Friday, November 14, 2008

குரான் முரண்பாடுகள்-8

Posted on 9:32 AM by justdial




நீர், உண்டு பருகி மன நிறைவடைவீராக! மனிதர்களில் எவரையேனும் நீர் கண்டால் ''நான் அளவற்ற அருளாளனுக்கு நோன்பு நோற்பதாக நேர்ச்சை செய்து விட்டேன். எந்த மனிதனுடனும் பேச மாட்டேன்'' என்று கூறுவாயாக ! (அல் குர்ஆன் 19: 22-26)

"பேச மாட்டேன்" என்று "பேசச் சொன்ன" அல்லா:

இந்த வசனத்தில் அறியாமை எப்படி வெளிப்படுகிறது என்றுப் பாருங்கள். இங்கு குர்-ஆன் எப்படி முரண்படுகிறது என்றுப் பாருங்கள்:

1. இவ்வசனத்தின் படி பார்த்தால், மனிதர்கள் நடமாட்டம் உள்ள இடத்தில் மரியாள் இருப்பதாக அறிகிறோம்.

2. நான் இறைவனுக்கு நோம்பு "மௌன விரதம்" இருக்கிறேன் என்று, மரியாள் சொன்ன மாத்திரத்தில், அந்த விரதம் கலைந்துவிடாதா?


1. மனிதர்கள் நடமாட்டம் உள்ள இடத்தில் மரியாள் இருப்பதாக அறிகிறோம்.

நான் மேலே சொன்னது போலவே, "மனிதர்களில் யாரையாவது நீ கண்டால்" என்று அல்லா சொல்வதிலிருந்து புரிந்துவிடுகிறது, மரியாள் மனித நடமாட்டம் உள்ள இடத்திலே தான் இருக்கிறார் அல்லது மனிதர்களின் நடமாட்டம் உள்ள இடத்தின் அருகாமையில் இருக்கிறார். அப்படி மனிதர்கள் கண்டுயிருந்தால், யூதர்கள் கல்லெரிந்தல்லவா கொன்று இருப்பார்கள்? அந்த இடத்திற்கு 9 மாதங்களாக ஒரு மனிதனும் அவ்வழியாக வரவில்லையா?

2. நான் இறைவனுக்கு நோம்பு "மௌன விரதம்" இருக்கிறேன் என்று, மரியாள் சொன்ன மாத்திரத்தில், அந்த விரதம் கலைந்துவிடாதா?

முன்னுக்கு பின் முரணாக ஒரு வார்த்தையை அல்லா சொல்கிறார். பேச மாட்டேன் என்று நோம்பு(விரதம்) இருந்தால், யாராவது கேட்கும் போது "பேச மாட்டேன்,விரதம் இருக்கிறேன்" என்றுச் சொன்னால், விரதம் கலைந்து விடும் அல்லவா, மற்றும் கேட்கிறவன் என்ன நினைப்பான்? பேச மாட்டேன் என்று விரதம் இருந்து பேசிவிட்டாளே என்று நினைக்கமாட்டான்? ஒரு வேளை, மரியாள் அல்லா சொல்வது போல் சொல்லியிருந்தாலும், அல்லது சைகை காட்டி பேசியிருந்தாலும், "குழந்தை யாருடையது" என்று அடுத்த கேள்வி கேட்டுயிருக்க மாட்டான் அவன்? இதற்கெல்லாம், குர்-ஆனில் பதில் இல்லை.
 

No Response to "குரான் முரண்பாடுகள்-8"