில் நுட்பங்கள், இசை, திரைப்படங்கள் போன்றவைகள் இஸ்லாமிய நாடுகளில் தங்கள் பாதத்தை பதித்து, வேகமாக வளர்ந்து வருகின்றன. இஸ்லாமிய கலாச்சாரம் மேற்கத்திய கலாச்சாரத்தால் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துவருகிறது. இஸ்லாமியர்கள் சொல்லும் வாதங்களின் அடிப்படையில், "மேற்கத்திய கலாச்சாரம் மற்றும் முதலாளித்துவம் போன்றவைகள், அல்லாஹ்வினால் உண்டாக்கப்பட்ட இஸ்லாமிய கலாச்சாரத்தை விட சிறந்தது/மேன்மையாது என்று கண்டிப்பாக‌ச் சொல்லலாம்".

இப்படிப்பட்ட கணக்கிலடங்கா உதாரணங்களை என்னால் தரமுடியும். வேகமாக வளருவது தான் மற்றவைகளை விட மேன்மையானதாக/உண்மையானதாக இருக்கும் என்ற வாதம் எவ்வளவு மடமையாக உள்ளது என்பதை இதன் மூலம் அறியலாம்.

இஸ்லாம் இங்கும் அங்குமாக‌ வ‌ள‌ர‌லாம், இஸ்லாமைப்போல‌ மெக்டொனால்ஸ்ஸும் வ‌ள‌ருகிற‌தே, அவ்வ‌ள‌வு ஏன், எயிட்ஸ் என்ற‌ வியாதி கூட‌ வேக‌மாக‌ ப‌ர‌வுகிற‌தே! இஸ்லாம், மெக்டொனால்ஸ், ம‌ற்றும் எயிட்ஸ் என்னும் உயிர்க் கொள்ளி நோய், இவைக‌ள் அனைத்தும் வேக‌மாக‌ வ‌ள‌ருகிற‌து என்ப‌தால், ம‌ற்ற‌வைக‌ளை விடை இவைக‌ள் சிற‌ந்த‌து என்றுச் சொல்ல‌முடியுமா? ஒரு மார்க்க‌ம் உண்மையான‌தாக‌ இருக்கிற‌து என்ப‌த‌ற்கு, "வேக‌மாக‌ வ‌ள‌ருவ‌து" ஒரு ஆதார‌மாக‌ இருக்க‌முடியுமா?

****

இப்போது நீங்கள் என் மீது குறைகூறுவீர்கள், இப்படி ஒப்பிட்டுப் பார்ப்பது, ஆப்பிளையும், ஆரஞ்சுப் பழத்தையும் ஒப்பிடுவதற்கு சமம் என்றுச் சொல்வீர்கள். மதம் சம்மந்தப்பட்ட விஷயங்களில் மக்களின் வளர்ச்சி விகிதம் மற்ற மதங்களை விட இம்மதம் சிறந்தது என்பதை காட்டும் அளவுகோளா?

கடந்த 10 ஆண்டுகளில், அமெரிக்காவில் இஸ்லாமின் வளர்ச்சியை விட‌ மற்ற மதங்கள் அதிகமான வளர்ச்சி அடைந்துள்ளன. 1991 லிருந்து 2001 வரையுள்ள 10 ஆண்டுகளில்( World Almanacன் படி) அமெரிக்காவில் 6 மில்லியன் முஸ்லீம்கள் இருந்திருக்கிறார்கள். இந்த 10 ஆண்டுகளில், யோகோவா விட்னஸ் என்ற மதத்தவர்கள் 26% வளர்ச்சி அடைந்துள்ளார்கள். யூனிடேரியன் என்பவர்கள் 20% வளர்ச்சி அடைந்துள்ளார்கள், மர்மோன்ஸ் என்ற பிரிவினர் 18% வளர்ச்சியடைந்துள்ளார்கள். இஸ்லாமியர்களின் வாதத்தின் படி, அமெரிக்காவில் இஸ்லாமை விட யேகோவா விட்னஸ், யூனிடேரியன் மற்றும் மர்மன்கள் வேகமாக வளர்ந்துள்ளார்கள், இதன் படி பார்த்தால், இஸ்லாமை விட இந்த மார்கங்கள் தான் உண்மையான மார்க்கங்கள் என்று உலக இஸ்லாமியர்கள் நம்மை நம்பச் செய்கிறார்கள், அப்படித்தானே! இப்போது இஸ்லாமியர்கள் World Almanac என்ற நிறுவனம் நடத்திய கணக்கெடுப்பை நாங்கள் நம்பமாட்டோம், ஏனென்றால், இந்த நிறுவனம் சியோன்காரர்களால் நடத்தப்படுகிறது என்று பதில் சொல்வார்கள். எந்த கணக்கெடுப்பும் புள்ளிவிவரங்களும் இஸ்லாமியர்களின் வாதத்திற்கு எதிராக இருக்குமானால், உடனே "கிறிஸ்தவர்கள் யுதர்களின் இரகசிய சூழ்ச்சி இது(Christian-Zionist Conspiracy Theory)" என்று சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள் இஸ்லாமியர்கள், சரி தானே!

Source: www.answering-islam.org/Assumptions/moreisbetter.htm

1 Response to "வேகமாக வளர்ந்தால், அது உண்மையானதாக இருப்பதாக பொருளா?"

.
gravatar
Mohamed S. Nisardeen Says....

http://home-islam.blogspot.com/
அடுத்த சத்தியம் துளிர் விடுகிறது. உங்களது முயற்சிகளை சுட்டிக்காட்டியே அல்லாஹ் எம்மை எழுத்தத்தூண்டுகிறான். ஏகலைவனுக்கு துரோணர் போல. தங்களது மனைவி பிள்ளைகளும் நேர்வழி பெற்று மரணத்தின் பின்னர் சுவனத்தில் நுழைய இறைவனை மனமுருகி பிரார்த்திக்கிறேன். உங்களது எழுத்துகளை அவர்களுக்கு காட்டுவது ஒன்றே போதும் அவர்களின் தேடலுக்கான வாய்ப்பை அதிகரிக்கச்செய்யும் என கருதுகிறேன். நிராகரிப்பவர்களாக மரணிக்கலாம் அறியாதவர்களாக மரணிக்கக் கூடாது என்பதே முழு முஸ்லிம்களினதும் முயற்சியாகும். சகலப் புகழும் பிரபஞ்சத்தின்அதிபதிக்கே.