Monday, November 10, 2008

குரான் முரண்பாடுகள்-3

Posted on 1:52 AM by justdial

குர்-ஆன் சொல்கிறபடி இயல்பிற்கு மாறாக ஒரு அற்புதமான முறையில் ஒரு குழந்தை பிறந்து, அவர் நல்வழிப்படுத்தினால் யூதர்கள் நல்வழிப்படுவார்கள் என்று அல்லா திட்டமிட்டார் அல்லது நினைத்தார். ஆனால் அல்லாவின் திட்டத்திற்கு எதிராக யூதர்கள் இயேசுவை கொலை செய்ய திட்டமிட்டார்கள். அப்படியானால் அல்லாவின் திட்டம் நடைபெறவில்லை, அப்படித்தானே. யூதர்கள் இயேசுவிற்கு என்ன செய்வார்கள் என்று அல்லாவிற்கு தெரியவில்லை. பிறப்பு அற்புதமாக இருந்தால், யூதர்கள் நிச்சயமாக இயேசுவை நம்புவார்கள் என்று அல்லா "தவறாக" முடிவு செய்துவிட்டார்.

இயல்புக்கு மாற்றமாக ஒரு அத்தாட்சி மிக்க இறைத்தூதரை அனுப்புவோம் என்ற இறைவனின் "ஏற்பாடு" அல்லது "திட்டம்" யூதர்களால் பொய்யாக்கப்பட்டது இல்லையா?

ஆனால், இயேசுவின் வருகையின் நோக்கத்தைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்று பாருங்கள்.

1. ஏதோன் தோட்டத்தில் ஆதாம் பாவம் செய்ததால், தேவனோடுள்ள தன் உறவு முறிந்துவிட்டது.

2. மனிதன் வம்சத்தில் பிறக்கும் ஒரு வித்தினால்( மனிதனால்) உன் தலை நசுக்கப்படும் என்று தேவன் சாத்தனுக்குச் சொல்கிறார்.

3. கன்னியின் வயிற்றில் ஒருவர் பிறந்து, சிலுவையில் உலகத்தின் எல்லாருடைய பாவங்களுக்காக மரிப்பார், பிறகு உயிரோடு எழுந்திருப்பார் என்று தேவன் இயேசுவின் பிறப்பிற்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே தீர்க்கதரிசிகள் மூலமாகச் சொன்னார்.

4. தேவதிட்டத்தின் படியே இயேசு கன்னியின் வயிற்றில் பிறந்தார், சிலுவையில் மரித்தார், உயிரோடு எழுந்தார்.

யேகோவா தேவனின் திட்டம் அப்படியே நிறைவேறியது, ஆனால் அல்லாவின் திட்டம் நிறைவேறவில்லை.
 

1 Response to "குரான் முரண்பாடுகள்-3"

.
gravatar
தாமிரபரணி Says....

அனைத்து மதமும் தம் சுய நலத்திற்காக ஒரு சில இனத்தால் பரப்பிவிட்டதே ஆகும், அறிவியல்படி ஆதி கருப்பு மனிதன் ஆப்பிரிக்காவில் தோன்றினான் என்று சொல்கிறது ஆனால் இதை பற்றி எந்த மதவும் சொல்லவில்லை, என்ன கொடும சர் இது
இதவிட கொடும ஒரு மதமும் நான் பேசுகிற தாய்மொழி தமிழில் இல்லை,உலகில் தோன்றிய மிக பழமையான மொழிகளில் ஒன்று தமிழ், அப்பேற்பட்ட என் அருமைமொழி பற்றி குறிப்பிடாத, அதில் பேசாத எந்த கடவுளையும் நான் கடவுளாக ஏற்றுகொள்ள முடியாது