Wednesday, December 10, 2008

குராண் முரண்பாடுகள்-14

Posted on 9:44 AM by justdial


அவர்கள் இந்த குர்-ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள். குர்-ஆன் 4:82


கைத்தடி பாம்பாக மாறிய அற்புதம் பற்றிய விவரங்கள்


a) முதலில் அல்லா மோசேயுடன் பேசிய பிறகு, குர்‍ஆன் 20:17ம் வசனத்தின் படி, "உம்முடைய வலது கையில் இருப்பது என்ன? என்று கேட்கிறார்?" இந்த கேள்வி குர்‍ஆனில் மற்ற இரண்டு இடத்தில் இல்லை. இந்த கேள்வியை அல்லா கேட்டாரா இல்லையா? இது என் கைத்தடி, இதனால் எனக்கு அதிக நன்மைகள் நடக்கிறது என்று மோசே சொல்கிறார், இந்த விவரம் மற்ற இடங்களில் இல்லை. ஏன் இந்த முரண்பாடு? தான் பேசிய வசனங்களே அல்லாவிற்கு மறந்துவிட்டதா?

b) மோசே தன் கைத்தடியை கீழே எறியும் படி அல்லா சொல்கிறார், அதை எறிந்தவுடன் அது பாம்பாக மாறுகிறது. அந்த பாம்பை கண்டவுடன், மோசே பயந்துப்போய் திரும்பி பார்க்காமல் ஓடினார் என்று குர்‍ஆன் 27:10 மற்றும் 28:31 சொல்கிறது, ஆனால், மோசே பயப்பட்ட விவரம் குர்‍ஆன் 20ம் அதிகார விவரங்களில் இல்லை. ஏன் இந்த முரண்பாடு?

மோசே பயந்தாரா(27:10, 28:31) இல்லையா?(20ம் அதிகாரம்)?

c) மோசே பயப்பட்டு ஓடும் போது, அல்லா குர்‍ஆன் 27:10ல், "என் தூதர்கள் என்னிடத்தில் பயப்படமாட்டார்கள்" என்றும், அதே அல்லா மோசே பயப்படும் போது, குர்‍ஆன் 28:31ல், "இன்னும் அஞ்சாதீர்; நீர் அடைக்கலம் பெற்றவர்களில் உள்ளவர்" என்றுச் சொல்கிறார்.

இதில் எது உண்மை எது பொய்? ஏன் இந்த முரண்பாடு? குர்‍ஆனின் ஆசிரியர் அல்லா என்றால், அவருக்கு சர்வ ஞானமும் உள்ளது என்றுச் சொல்வீர்களானால் ஏன் இப்படி ஒரே நிகழ்ச்சியைப் பற்றி அவர் முரண்படுகிறார்?

d) அந்த பாம்பை நாம் மீண்டும் அதன் பழைய நிலைக்கே மாற்றுவோம் என்று அல்லா குர்‍ஆன் 20:21ல் சொல்கிறார். ஆனால், இதைப் பற்றி மற்ற இரண்டு இடங்களில் அவர் சொல்லவில்லை? ஏன் இந்த முரண்பாடு? உண்மையில், மோசே அந்த பாம்பை பிடித்தாரா இல்லையா? அது உடனே கைத்தடியாக மாறியதா? இல்லையா? அல்லது இப்படி பிடிக்காமல் மோசே விட்டுவிட்டாரா?

இப்படி முரண்பட்ட விவரங்களை ஒரு இறைவன் சொல்வாரா? அப்படி சொல்லப்பட்ட புத்தகம் எப்படி ஒரு வேதமாகும்? குர்‍ஆன் முஹம்மதுவின் கற்பனை என்பது சரியாகத் தான் உள்ளது.

e) இன்னும், குர்‍ஆன் 27:11ல் சம்மந்தமே இல்லாமல் அல்லா சில விவரங்களைச் சொல்கிறார். தீமை செய்பவர்கள் தங்கள் தீமையை உணர்ந்து நன்மையைச் செய்தால், நாம் மன்னிப்பவராக இருக்கிறோம் என்கிறார். படிக்கவும்: 27:11.

ஆயினும், தீங்கிழைத்தவரைத் தவிர அ(த்தகைய)வரும் (தாம் செய்த) தீமையை (உணர்ந்து அதை) நன்மையானதாக மாற்றிக் கொண்டால், நிச்சயமாக நான் மிக மன்னிப்பவனாகவும், மிக்க கிருபையுடையவனாகவும் இருக்கின்றேன்.(27:11)

இந்த விவரம் இந்த நேரத்தில் சரியானதா என்பதே ஒரு கேள்வியாக இருந்தாலும், இதே விவரத்தை அல்லா மற்ற இரண்டு இடங்களில் சொல்லவில்லை? ஏன் இப்படி அல்லா ஒரே நிகழ்ச்சியைப் பற்றி இப்படி முரண்படுகிறார்? இனியாவது இஸ்லாமியர்கள் சிந்திக்க ஆரம்பிப்பார்களா? முக்கியமாக ஏகத்துவ தள சகோதரர்கள்.

Source: http://www.geocities.com/isa_koran/tamilpages/Rebuttals/egaththuvam/Quran_Version1.html

No Response to "குராண் முரண்பாடுகள்-14"