Thursday, December 11, 2008
குராண் முரண்பாடுகள்-16
அவர்கள் இந்த குர்-ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள். குர்-ஆன் 4:82
ஒருவனை கொன்ற விவரம் பற்றி மோசேயின் பயம்:
இஸ்லாமியர்களுக்கு கேள்விகள்: கடைசியாக, தனக்கு இரண்டு அத்தாட்சிகளை அல்லாஹ் காட்டிவிட்ட பிறகு குர்ஆன் 28:33ல், மோசே "தான் ஒரு எகிப்து நபரை கொன்றுவிட்டதாகவும், அதற்காக என்னை கொலை செய்துவிடுவார்கள் எனவும் நான் பயப்படுகிறேன்" என்று கூறுகிறார். ஆனால், இந்த விவரம் குர்ஆனில் மற்ற இரண்டு இடங்களில் இல்லை. இது ஏன்? "மோசே தான் பயப்படுகிறேன்" என்றுச் சொன்னது உண்மையா இல்லையா? மற்றும் அப்படி சொல்லியிருந்தால் மற்ற இரண்டு இடங்களில் ஏன் அல்லா அதனைச் சொல்லவில்லை?
முடிவுரை: "மோசேயும் மற்றும் எரியும் புதரும்" என்ற நிகழ்ச்சி பற்றி குர்ஆன் சொல்லும் விவரங்களில் உள்ள முரண்பாடுகளை, அல்லா விட்டுவிட்ட செய்திகளை நாம் இக்கட்டுரையில் கண்டோம். குர்ஆனில் இப்படி இன்னும் அனேக நிகழ்ச்சிகள் உண்டு. ஒரு முறை சொன்ன நிகழ்ச்சி போலவே அல்லா இரண்டாம் முறை சொல்லமாட்டார். இதை இஸ்லாமியர்கள் அறிந்துக்கொண்டே பைபிளின் மீது குற்றம் சுமத்த மிகவும் ஆவலாக உள்ளார்கள்.
சவுல் தமஸ்கு வழியில் இயேசுவை கண்ட விவரம் பற்றி அப்போஸ்தலர் நடபடிகளில் மூன்று இடங்களில் சொல்லப்பட்டுள்ளது. அப்படி சொல்லப்பட்ட விவரங்களில் ஒரு இடத்தில் சொல்லப்பட்ட விவரங்களில் சிலவற்றை விட்டுவிட்டு, இடம் பொருள் ஏவலை அறிந்து தேவையான விவரத்தை மற்ற இடங்களில் சொல்லப்பட்டுள்ளது. அதனை இஸ்லாமியர்கள் (முக்கியமாக ஏகத்துவம் தள சகோதரர்கள்) பைபிளில் முரண்பாடு உள்ளது, ஒரு நிகழ்ச்சியை மூன்று விதமாக ஏன் சொல்லவேண்டும், பார்த்தீர்களா பைபிளின் நிலை என்று எழுதினார்கள், அதற்கு நான் பதிலை எழுதியுள்ளேன்(படிக்கவும்: ஏகத்துவத்திற்கு பதில்: சவுலும் தமஸ்கு சாலை சந்திப்பின் விளக்கமும் (முஹம்மதுவும் "குர்ஆன் வெளிப்பாடு" வந்த விதங்களும்).
அதே ஏகத்துவம் தள சகோதரர்கள் தங்கள் குர்ஆனில், அதுவும் ஒரே ஆசிரியர், சர்வ ஞானம் உள்ளவர், அறிவாளி என்று போற்றப்படும் அல்லாவின் குர்ஆனில் ஒரே நிகழ்ச்சியை வித்தியாசமாக, சில விவரங்களை சொல்லியும், சில விவரங்களை விட்டுவிட்டும் சொல்லியுள்ளார். இதற்கு இவர்கள் என்ன பதிலைச் சொல்லப்போகிறார்கள். பைபிளுக்கு நியமிக்கும் அதே நிபந்தனைகளை உங்கள் குர்ஆனுக்கு இட்டால், குர்ஆனால் தாங்க முடியாது என்பதை இஸ்லாமியர்கள் இன்னும் அறியவில்லை.
நான் இஸ்லாமியர்களுக்கு சொல்லிக்கொள்வது, முதலாவது குர்ஆனை படியுங்கள்(உங்களுக்கு புரியும் மொழியில்), புரிந்துக்கொள்ளுங்கள்(உங்களால் முடிந்தால்) பிறகு மற்ற வேதங்களில் கையை வையுங்கள். நான் கொடுத்த பதிலைப் போல, "இடம் பொருள் ஏவலை கருத்தில் கொண்டு சுருக்கியோ விரிவாக்கியோ சரித்திர ஆசிரியர்கள் அல்லது புதிய ஏற்பாட்டு எழுத்தாளர்கள் எழுதினார்கள்" என்ற காரணத்தை இக்கட்டுரைக்கு பதில் சொல்லும் (சொல்ல முயற்சி எடுக்கும்) இஸ்லாமியர்கள் சொல்லமாட்டர்கள் என்று நம்புகிறேன்.
இந்த கேள்விகளுக்கு நான் சொன்ன பதிலையே கொஞ்சம் மாற்றிச் சொல்வீர்களானால், இதிலிருந்து விளங்கும் உண்மை என்னவென்றால், "இஸ்லாமியர்கள் தங்களுக்கு என்று ஒரு வண்ணம் மற்றவர்களுக்கு ஒரு வண்ணம் (பச்சோந்தித் தனமாக) நடந்துக்கொள்கிறார்கள்" எனபது தான். அதாவது அவர்கள் குர்ஆனுக்கு ஒரு நிபந்தனையைப் போடுவார்கள், மற்றவர்களுக்கு வேறு ஒரு நிபந்தனை போடுவார்கள், அவர்கள் உடைத்தால், அது மண்பாண்டம், மற்றவர்கள் உடைத்தால் ஒது பொற்பாண்டம். இயேசு சொன்ன சில வசனங்கள் எனக்கு நியாபகத்திற்கு வருகிறது:
குருடரான வழிகாட்டிகளே, கொசுயில்லாதபடி வடிகட்டி, ஒட்டகத்தை விழுங்குகிறவர்களாயிருக்கிறீர்கள்(மத்தேயு 23:24)
இதோ, உன் கண்ணில் உத்திரம் இருக்கையில் உன் சகோதரனை நோக்கி: நான் உன் கண்ணிலிருக்கும் துரும்பை எடுத்துப்போடட்டும் என்று நீ சொல்வதெப்படி? (மத்தேயு 7:4)
அடுத்த முறை இதே தொடர் கட்டுரையின் அடுத்த பாகத்தில் சந்திக்கலாம் - சத்தியத்தை அறிய முயற்சி எடுங்கள், அந்த சத்தியமே உங்களை விடுதலையாக்கும்.
Source: http://www.geocities.com/isa_koran/tamilpages/Rebuttals/egaththuvam/Quran_Version1.html
No Response to "குராண் முரண்பாடுகள்-16"
Post a Comment