Monday, November 10, 2008

குரான் முரண்பாடுகள்-4

Posted on 8:52 PM by justdial

மரியாள் தங்கிக் கொள்ளும் அறைக்கு ஜகரிய்யா அவர்கள் செல்லும் போதெல்லாம் மரியாளிடம் இருக்கும் உணவு வகைகளை கண்டு 'மர்யமே! இது உனக்கு எங்கிருந்து கிடைத்தது? என்று கேட்கிறார்கள். அதற்கு மரியாள் இது இறைவன் கொடுக்கிறான். அவன் தான் நாடுவோருக்கு கணக்கின்றி வழங்குவான் என்கிறார்கள். (அல் குர்ஆன் 3:38)
 

இந்த அற்புதம் குர்-ஆனில் உள்ளதே தவிர, பைபிளில் இல்லை. இறைவன் உணவை அற்புதமாக கொடுத்தார் என்று குர்-ஆன் சொல்கிறதே தவிர, ஏன் இந்த அற்புதம் அவசியம் என்றுச் அல்லா சொல்லவில்லை.


1. ஏன் மரியாளுக்கு உணவு இறைவன் அற்புதமாக கொடுக்கவேண்டும்?
2. காரணமில்லாமல் தேவன் எப்போதும் ஒரு அற்புதத்தையும் செய்யமாட்டார் !
3. ஜகரியா அவர்களுக்கு உணவுப்பஞ்சம் இருந்ததா ?
4. இப்படி அற்புதம் நடந்து இருந்தால், இச்செய்தி ஊரெல்லாம் பரவியிருக்கும், மரியாள் மிகவும் புகழ்பெற்ற பெண்மணியாக மாறியிருப்பார்கள்.
5. இதனால், இயேசுவின் அற்புதப்பிறப்பில் எந்தவித சிக்கலும் இருந்திருக்காது.
6. மக்கள் மரியாளை குர்-ஆன் சொல்கிறபடி சந்தேகப்பட்டு இருக்கமாட்டார்கள்.
7. குர்-ஆன் சொல்வது போல இயேசுவை பெற்றெடுக்க மரியாள் அதிகமாக கஷ்டப்பட்டு இருக்கமாட்டார்கள்.


எனவே, குர்-ஆனில் சொல்வது முகமதுவின் கற்பனை என்பது தெளிவாகப்புரியும்.

இப்படி மரியாளுக்கு அற்புதவிதமாக உணவு அளிக்கப்பட்டிருந்தால், இயேசுவின் சீடர்கள் அவைகளை எழுதாமல் இருந்திருக்கமாட்டார்கள். இயேசுவின் சீடர்கள் செய்த அற்புதங்களை நாம் அப்போஸ்தலர் நடபடிகளில் (புதிய ஏற்பாட்டின் 5வது புத்தகம்) காணலாம். எனவே மரியாளுக்கு ஜகரியாவின் வீட்டில் நடந்த அற்புதங்கள் என்பது, வெறும் கற்பனையே தவிர வேறுயில்லை.

(குறிப்பு: குர்-ஆன் கற்பனையே என்றுச் சொன்னதினால், இஸ்லாமிய நண்பர்கள் கோபப்படவேண்டாம். எப்படி இஸ்லாமியர்கள் பைபிளில் சொல்லப்பட்டது கற்பனை என்றுச் சொல்லி அவர்கள் நம்பிக்கையை முன்வைக்கின்றனரோ, அதே போல் கிறிஸ்தவர்களுக்கும், தங்கள் நம்பிக்கையை (குர்-ஆன் கற்பனை என்றும், முரண்பாடுகள் உள்ளதென்றும் என்றுச் சொல்லி) முன்வைப்பதற்கும் உரிமையுண்டு என்பதை பகுத்தறிவு உள்ளவர்கள் யாராக இருந்தாலும் ஏற்றுக்கொள்வார்கள்.)

No Response to "குரான் முரண்பாடுகள்-4"