Thursday, April 1, 2010

கிறிஸ்தவம் பார்வைக்கு பதில்: லூக்கா 22:36 ல் உள்ள ...

 

 

கிறிஸ்தவன் பார்வையின்: "பைபிள் கூறும் பயங்கரவாதம் (3)" கட்டுரைக்கு பதில்: 3.2

 

 
முன்னுரை:

 

 
கிறிஸ்தவம் பார்வை என்ற இஸ்லாமிய தளம் "பைபிளில் பயங்கரவாதம்" என்ற தலைப்பில் கட்டுரைகளை எழுதிக்கொண்டு வருகிறது. அவர்களின் இந்த தொடர் கட்டுரைகளுக்கு இதுவரை மூன்று பதில்கள் தரப்பட்டுள்ளது, அவைகளை இங்கு படிக்கவும்: 

 

 

 

 

 

 
மூன்றாம் பாகத்திற்கான இரண்டாம் பகுதி ( 3. 2 ) பதிலை இந்த கட்டுரையில் காணலாம். அதாவது, லூக்கா 22:36ம் வசனத்தில் இயேசு பட்டயத்தை பயன்படுத்தவேண்டும் என்று போதித்தார் என்று இவர்கள் கூறியுள்ள விமர்சனத்திற்கு மறுப்பாக இந்த பதில் தரப்படுகிறது.  

 

 
அபூ அப்திர ரஹ்மான் அவர்கள் இந்த மூன்றாம் பாகத்தில் லூக்கா 22:36ம் வசனம் பற்றி எழுதிய வரிகளுக்கு தனியாக இன்னொரு பதிலை வேறு கட்டுரையில் தருகிறேன்.
-----------------------------------------

 

 

லூக்கா 22:36 ல் உள்ள பட்டயம் பற்றி ஒரு சிறு விளக்கம்


ஜேம்ஸ் அர்லண்ட்சன்


சுவிசேஷங்களில் இயேசு வன்முறையை ஆதரித்ததும், ஊக்குவித்தமும் உண்டா? குறைந்த பட்சம் நியாயமான முறையில் வன்முறையில் ஈடுபடுவதையாவது அவர் ஆதரித்ததுண்டா? அவர் தன்னுடைய உண்மையான சீடர்களை இதற்கென்று அழைத்தாரா? அவர் தன்னுடைய எல்லா சீடர்களிடமும் பட்டயங்களை வாங்கும்படி உண்மையாகவே கட்டளையிட்டாரா? அவர் இப்படி சொன்னதாக ஒரு வசனத்தைக் குறிப்பிடலாம். 



லூக்கா 22:36 சொல்லுகிறது.



அதற்கு அவர்: இப்பொழுதோ பணப்பையும் சாமான்பையும் உடையவன் அவைகளை எடுத்துக்கொள்ளக்கடவன்; பட்டயம் இல்லாதவன் தன் வஸ்திரத்தை விற்று ஒன்றைக் கொள்ளக்கடவன்.



இந்த வசனத்தை தனியாக நாம் படிக்கும் போது, வன்முறையும் பட்டயமும் சாத்தியமானவைகள் என்று இந்த வசனம் சொல்வதாக தெரிகிறது. எல்லா சீடர்களும் சென்று பட்டயங்களை கட்டாயமாக‌ வாங்கிக் கொள்ளவேண்டும் என்று இவ்வசனத்தில் காணப்படுகிறது. இயேசுவின் மரணம் மற்றும் அடக்கத்திற்கு பின் அவரில்லாமல் தனியாக உலகத்தை சந்திக்க வேண்டும் என அவர்கள் நினைத்தார்கள்.



எனினும், இந்த வசனத்தை தனியாக பிரித்துபடிக்காமல் அதன் பின்னணியத்தோடு படிக்கையில் அதன் பிரத்தியட்சமான அர்த்தம் என்னவாயிருக்கும்? உண்மையாக இயேசு ஒரு பட்டயத்தை உபயோகித்தாரா? மேலும் தன்னுடைய சீடர்கள் ஆளுக்கொரு பட்டயத்தை வாங்கிக்கொள்ள வேண்டும் என்று விரும்பினாரா?



லூக்கா 22:36ம் வசன‌ விளக்க உரை



சுமார் மூன்று வருடங்கள் அவர் எருசலேமுக்குள் வெளிப்படையான ஒரு வெற்றி பவனியாக நுழைவதை தவிர்த்தார் ஏனென்றால் அப்படி அவர் பரிசுத்த நகரத்திற்குள் கால் வைக்கும் போது பல நூறு வருடங்களுக்கு முன் ஏசாயா தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டபடி (ஏசாயா 53:12) ஒரு சாதாரண குற்றவாளியின் மரணத்தை போல மரணம் அடைந்து தன் ஊழியத்தை நிறைவேற்ற வேண்டியிருக்கும் என்பதை அவர் அறிந்திருந்தார் என்று லூக்கா 22:36 ன் சரித்திர பின்னணி தெளிவாக விளக்குகிறது. எனவே அவர் தன்னுடைய பணிகளை எருசலேமுக்கு வெளியே முடிக்க வேண்டியிருந்தது.



இறுதியாக தன்னுடைய தீர்க்கதரிசிகளை கொல்லுவதில் புகழ்பெற்ற அந்த நகரத்திற்குள் இயேசு நுழைகிறார் (லூக்கா 13:33-34). அவர் தன்னுடைய கைது, விசாரணை மற்றும் சிலுவையில் அறையப்படுதல் போன்றவைகள் நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்பே அவை எல்லாவற்றையும் பற்றி முன்னுரைத்திருந்தார். மதத்தலைவர்கள் அவரை இரக‌சியமாக கண்காணித்துக் கொண்டிருந்தார்கள் அவர் மீது பழி சுமத்துவதற்காக வஞ்சகமான கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள் (லூக்கா 20:20). இந்த நேர்மையற்ற கேள்விகள் அவர் நகரத்திற்குள் நுழைவதற்கு முன் கேட்கப்பட்டிருந்தாலும், அந்த நெருக்கடியான நாட்களில் இப்படிப்பட்ட கேள்விகள் அதிகமாக கேட்கப்பட்டது. ஆனால் அவர்களுடைய எல்லா தந்திர வலைகளையும் தவிர்த்து அவர் ஆச்சரியமான விதத்தில் பதிலளித்தார். பிரச்சனைகளுக்கு நடுவிலும் ஒவ்வொரு நாளும் அவர் தேவாலயத்தில் பிரசங்கித்தார், ஜனங்கள் திரளாய் கூடிவந்தார்கள் ஜனங்களுக்கு பயந்ததினால் அதிகாரிகள் அவரை கைது செய்ய முடியவில்லை. பிறகு யூதாஸ், ஜனக்கூட்டம் இல்லாத போது தான், அவர்களுக்கு அறிவிப்பு கொடுப்பதற்கும், அவரைக் காட்டிக் கொடுப்பதற்கும் தானாகவே முன்வந்தான். (லூக்கா 22:1-6)



பஸ்கா பண்டிகை நெருங்கியிருந்த போது அவர் இறுதி போஜனத்தை ஆயத்தப்படுத்தும் படி தன்னுடைய சில சீடர்களுக்குச் சொன்னார். புதிய உடன்படிக்கையில் (லூக்கா 22:17-20) உலகத்தின் பாவத்திற்காக சிந்தப்படுகிற தன் இரத்தத்தையும் உடைக்கப்படுகிற தன் சரீரத்தையும் பிரதிபலிக்கிற ரொட்டியையும் திராட்சைரசத்தையும் அவர் உயர்த்திப்பிடித்தார். அப்படியிருக்கும்போது அந்த போஜனத்திலிருந்து யூதாஸ் நைசாக நழுவினான், அதிகாரிகளிடம் அவனுக்கு போகவேண்டியிருந்தது. ஏனென்றால் இயேசு வழக்கமாக ஒலிவ மலைக்கு சென்று ஜெபிப்பார் என்பதை அவன் அறிந்திருந்தான் (லூக்கா 21:37). அந்த இரவிலும் எந்த வித்தியாசமின்றி அப்படியே நடந்தது.



இப்பொழுது நாம் லூக்கா 22: 36ம் வசனத்தின் வசன பின்னணியை (Textual Context) கவனிப்போம். இயேசு தாம் காட்டிக் கொடுக்கப்பட்ட அந்த இராத்திரியிலே கடைசி போஜனத்தை சாப்பிடுகிறார்.



லூக்கா 22:35-38 சொல்லுகிறது:



35 பின்னும் அவர் அவர்களை நோக்கி: நான் உங்களைப் பணப்பையும் சாமான்பையும் பாதரட்சைகளும் இல்லாமல் அனுப்பின போது, ஏதாகிலும் உங்களுக்குக் குறைவாயிருந்ததா என்றார். அவர்கள், ஒன்றும் குறைவாயிருந்ததில்லை என்றார்கள்.



36 அதற்கு அவர்: இப்பொழுதோ பணப்பையும் சாமான்பையும் உடையவன் அவைகளை எடுத்துக் கொள்ளக்கடவன்; பட்டயம் இல்லாதவன் தன் வஸ்திரத்தை விற்று ஒன்றைக் கொள்ளக்கடவன்.


37 அக்கிரமக்காரரில் ஒருவனாக எண்ணப்பட்டார் என்று எழுதியருக்கிற வாக்கியம் என்னிடத்தில் நிறைவேறவேண்டியதென்று உங்களுக்குச் சொல்லுகிறேன். என்னைப்பற்றிய காரியங்கள் முடிவு பெறுங்காலம் வந்திருக்கிறது என்றார்.



38 அதற்கு அவர்கள்: ஆண்டவரே, இதோ, இங்கே இரண்டு பட்டயம் இருக்கிறது என்றார்கள். அவர்: போதும் என்றார்.



இதன் வசன‌ பின்னணி (Textual Context) குறைந்தது இரண்டு உண்மைகளை வெளிப்படுத்துகிறது. முதலாவதாக, வேவுபார்க்கிறவர்களும் அதிகாரிகளும் இயேசுவை எப்படியாவது சிக்கவைக்க வேண்டும் என்று தீவிரமாக இருந்த அந்த பதட்டமான‌ சில நாட்களில் எருசலேமுக்குள் நுழைவதற்கு முன் இயேசு தம்முடைய ஊழியத்தை வித்தியாசப்படுத்துகிறார். இயேசு எதற்காக தன்னுடைய சீடர்களிடம் பட்டயத்தைப் போய் வாங்கிக்கொள்ளுங்கள் என்றுச் சொன்னார் என்பதை புரிந்து கொள்ளுவதற்கு இந்த பதட்டமான‌ சூழ்நிலை ஏதாவது பங்கு வகிக்கிறதா? இந்தக் கேள்விக்கு கீழே பதிலளிக்கப்பட்டுள்ளது. ஏசாயா 53:12 ல் முன்னுரைக்கப்பட்டபடி தான் கைது செய்யப்படுவார் என்றும் அக்கிரமக்காரனைப் போல விசாரிக்கப்படுவார் என்பதையும் அவர் கூறினார். இதற்கும் பட்டயத்திற்கும் ஏதாவது தொடர்பு உண்டா? குற்றவாளிகள் பட்டயங்களை தங்களோடு சுமந்து கொண்டிருப்பார்களா? இதுவும் கீழே விளக்கப்பட்டுள்ளது. பட்டயத்தை உபயோகப்படுத்தும் வன்முறையைக் காட்டிலும் ஏதோ ஆழமான அர்த்தம் இயேசுவின் மனதில் இருக்கும். அது என்ன?



இந்த வசனங்களின் பொருளை இரண்டு வகைகளில் புரிந்துக்கொள்ளலாம்.



முதலாவதாக‌, எழுத்தின் படி இவ்வசனத்தை படித்தால், "இயேசுவின் கடைசி மணித்துளிகளில் பட்டயங்களை பயன்படுத்தலாம்" என்று சொல்வது போல தோன்றும். இரண்டாவதாக, இதே வசனங்களை சரித்திர மற்றும் வசன பின்னணியத்தோடு படித்தால், "இயேசுவின் கடைசி மணி நேரத்தில் பட்டயங்களை பயன்படுத்தக்கூடாது" என்று சொல்வதாகத் தோன்றும்.



மேற்கண்ட வசனங்களின் உண்மையான பொருள் நிச்சயமாக "எழுத்தின் படியான பொருள்" இல்லை என்பது மட்டும் தெளிவு. முதலில், ஏன் இவ்வசனங்களின் பொருள் "பட்டயங்களை பயன்படுத்த வேண்டும்" என்ற எழுத்தின் படியான பொருளில் இல்லை என்பதை காண்போம். ஏன் லூக்கா 22:34-38 க்கும் கெத்சமனே தோட்டத்தில் கைது செய்யப்பட்ட (லூக்கா 22: 39-53) பகுதிக்கும் சரியாக பொருந்தாது என்பதை ஆராய்வோம்.



பட்டயங்களின் கொடூர உபயோகம் (Violent use of Swords)



இயேசு தன்னுடைய சீடர்களிடம் பட்டயங்களை வாங்கும் படிச் சொல்கிறார், அவர்கள் இரண்டு பட்டயங்களை காண்பித்தபோதோ அது போதும் என்கிறார். வசனங்களை புரிந்துக் கொள்வதில் முதல் முறையானது, "வசனத்தை அப்படியே படித்து எழுத்தின்படி புரிந்துக் கொள்வதாகும்". இவ்வசனங்களுக்கு "எழுத்தின்படி பொருள் கூறுதல்" பொருந்துவதாக இல்லை. இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன.



முதலாவதாக, ஒரு வெளிப்படையான கேள்வியை கவனிப்போம்:



இரண்டு பட்டயங்கள் எதற்கு போதுமானது?


காவலாளிகள் அவரை கைது செய்வதை தடுத்து எதிர்த்து போராடுவதற்கு அந்த இரண்டு பட்டயங்கள் போதுமா?



இது அரிதான காரணம் ஏனென்றால் இயேசு கைது செய்யப்படும்போது சீடர்களில் ஒருவன் (யோவான் 18:10 ன் படி பேதுரு) தன்னுடைய பட்டயத்தை எடுத்து பிரதான ஆசாரியனின் வேலைக்காரர்களில் ஒருவனுடைய (யோவான் 18: 10 ன் படி மல்குஸ்) காதை வெட்டினான். இயேசு பேதுருவிடம் பட்டயத்தை போடும்படி 'இம்மட்டும் போதும் நிறுத்துங்கள்" என்று கடுமையாக கூறுகிறார். பிறகு அவனுடைய காதை மறுபடியும் அவனுக்கு பொருத்தி அவனை சுகப்படுத்துகிறார் (லூக்கா 22: 49-51) . இரண்டு பட்டயஙகள் இயேசுவை கைது செய்வதை எதிர்த்து போராடுவதற்காக மட்டும் போதுமானதாக நிச்சயமாக‌ இருக்கமுடியாது.



இரண்டாவதாக, அந்த இரண்டு பட்டயங்கள் கைது செய்யவரும் அதிகாரிகளை எதிர்த்து, ஆயுதங்களை வைத்துக்கொண்டு போராடும் ஒரு அரசியல் சேனையாக மற்றும் இராணுவ ரீதியான‌ "இயேசு இயக்கத்தை" ஸ்தாபிப்பதற்கு போதுமானதா?



லூக்கா 22:52ல் இயேசு இந்த நோக்கத்தை மறுக்கிறார். அதிகாரிகள் அவரை பிடிக்க வந்திருக்கும் போது, "நீங்கள் தடிகளோடும் பட்டயத்தோடும் என்னைப் பிடிக்க வருவதற்கு நான் என்ன கலவர கூட்டத்தையா நடத்திக் கொண்டிருக்கிறேன்?" என்று கேட்கிறார். அவர் ஒரு கலவர கூட்டத்தை நடத்தவில்லை என்பது தான் இதற்கு பதில். எனவே, அவர் பிடிக்கப்பட்டார் கொண்டுச் செல்லப்பட்டார் (வசனம் 54).



எனவே லூக்கா 22:36ல் எழுத்தின்படியுள்ள விளக்கமாகிய‌ "பட்டயம் உபயோகப்படுத்தபடவேண்டும்" என்பது அதன் நீண்ட பின்னணியை ஆராய்ந்துப் பார்த்தால், இது ஒவ்வாத விளக்கமாக உள்ளது என்பதை அறியலாம். இரண்டு பட்டயங்களானது இயேசு கைது செய்வதை எதிர்த்து எந்தவித கலகம் செய்வதற்கோ அல்லது இயேசுவும் சீடர்களும் கெத்சமெனேத் தோட்டத்தில் தங்களைத் தற்காத்துக் கொள்வதற்கோ போதுமாயிராது.



பட்டயம் பற்றி வசன பின்னணி ரீதியிலான விளக்கம் (Contextual meaning of the Swords)



பட்டயங்களை உபயோகிக்க வேண்டும் என்ற எழுத்தின்படியான விளக்கத்திற்கு முரண்பாடாக பின்வரும் விளக்கமானது அமைப்பில் இலகுவாக காணப்படுகிறது, அதனால் குழப்பத்தின் எல்லா பகுதிகளும் சரியாக இந்த விளக்கத்தின் மூலம் இணைக்கப்படுகிறது.



முதலாவது, இயேசு எருசலேமுக்குள் பிரேவேசிப்பதற்கு முன்னரே தன்னுடைய சீடர்களிடத்தில் அவர்களுக்கான தன்னுடைய ஊழியத்தின் நோக்கம் என்ன என்பதை நினைவு படுத்துகிறார் (லூக்கா 9:3; 10:1-17). இயேசு அவர்களோடு இருந்த காலக் கட்டத்தில் சீடர்களுக்கு அதிகமான பணப்பையும், சாமான் பையும் அல்லது அதிகபடியான இன்னொரு ஜோடி காலணிகளும் தேவைப்பட்டதா? என்று கேட்டால், "இல்லை" என்பது தான் பதிலாக இருந்தது. ஏனென்றால் ஜனங்கள் அவர்களிடத்தில் நட்பாக இருந்தார்கள்.



இயேசுவின் மீது, மதத்தலைவர்களின், அதிகாரிகளின் எதிர்ப்பு மூன்று வருடங்களாக சிறிது சிறிதாக பரவியது. இப்பொழுது அவர் எருசலேமில் இருக்கிறார், அவருடைய வார்த்தைகளாலேயே அவரை குற்றப்படுத்த வேண்டும் என்று முனைப்பாயிருந்த அதிகாரிகளின் கட்டுப்பாடான விரோதத்திற்கு உள்ளாயிருந்தார். அதிகாரிகள் இல்லாத போது இயேசுவிடம் அவர்கள் தங்கள் ஆட்களை வேவுபார்க்க அனுப்புவார்கள். எனவே சூழ்நிலையானது மிகவும் பதட்டமானதாக காணப்பட்டது - அந்த இரண்டு பட்டயங்கள் - பதட்டத்தை இன்னும் வெளிக்காட்டுகிறது. இயேசுவின் ஊழியம் தெளிவாக ஒரு ஆபத்திற்குள்ளாக‌ மாற்றப்பட்டிருந்தது, சீடர்கள் ஜாக்கிரதையாக இருக்கவேண்டியிருந்தது. இருந்தபோதும், நாம் மேலே பார்த்தபடி நேரடியாக தன்னுடைய சீடர்கள் பட்டயங்களை உபயோகிக்க வேண்டும் என்று நிச்சயமாக அவர் சொல்லவில்லை. ஏனெனில் பேதுருவிடம் பட்டயத்தை தன் ஸ்தானத்தில் வைக்கும்படி இயேசு சொல்கிறார்.



இரண்டாவதாக, அக்கிரமக்காரரில் ஒருவனாக எண்ணப்பட்டார் என்று எழுதியிருக்கிற வாக்கியம் என்னிடத்தில் நிறைவேறவேண்டியதென்று உங்களுக்குச் சொல்லுகிறேன். என்னைப்பற்றிய காரியங்கள் முடிவுபெறுங்காலம் வந்திருக்கிறது என்றார். (லூக்கா 22:37) இரண்டு பட்டயங்களுக்கான தெளிவான நோக்கம் ஏசாயாவின் தீர்க்கதரிசனத்தை (53:12) மேற்கோள்காட்டும் இயேசுவின் குறிப்பினால் விளங்குகிறது. அவர் ஒரு அக்கிரமக்காரனைப் போல் கைது செய்யபடவேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டிருந்தார், ஒரு அக்கிரமக்காரனைப் போலவே விசாரிக்கப்ட்டார், ஒரு அக்கிரமக்காரனைப் போலவே சிலுவையிலும் அறையப்பட்டார். ( ஆனால் அவரது கைது, விசாரணை, மரண தண்டன எல்லாம் பொய்ச் சாட்சிகளினிமித்தம் வழங்கப்பட்டது, அவர் நன்மையைத் தவிர‌ ஒன்றுமே செய்யவில்லை) இருந்தாலும் அவர் இரண்டு கள்ளர்களுக்கு நடுவே தொங்க வேண்டியாதயிற்று, அதுவும் ஏசாயா தீர்க்கதரிசனத்தின் நிறைவேறுதலாகும் (லூக்கா 23:32, 39-43) அக்கிரமக்காரர்கள் தங்களோடு எதை சுமந்துசெல்வார்கள்? ஆயுதங்களை, அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்படுவதற்கு இயேசுவும் ஆயுதங்களை வைத்திருப்பது அவசியமாயிருந்தது. எனவே தான் தீர்க்கதரிசனத்தை நிறைவேற்ற இயேசு, இரண்டு பட்டயங்கள் போதுமென்று சொன்னார்.



இன்னும் தீர்க்கதரிசனங்களை நிறைவேற்றுவது பற்றி மத்தேயு (26:54) கூறுகிறார். ஒருவேளை இயேசுவை கைது செய்வதைத் தடுக்க பேதுரு தொடர்ந்து பட்டயத்தை உபயோகப்படுத்திக் கொண்டேயிருந்தால், தீர்க்கதரிசனம் தடையில்லாமல் இலகுவாக நிறைவேற்றப்பட்டிருக்க முடியாது. தான் வேண்டிக் கொண்டால் பன்னிரண்டு லேகியோனுக்கும் (இராணுவ சேனைக்கும்) மேற்பட்டவர்களை தன்னுடைய பாதுகாப்பிற்காக பெறமுடியும் என்று இயேசு கூறுகிறார். ஆனால், தான் மரிக்க வேண்டிய பணியை நிறைவேற்றுவதற்காக பிதாவினால் நியமிக்கப்பட்டிருப்பதால், அதை நிறைவேற்றுவதிலிருந்து மகா ரோமப் படைகளை தடுத்து நிறுத்துவதற்கு இயேசு அனுமதிக்கவில்லை (மத்தேயு 26:53). எனவே தான் இயேசு பேதுருவிடம் பட்டயத்தை அதன் உறையிலே போடும் படிச் சொன்னார் (மத் 26:52). மேலும் லூக்கா சுவிசேஷத்தில் பேதுரு ஒருவனுடைய காதை வெட்டின பிறகு அவனிடம் சொல்லுகிறார், 'இம்மட்டும் நிறுத்துங்கள்" அல்லது "இனி ஒருபோதும் வேண்டாம்"! (22: 51) என்றுச் சொல்கிறார்.



மூன்றாவதும் இறுதியுமான விளக்கம் கூறுவதென்னவென்றால், இயேசு அடிக்கடி வெளிப்படையான பொருட்களைக் குறிப்பிட்டே (விதைகள், விளக்கு, திராட்சைத் தோட்டம், நாணயம், தொலைந்துபோன ஆடு இன்னும் பல உள்ளன), ஆன்மீக பாடங்களை, சத்தியங்களை கற்றுக் கொடுத்திருக்கிறார். அது தான் அந்த இரண்டு பட்டயங்களின் காரியத்திலும் உண்மையாக இருக்கமுடியும். இந்த அர்த்தத்திற்குரிய விளக்கத்திற்கு ஆதரவாக மத்தேயு 10:34 காணப்படுகிறது. "நான் பூமியின் மீது சமாதானத்தை அனுப்ப வந்தேன் என்று எண்ணாதிருங்கள் சமாதானத்தை அல்ல பட்டயத்தையே அனுப்பவந்தேன்" (10:34) . இந்த கட்டுரையில் படிப்பது போல‌ மத்தேயு 10: 34 ம் வசனத்தின் பின்னணியத்தை பார்க்கும் போது அவர் வெட்டிச் சாய்த்து குடும்பத்தை இரத்தக்களரியாக்கும் ஒரு நிஜமான பட்டயத்தை குறிப்படவில்லை. மாறாக ஒரு ஆவிக்குரிய பட்டயம், அது சரீரரீதியற்ற உள்ளான பிரிவினையை உண்டாக்கலாம். மேலும், ஒரே மாதிரிப் பகுதிகளான மத்தேயு 10:34 மற்றும் லூக்கா 12:51 ல் இயேசு குறிப்பிட்ட "பட்டயத்திற்கு" நேரடியான எழுத்தின் படியான (Literal) அர்த்தம் இல்லை என்பதை லூக்கா விளக்குகிறார். லூக்கா 12:51 இல் இதை லூக்கா செய்திருந்தாரானால், பிறகு ஏன் லூக்கா 22:36-38ல் "பட்டயம்" என்பதன் அர்த்தத்தை கொஞ்சம் மாற்றியிருக்கவில்லை?



ஆதி கிறிஸ்தவத்தின் வரலாறு (Early Christian History)



நேரடியாக பட்டயங்களை உபயோகிப்பது மேற்கண்ட வசனங்களின் உண்மைப்பொருள் அல்ல என்று சொன்னதால், இவ்வசனங்களில் பட்டயமே இருக்கவில்லை என்ற அர்த்தம் கிடையாது (லூக்கா 22:38). அவைகள் அடையாளக்குறிகளோ, காணப்படாத கற்பனைகளோ அல்ல. பேதுரு உண்மையாகவே இரண்டு பட்டயங்களில் ஒன்றை எடுத்து ஒரு வேலைக்காரனுடைய காது அறுபடும்படி வெட்டினான் (மத்தேயு 26:50-51; லூக்கா 22:49-51) .



இருந்தபோதும், பேதுரு பட்டயத்தை உபயோகப்படுத்தினது சபை உருவான பெந்தோகோஸ்தே நாளுக்கு முன்பாக ஆகும். பெந்தோகோஸ்தே நாள் அன்று பேதுரு முன் எப்போதும் நிகழ்ந்திராத விதத்தில் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டார் (அப்போஸ்தலர் 2) . பேதுரு பரிசுத்த ஆயினால் நிரப்பப்படுவதற்கு முன் நடந்த‌ நிகழ்ச்சியாகும், அந்த பட்டயத்தை பயன்படுத்திய நிகழ்ச்சி. பெந்தேகோஸ்தே நாளுக்கு முன் இயேசு கைது செய்யப்பட்ட அந்த இராத்திரியில் அன‌ல்பர‌ந்த நேரத்தில் நடந்த பேதுரு காதை வெட்டிய அச்செயலின் மீது சபைக் கொள்கைகளை கட்டி எழுப்புவது தவறான வழிமுறையாகும். பேதுரு அந்த சூழலில் பட்டயத்தை பயன்படுத்தினார் என்பதற்காக, கிறிஸ்தவ சபையின் கொள்கைகள் அதன் மீது சார்ந்து உருவாக்குவது தவறானதாகும்.



இது மட்டுமல்ல, இயேசு தோட்டத்தில் பேதுருவிடம் கூறினார், "பட்டயத்தை அதன் இடத்திலே வை" என்றார். இத‌ன் அர்த்தம் – "பட்டயத்திற்குரிய உறையிலே அல்லது பேதுருவின் இடுப்பில் கட்டியிருக்கும் பெல்ட்டிலே அல்லது ஆயுதம்பொருத்தக்கூடிய வேறு உடையிலே வை" என்பதாகும். அவர் பட்டயத்தை எட்டாத அளவிற்கு தூரத் தூக்கிப்போடும்படிக் கூறவில்லை. எனவே சில சீடர்கள் அவருடைய சிலுவை மற்றும் மரணத்திற்கு பிறகும் எதிர்ப்பு நிறைந்திருந்த அந்த தேசப்பகுதியில் அந்த இரண்டு பட்டயங்களையும் தங்களோடு வைத்திருந்தார்கள் என அறியலாம். இன்னும் சிலர் அவருடைய உயிர்த்தெழுதல் மற்றும் பரமேறுதலுக்கும் பின்னும் தங்களோடு ஆயுதங்களை வைத்திருந்திருக்கலாம்.



இருந்தபோதிலும், நம்பத்தகுந்த பாரம்பரியங்கள், சரித்திரங்கள் அப்போஸ்தலர்களில் ஒருவராவது போரிடவும், கொடிய சோதனைகளிலிருந்து தப்பிப்பதற்கு தவறாக வழிநடத்தப்பட்ட, புரட்டப்பட்டிருந்த கலகக்கார இரத்தசாட்சிகளைப் போல பட்டயங்களை உபயோகிக்க முயற்சிக்கவும் இல்லை என்று கூறுகிறது. அதற்கு பதிலாக யோவானைத் தவிர எல்லா சீடர்களும் உபத்திரவத்தினாலே இரத்தசாட்சிகளாக கொல்லப்பட்டனர். (யோவான் முதிர் வயதிலே இயற்கையாக மரித்தார்). சீடர்களுடன் இயேசு வாழ்ந்த நாட்களிலும், கெத்சமனே தோட்டத்திலும் இயேசுவின் முன்னுதாரமான வாழ்க்கை அவர்களுக்குள் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியருந்தது.



முடிவுரை:



கெத்சமனே தோட்டத்தில் நடந்த சம்பவங்களும் அங்கே இயேசு தன்னுடய சீடர்களுக்கு கட்டளையிட்டவைகளும் அவர்களுக்கு அகிம்சையை அல்லது சாந்தத்தை கற்றுக்கொடுத்தது, எனவே லூக்கா 22:36 வன்முறையை அனுமதிப்பதில்லை. "அப்பொழுது, இயேசு அவனை நோக்கி: உன் பட்டயத்தைத் திரும்ப அதின் உறையிலே போடு; பட்டயத்தை எடுக்கிற யாவரும் பட்டயத்தால் மடிந்து போவார்கள்." (மத் 26:52). பேதுருவும் மற்றவர்களும் பட்டயத்தை உபயோகப்படுத்துவதினால் உண்டாகும் விளைவு பற்றி இயேசு சொன்ன இந்த வார்த்தைகளைக் கேட்டார்கள். எனவே, இயேசுவின் உயிர்த்தெழுத்த நம்பிக்கையின் செய்தியை பிரசங்கிக்கும் சீடர்களின் வாழ்க்கையில், "பட்டயங்கள்" ஒரு பகுதியாக இருக்கவே முடியாது.



புதிய ஏற்பாட்டில் "பட்டயம்" என்ற தலைப்பின் கீழ் எழுதப்பட்ட தொடர் கட்டுரைகளை படிக்க இங்கு சொடுக்கவும்: Jesus, Pacifism, and the Sword. இப்போது நீங்கள் படித்த கட்டுரை இந்த தொடர் கட்டுரையின் இரண்டாம் பாகத்திலிருந்து எடுக்கப்பட்ட ஒரு பாகமாகும்.



புதிய ஏற்பாட்டின் மத்தேயு 10:34ம் வசனத்தில் இயேசு பயன்படுத்திய "பட்டயம்" என்ற வார்த்தைக்கான சிறிய விளக்க கட்டுரைக்காக இங்கு சொடுக்கவும்.


ஆங்கில மூலம்: A Brief Explanation of the Sword in Luke 22:36


ஜேம்ஸ் அர்லண்ட்சன் அவர்களின் கட்டுரைகள்


Tamil Source:  http://www.answering-islam.org/tamil/authors/arlandson/luke_22_36.html



 
 

Tuesday, December 1, 2009

இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு

 



இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
 
திமிட்ரியஸ் & ஷாம் ஷமான்
 
 

இறைவனின் பரிசுத்த வார்த்தையாகிய பரிசுத்த பைபிள் "மற்றவர்களின் மனைவிகள் மீது விருப்பம் கொள்வதை" கண்டிக்கிறது.

 
 
பிறனுடைய வீட்டை இச்சியாதிருப்பாயாக; பிறனுடைய மனைவியையும், அவனுடைய வேலைக்காரனையும், அவனுடைய வேலைக்காரியையும், அவனுடைய எருதையும், அவனுடைய கழுதையையும், பின்னும் பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக என்றார். (யாத்திராகமம் 20:17)
 
 
பிறனுடைய மனைவியை இச்சியாதிருப்பாயாக; பிறனுடைய வீட்டையும், அவனுடைய நிலத்தையும், அவனுடைய வேலைக்காரனையும், அவனுடைய வேலைக்காரியையும், அவனுடைய எருதையும், அவனுடைய கழுதையையும், பின்னும் பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக என்றார். (உபாகமம் 5:21) 
 
 
இன்னும் மற்றவனின் மனைவி மீது மோகம் கொள்வபவன் "விபச்சாரம்" என்ற பாவத்தை செய்பவனாக கருதப்படுவான் என்று பைபிள் சொல்கிறது.
 
 
விபசாரஞ் செய்யாதிருப்பாயாக என்பது பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று. (மத்தேயு 5:27-28) 
 
 
முஹம்மதுவிற்கு மட்டும் தனிப்பட்ட சலுகைகளை அல்லாஹ் கொடுத்துள்ளார், இது வேறு யாருக்கும் தரப்படவில்லை என்று குர்ஆன் சொல்கிறது.
 
 
நபியே! எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்து விட்டீரோ அந்த உம்முடைய மனைவியரையும், உமக்கு(ப் போரில் எளிதாக) அல்லாஹ் அளித்துள்ளவர்களில் உம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும், நாம் உமக்கு ஹலாலாக்கி இருக்கின்றோம்; அன்றியும் உம் தந்தையரின் சகோதரர்களின் மகள்களையும், உம் தந்தையரின் சகோதரிகள் மகள்களையும், உம் மாமன் மார்களின் மகள்களையும், உம் தாயின் சகோதரிமாரின் மகள்களையும் - இவர்களில் யார் உம்முடன் ஹிஜ்ரத் செய்து வந்தார்களோ அவர்களை (நாம் உமக்கு விவாகத்திற்கு ஹலாலாக்கினோம்); அன்றியும் முஃமினான ஒரு பெண் நபிக்குத் தன்னை அர்ப்பணித்து, நபியும் அவளை மணந்து கொள்ள விரும்பினால் அவளையும் (மணக்க நாம் உம்மை அனுமதிக்கின்றோம்) இது மற்ற முஃமின்களுக்கன்றி உமக்கே (நாம் இத்தகு உரிமையளித்தோம்; மற்ற முஃமின்களைப் பொறுத்தவரை) அவர்களுக்கு அவர்களுடைய மனைவிமார்களையும், அவர்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும் பற்றி நாம் கடமையாக்கியுள்ளதை நன்கறிவோம்; உமக்கு ஏதும் நிர்ப்பந்தங்கள் ஏற்படாதிருக்கும் பொருட்டே (விதி விலக்களித்தோம்) மேலும் அல்லாஹ் மிக மன்னப்பவன்; மிக்க அன்புடையவன். (குர்ஆன் 33:50) 
 
 
இன்னும், ஜையத் தன் மனைவியை விவாகரத்து செய்த பின்னர், அல்லாஹ் அந்தப் பெண்ணை முஹம்மதுவிற்கு திருமணம் செய்வித்ததாக குர்ஆன் கூறுகிறது.
 
 
 
(நபியே!) எவருக்கு அல்லாஹ்வும் அருள் புரிந்து, நீரும் அவர் மீது அருள் புரிந்தீரோ, அவரிடத்தில் நீர்; "அல்லாஹ்வுக்குப் பயந்து நீர் உம் மனைவியை (விவாக விலக்குச் செய்து விடாமல்) உம்மிடமே நிறுத்தி வைத்துக் கொள்ளும்" என்று சொன்ன போது அல்லாஹ் வெளியாக்க இருந்ததை, மனிதர்களுக்குப் பயந்து நீர் உம்முடைய மனத்தில் மறைத்து வைத்திருந்தீர்; ஆனால் அல்லாஹ் அவன் தான், நீர் பயப்படுவதற்குத் தகுதியுடையவன்; ஆகவே ஜைது அவளை விவாக விலக்கு செய்துவிட்ட பின்னர் நாம் அவளை உமக்கு மணம் செய்வித்தோம்; ஏனென்றால் முஃமின்களால் (சுவீகரித்து) வளர்க்கப்பட்டவர்கள், தம் மனைவிமார்களை விவாகரத்துச் செய்து விட்டால், அ(வர்களை வளர்த்த)வர்கள் அப்பெண்களை மணந்து கொள்வதில் யாதொரு தடையுமிருக்கக் கூடாது என்பதற்காக (இது) நடைபெற்றே தீர வேண்டிய அல்லாஹ்வின் கட்டளையாகும். நபியின் மீது அல்லாஹ் விதியாக்கியதை அவர் நிறைவேற்றுவதில் எந்தக் குற்றமும் இல்லை இதற்கு முன் சென்று போன (நபிமா)ர்களுக்கு ஏற்பட்டிருந்த அல்லாஹ்வின் வழி இதுவேயாகும் - இன்னும் அல்லாஹ்வின் கட்டளை தீர்மானிக்கப்பட்ட விதியாகும். (குர்ஆன் 33:37-38) 
 
 
இஸ்லாமிய ஆதார நூல்களின் படி, இந்த ஜையத் என்பவர் "ஜையத் இபின் ஹரிதா" என்பவராவார். இவர் முஹம்மதுவின் முதல் மனைவியாகிய கதிஜாவின் முன்னால் அடிமையாவார். பிறகு இவரை தன் வளர்ப்பு மகனாக முஹம்மது தத்து எடுத்துக்கொண்டார். இஸ்லாமிய நூல்களில் சொல்லியிருக்கிற படி, ஒரு முறை முஹம்மது ஜையத்தை சந்திக்க அவரது வீட்டிற்குச் சென்ற போது, ஜையத்தின் மனைவியாகிய ஜையத் பி. ஜேஷ் என்பவரை திரையில்லாமல் காண்டுவிட்டார் மற்றும் அவரின் அழகில் மயங்கிவிட்டார். முஹம்மது தன் அழகை புகழ்வதை ஜைனப் கேள்விப்பட்டார் அதனை தன் கணவருக்கும் தெரிவித்தார். இந்த செயல் ஜையத்தை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தியது, இதனால், அவர் தன் மனைவியை விவாகரத்து செய்ய முடிவு செய்தார், இதன் மூலம் முஹம்மவது தன் மனைவியை திருமணம் செய்யமுடியும் என்று கருதினார். இந்த தலைப்பு பற்றிய விவரங்களை படிக்க இந்த கட்டுரையை சொடுக்கவும்.

 


 
 
சிறந்த இஸ்லாமிய விரிவுரையாளர்களில் ஒருவராக கருதப்படும், "அல் குர்துபி (al-Qurtubi)" என்பவர், முஹம்மதுவிற்கு அல்லாஹ் கொடுத்த "சலுகைகளை" பட்டியலிடுகிறார். இஸ்லாமிய விரிவுரையாளர் அல் குர்துபி அவர்கள் சூரா 33:50க்கு கொடுத்த விரிவுரையை கீழே காணலாம். (எழுத்துக்களில் தடிமனம் (bold), மற்றும் அடிக்கோடு (underline) நம்முடையது)

 
 
…அன்றியும் முஃமினான ஒரு பெண் நபிக்குத் தன்னை அர்ப்பணித்து, நபியும் அவளை மணந்து கொள்ள விரும்பினால் அவளையும் (மணக்க நாம் உம்மை அனுமதிக்கின்றோம்) இது மற்ற முஃமின்களுக்கன்றி உமக்கே (நாம் இத்தகு உரிமையளித்தோம்; மற்ற முஃமின்களைப் பொறுத்தவரை)…
 
 
 
இறைத்தூதருக்கு அல்லாஹ் அனுமதித்த 16 சலுகைகள் அல்லது தனிப்பட்ட கட்டளைகள் கீழ் கண்ட விதமாக உள்ளது.
 
 
 
 
1) போரில் கிடைத்த பொருட்களை பங்கிடுவதில் நேர்மையாக இருத்தல்

 
 
2) போரில் கிடைத்த பொருட்களில் ஐந்தில் ஒரு பங்கை அல்லது ஐந்தில் ஒரு பங்கின் ஐந்தில் ஒரு பங்கை எடுத்துக்கொள்ளலாம்.

 
 
3) அல் விசல் - Al Wisal (திமிட்ரியஸ்: இது நோம்பை அல்லது உணவு உண்ணாமல் இருப்பதைக் குறிக்கும்)

 
 
4) நான்கு மனைவிகளை விட அதிகமான பெண்களை திருமணம் செய்துக்கொள்ளுதல்

 
 
5) தன்னை முஹம்மதுவிற்கு அற்பணித்தேன் என்று வாய்வழியாக அறிக்கை செய்தபெண்ணை திருமணம் செய்துக்கொள்ளுதல், அவளுடன் தாம்பத்தியத்தில் ஈடுபடுதல் ("Yas-tan-kih").

 
 
6) ஒரு பெண்ணின் பாதுகாப்பாளரின் அனுமதியின்றி, அவரது முன்னிலையில் அல்லாமலும் அப்பெண்ணை திருமணம் செய்துக்கொள்ள நபிக்கு அனுமதியுண்டு ("Yas-tan-kih")

 
 
7) மஹர் கொடுக்காமலேயே ஒரு பெண்ணை திருமணம் செய்துக்கொள்ளும் உரிமை ("Yas-tan-kih").

 
 
8) மார்க்க சுத்திகரிப்பு நாட்களிலும், ஒரு பெண்ணை திருமணம் செய்துக்கொண்டு, உடலுறவில் ஈடுபட அனுமதியுண்டு.

 
 
9) தான் செய்த சத்தியத்தை முறித்துக்கொண்டு தன் மனைவிகளை மறுபடியும் சேர்த்துக்கொள்ள அனுமதியுண்டு.

 
 
10) முஹம்மது ஒரு பெண்ணைக் கண்டு அப்பெண்ணை விரும்பினால், முஹம்மது அவளை திருமணம் செய்துக்கொள்ளவேண்டும் என்பதற்காக,அப்பெண்ணின் கணவன் அவளை விவாகரத்து செய்யவேண்டும். இபின் அல் அரபி கூறுகையில், "இதைத் தான் இரண்டு பரிசுத்த மசூதிகளின் தாசரும் கூறினார், மற்றும் ஜையத் கதையில் வரும் நிகழ்ச்சியும் இப்படிப்பட்ட பொருளில் வந்ததே என்று அறிஞர்களும் கூறுகிறார்கள்".

 
 
11) இறைத்தூதர் போரில் பிடிப்பட்டிருந்த ஷபியாவை விடுதலையாக்கினார், இந்த விடுதலையானது, ஷபியாவின் மஹராக கருதினார்.

 
 
12) மார்க்க சுத்திகரிப்பு இல்லாமல் மக்காவில் நுழைய அனுமதியுண்டு.

 
 
13) மக்காவிலும் போர் புரிய அனுமதியுண்டு.

 
 
14) அவரின் சொத்துக்களை யாரும் சுவிகாரம் பெறமுடியாது. அதாவது ஒரு மனிதன் வியாதியின் காரணமாக மரணத்தை நெருங்கும் போது, அவரது அனைத்து சொத்துக்களும் எடுத்துக்கொள்ளப்படும், அவருக்கு மூன்றில் ஒரு பாகம் மட்டுமே இருக்கும். ஆனால், இறைத்தூதருக்கு இப்படியில்லாமல், அவரின் சொத்துக்கள் அனைத்தும் எடுத்துக்கொள்ளப்படாமல் அவருடையதாகவே இருக்கும். இதனை நாம் "சொத்துக்களை பிரித்துக்கொடுக்கும் வசனங்களிலும், சூரத் மரியம் அத்தியாயத்திலும் காணலாம்.

 
 
15) முஹம்மதுவின் மரணத்தின் பிறகும் அவரது திருமண பந்தங்கள் இரத்து செய்யப்படாது.

 
 
16) ஒரு பெண்ணை முஹம்மது விவாகரத்து செய்தால், அப்பெண் அதன் பிறகு வேறு எந்த நபரையும் திருமணம் (நிக்காஹ்) செய்துக்கொள்ளக்கூடாது, வாழ்நாள் முழுவதும் அப்படியே இருக்கவேண்டும்.
 
 
 
"Yas-tan-kih" என்ற வார்த்தை "Yan'kah" என்ற வார்த்தையிலிருந்து வந்தது. இது பல உருவங்களில் வருகிறது, உதாரணத்திற்கு, "Ajab" என்ற வார்த்தையை "Ista-jab" என்றும் அழைப்பது போல, இவ்வார்த்தையை "Nakaha" மற்றும் "Istan-kaha" என்றும் கூறலாம். "என்னை திருமணம் செய்துக்கொள்கிறாயா?" அல்லது "என்னோடு உடலுறவு கொள்கிறாயா?" என்று பொருள்படும்படி கூற‌ "Istan-kaha" என்ற‌ வார்த்தையை பயன்படுத்த‌ அனுமதியுண்டு. (ஆதாரம்).

 
அரபி மூலம்:
 
 
 
وَأَمَّا مَا أُحِلَّ لَهُ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ فَجُمْلَته سِتَّة عَشَرَ : الْأَوَّل : صَفِيّ الْمَغْنَم . الثَّانِي : الِاسْتِبْدَاد بِخُمُسِ الْخُمُس أَوْ الْخُمُس . الثَّالِث : الْوِصَال . الرَّابِع : الزِّيَادَة عَلَى أَرْبَع نِسْوَة . الْخَامِس : النِّكَاح بِلَفْظِ الْهِبَة . السَّادِس : النِّكَاح بِغَيْرِ وَلِيّ . السَّابِع : النِّكَاح بِغَيْرِ صَدَاق . الثَّامِن : نِكَاحه فِي حَالَة الْإِحْرَام . التَّاسِع : سُقُوط الْقَسْم بَيْن الْأَزْوَاج عَنْهُ , وَسَيَأْتِي . الْعَاشِر : إِذَا وَقَعَ بَصَره عَلَى اِمْرَأَة وَجَبَ عَلَى زَوْجهَا طَلَاقهَا , وَحَلَّ لَهُ نِكَاحهَا . قَالَ اِبْن الْعَرَبِيّ : هَكَذَا قَالَ إِمَام الْحَرَمَيْنِ , وَقَدْ مَضَى مَا لِلْعُلَمَاءِ فِي قِصَّة زَيْد مِنْ هَذَا الْمَعْنَى . الْحَادِيَ عَشَرَ : أَنَّهُ أَعْتَقَ صَفِيَّة وَجَعَلَ عِتْقهَا صَدَاقهَا . الثَّانِي عَشَرَ : دُخُول مَكَّة بِغَيْرِ إِحْرَام , وَفِي حَقّنَا فِيهِ اِخْتِلَاف . الثَّالِث عَشَر : الْقِتَال بِمَكَّة . الرَّابِع عَشَر : أَنَّهُ لَا يُورَث . وَإِنَّمَا ذُكِرَ هَذَا فِي قِسْم التَّحْلِيل لِأَنَّ الرَّجُل إِذَا قَارَبَ الْمَوْت بِالْمَرَضِ زَالَ عَنْهُ أَكْثَرُ مِلْكه , وَلَمْ يَبْقَ لَهُ إِلَّا الثُّلُث خَالِصًا , وَبَقِيَ مِلْك رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ عَلَى مَا تَقَرَّرَ بَيَانه فِي آيَة الْمَوَارِيث , وَسُورَة " مَرْيَم " بَيَانه أَيْضًا . الْخَامِسَة عَشَر : بَقَاء زَوْجِيَّته مِنْ بَعْد الْمَوْت . السَّادِس عَشَر : إِذَا طَلَّقَ اِمْرَأَة تَبْقَى حُرْمَته عَلَيْهَا فَلَا تُنْكَح .

" أَنْ يَسْتَنْكِحهَا " أَيْ يَنْكِحهَا , يُقَال : نَكَحَ وَاسْتَنْكَحَ , مِثْل عَجِبَ وَاسْتَعْجَبَ , وَعَجِلَ وَاسْتَعْجَلَ . وَيَجُوز أَنْ يَرِد الِاسْتِنْكَاح بِمَعْنَى طَلَب النِّكَاح , أَوْ طَلَب الْوَطْء .
 
 
முடிவுரை
 
 
முஹம்மதுவிற்கு அல்லாஹ் அனேக சலுகைகளைக் கொடுத்தார், இவைகளில் சில சலுகைகள் அல்லாஹ்வின் கட்டளைகளை முறித்தும் விடுகின்றன. உதாரணத்திற்கு சொல்லவேண்டுமானால், நான்கிற்கும் அதிகமான மனைவிகளை வைத்துக்கொள்ளும் சலுகையைச் சொல்லலாம். மேலே நாம் கண்ட சலுகைகளில் மிகவும் தர்மசங்கடமான சலுகை என்னவென்றால், முஹம்மது ஒரு பெண்ணை விரும்பினார் மற்றும் திருமணம் செய்துக்கொள்ள விரும்புகிறார் என்பதற்காக, அப்பெண்ணின் கணவன் அவளை விவாகரத்து செய்யச் சொல்லும் சலுகையாகும். இந்த விளக்கம் தவறானது, இது அல் குர்துபி அவர்களின் தவறான விரிவுரை/விளக்கமாகும் என்றும், அல்லாஹ் முஹம்மதுவிற்கு ஜைனப்பை திருமணம் செய்து ஜையத்தை விவாகரத்து செய்தவிதம் குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளது என்றும் இஸ்லாமியர்கள் வாதம் புரியமுடியாது. ஏனென்றால், இஸ்லாமியபாரம்பரிய நூல்கள் மேலதிக விவரங்களை நமக்குத் தருகின்றன, அதாவது, ஜைனப்பை முதலில் முஹம்மது ஆசைப்பட்டார் இதனால் ஜையத் விவாகரத்து செய்ய நேரிட்டது என்று தெளிவாக பாரம்பரியங்கள் விளக்குகின்றன.

 
 
இதுமட்டுமல்ல, இன்னும் விஷயம் மோசமாக மாறுகிறது, அதாவது சில குறிப்பிட்ட இடங்களில் குர்ஆன் விபச்சாரம் செய்யமும் அனுமதி அளிக்கிறது.
 
 
இன்னும் (போரில் பிடிபட்டு உங்கள் ஆதரவிலிருக்கும்) அடிமைப் பெண்களைத் தவிர, கணவனுள்ள பெண்களை நீங்கள் மணமுடிப்பது விலக்கப்பட்டுள்ளது. (இவையனைத்தும்) அல்லாஹ் உங்கள் மீது விதியாக்கியவையாகும். இவர்களைத் தவிர, மற்றப் பெண்களை, தவறான முறையில் இன்பம் அனுபவிக்காமல், அவர்களுக்கு உங்கள் செல்வங்களிலிருந்து (மஹராக) கொடுத்துத் (திருமணம் செய்யத்) தேடிக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே இவ்வாறு (சட்டப்பூர்வமாக மணந்து கொண்ட) பெண்களிடமிருந்து நீங்கள் சுகம் அனுபவிப்பதால் அவர்களுக்காக (விதிக்கப்பட்ட மஹர்)தொகையைக் கடமையாக கொடுத்து விடுங்கள். எனினும் மஹரை பேசி முடித்தபின் அதை(க் கூட்டவோ அல்லது குறைக்கவோ) இருவரும் சம்மதித்துக் கொண்டால் உங்கள் மேல் குற்றமாகாது - நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தோனும், ஞானமுடையோனுமாக இருக்கிறான். (குர்ஆன் 4:24) 
 
 
இந்த வசனம் முஹம்மதுவிற்கும், மற்றும் எல்லா முஸ்லீம்களுக்கும் கொடுக்கப்பட்டது என்பதினால், முஹம்மதுவும், இதர இஸ்லாமியர்களும் தங்களுக்கு போரில் கிடைத்த அல்லது தங்களிடம் அடிமைகளாக இருக்கும் திருமணமான இதரபெண்களோடு விபச்சாரம் செய்ய (உடலுறவு) கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள்.

 
 
இதில் இன்னும் வேதனையான, சகிக்கமுடியாத விஷயம் என்னவென்றால், இன்றுவரை இந்த கட்டளை இரத்து செய்யப்படவில்லை, அதாவது தற்காலத்திலும் போரில் பிடிபட்ட அல்லது அடிமைகளாக இருக்கும் திருமணமான பெண்களை கற்பழிக்க முஸ்லீம்களுக்கு அனுமதியுண்டு. இந்த தலைப்பு பற்றிய விவரங்கள் அறிய இக்கட்டுரையை படிக்கவும்.

 
 
ஆக, இஸ்லாமிய இறைவனாகிய அல்லாஹ் தன் இறைத்தூதர் தன் அயலானின் மனைவி மீது ஆசைக் கொள்ள அனுமதித்துள்ளார் இதனால் அவர் தன் உள்ளத்தில் விபச்சாரம் செய்துள்ளார்.(உண்மையில் இந்த பெண் முஹம்மதுவின் வளர்ப்பு மகனின் மனைவியாவாள்). இதுமட்டுமல்லாமல், அல்லாஹ் முஹம்மதுவோடு கூட, இதர இஸ்லாமியர்களும் (இன்றைய இஸ்லாமியர்களும்) தங்களுக்கு போரில் கிடைக்கும் திருமணமான பெண்களோடு அல்லது அடிமைப்பெண்களோடு விபச்சாரம் செய்ய அனுமதி கொடுத்துள்ளார். உண்மையான இறைவேதமாம் பைபிளின் வெளிச்சத்தில் இதை கண்டால், அல்லாஹ் என்பவர் ஆபிரகாமின், ஈசாக்கின், யாக்கோபின் தேவன் இல்லை என்றும், முஹம்மது என்பவர் ஒரு "உண்மையான இறைத்தூதர் (தீர்க்கதரிசி) இல்லை" என்றும் நாம் முடிவு எடுக்க தள்ளப்படுகிறோம்.
 
 

இந்த தலைப்பு பற்றிய இதர கட்டுரைகள், விவாதங்களை இங்கு படிக்கவும்:
 
 
 
 
 
சாம் ஷமான் அவர்களின் இதர கட்டுரைகள்

 
© Answering Islam, 1999 - 2009. All rights reserved.
 
 


 


Friday, October 30, 2009

பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை

 

ஒரு கிறிஸ்தவ பார்வை



செப்டம்பர் 11ம் தேதியன்று நடந்த சம்பவத்திற்கு பிறகு, வன்முறை மற்றும் மதம் பற்றிய கருத்து பரிமாற்றங்கள் விவாதங்கள் சூடு பிடித்துள்ளன. இஸ்லாமின் பெயரில் நடக்கும் வன்முறைகளை இஸ்லாமியர்கள் நியாயப்படுத்துகிறார்கள். இறைவனின் பெயரில் நடக்கும் இப்படிப்பட்ட வன்முறைகளை குர்‍ஆனையும், முஹம்மதுவின் வாழ்க்கை சம்பவங்களைக் காட்டி இஸ்லாமியர்கள் நியாயப்படுத்த முயற்சிக்கிறார்கள். இதனை கிறிஸ்தவர்களும் மற்றும் சமுதாயத்தின் நன்மைக்காக பாடுபடும் சிலரும் கண்டிக்கும் போது, உடனே இஸ்லாமியர்கள் "பைபிளில் வன்முறை உள்ளது, முக்கியமாக பழைய ஏற்பாட்டில் உள்ளது , சபையின் சரித்திரங்களில் கூட வன்முறை இருக்கிறது, எனவே பைபிளை விட்டுவிட்டு குர்‍ஆனின் வன்முறையை மட்டும் அதிகப்படுத்திக் காட்டுவது சரியானது அல்ல என்று கூறுகிறார்கள்.



ஒரு எடுத்துக்காட்டு சொல்லவேண்டுமானால், பரீத் ஜகரியா என்பவர், நியூஸ் வீக் (News Week) என்ற பத்திரிக்கையில் "அவர்கள் நம்மை ஏன் எதிர்க்கின்றனர், இஸ்லாமிய வன்முறையின் வேர் எது? இதைக் குறித்து நாம் என்ன செய்யவேண்டும்" என்ற தலைப்பிட்ட கட்டுரையில் கீழ் கண்ட விதமாக எழுதுகிறார்.


"சரித்திர ஆசிரியர் பால் ஜான்சன் என்பவர், 'இஸ்லாம் ஒரு கொடூரமான தீவிர வன்முறையைக் கொண்ட மற்றும் சகிப்புத் தன்மையற்ற மதமாக உள்ளது' என கூறுகிறார். ஆனால், இதர அறிஞர்கள் இதனை மறுத்து, 'இஸ்லாம் பாமர மக்கள் கொல்லப்படுவதை எதிர்க்கிறது மற்றும் தற்கொலை செய்துக்கொள்வதற்கு தடைவிதிக்கிறது' என்றுச் சொல்கிறார்கள். இப்போது "உண்மையான இஸ்லாம்" எது என்று தேடுவதினாலேயோ அல்லது குர்‍ஆனிலிருந்து அனேக வசனங்களை மேற்கோள் காட்டுவதினாலேயோ எந்தப் பிரச்சனையும் தீரப்போவதில்லை. குர்‍ஆன் என்பது பெரிய புத்தகம், குழப்பம் தரக்கூடிய கவிதை நடையில் உள்ள புத்தகம் மற்றும் பல முரண்பாடுகளைக் கொண்ட (பைபிளைப் போல) ஒரு புத்தகமாகும்". குர்‍ஆனில் நீங்கள் யுத்தங்களை எதிர்க்கக்கூடிய வசனங்களை காணமுடியும், மற்றும் சண்டைப்போடுவதை தூண்டும் வசனங்களையும் காணமுடியும். இன்னும் சகிப்புத்தன்மை பற்றிய அழகான வசனங்களையும் காணமுடியும், அதே நேரத்தில் இஸ்லாமியரல்லாதவர்களை தாக்கும் பற்றி கடுமையான வசனங்களையும் காணமுடியும்.


குர்‍ஆனிலிருந்து மேற்கோள் காட்டப்படும் வசனங்களை வைத்து, இஸ்லாமை அல்ல, இதற்கு பதிலாக,இந்த வசனங்களை மேற்கோள் காட்டக்கூடிய நபரைப் பற்றி அதிகமாக அறிந்துக்கொள்ளலாம். ஒவ்வொரு மதமும் அனேக நல்ல விஷயங்களை தன்னிடம் கொண்டுள்ளது, அதே போல, மனித இனத்திற்கு எதிரான விவரங்களையும் கொண்டுள்ளது. கிறிஸ்தவ சபையின் மிக நீண்ட சரித்திர பின்னணியைக் கண்டால், அதில் யூதர்களுக்கு எதிரான சண்டைகளை அது ஆதரித்துள்ளது, பல அடக்குமுறையை அது ஆதரித்துள்ளது, அதே நேரத்தில் மனித உரிமைகளையும், சமுதாயத்திற்கு நன்மை செய்வதையும் அது ஆதரித்துள்ளது."



மேலே கூறப்பட்ட விமர்சனத்திற்கு கிறிஸ்தவர்கள் என்ன பதில் கூறப்போகிறார்கள்? இறைவனின் பெயரில் வன்முறையில் ஈடுபட்டு தங்கள் எதிரிகள் அழிய வேண்டும் என்று விரும்பும் இஸ்லாமிய தீவிரவாதிகள்/இதர தீவிரவாதிகள் பின்பற்றும் வேதத்திற்கும் கிறிஸ்தவர்களின் வேதத்திற்கும் வித்தியாசமே இல்லையா? நம்முடைய சபையின் இருண்ட சரித்திரத்தைப் பற்றியும், பழைய ஏற்பாட்டில் சில உவமைகளாகவும் படங்களாகவும் சொல்லப்பட்ட கருத்துக்களுக்கு நாம் எப்படி பதில் தரப்போகிறோம்? நம்முடைய பாரம்பரிய சபை சரித்திரம் அதிக வெளிச்சத்தில் இல்லாமல் காணப்படுகிறதே! இதற்கு நம்முடைய பதில் என்ன? இப்படிப்பட்ட கேள்விகளின் விளைவு தான் இந்த கட்டுரையாகும். நேரமின்மையால் நான் ஒவ்வொரு தலைப்பையும் அதிகமாக விவரிக்கப்போவதில்லை, ஆனால், மேலே கண்ட பிரச்சனைகளை நாம் புரிந்துக்கொள்ள இந்த விவரங்கள் நமக்கு உதவியளிக்கும் என்று நான் நம்புகிறேன்.



1. கிறிஸ்துவின் பெயரை முன்னிலைப்படுத்தி அனேக கிறிஸ்தவர்கள் ஒரு காலத்தில் வெட்கப்படக்கூடிய காரியங்களை செய்துள்ளார்கள் என்பதை அறியும் போது கிறிஸ்தவர்களாகிய நமக்கு வேதனையாக உள்ளது, ஆனால் பிரச்சனை என்ன தெரியுமா: "இயேசுக் கிறிஸ்துவின் பெயரை பயன்படுத்தி தங்கள் எதிரிகளை அழித்த கிறிஸ்தவர்கள், தங்கள் செயல்களை நியாயப்படுத்த ஆதாரமாக இயேசுக் கிறிஸ்துவை உதாரணம் காட்டமுடியாது, இவர்களுக்கு இயேசுவின் வாழ்க்கை, செயல்கள் மற்றும் புதிய ஏற்பாட்டின் போதனைகளிலிருந்து வன்முறையில் ஈடுபடலாம் என்பதற்கு ஒரு ஆதாரமும் கிடைக்காது". ஆனால், இஸ்லாமை எதிர்ப்பவர்களை அழிக்கும் இஸ்லாமியர்களுக்கும், வன்முறையில் ஈடுபடும் இஸ்லாமியர்களுக்கும், தங்கள் வன்முறை செயல்களை நியாயப்படுத்த‌ குர்‍ஆனிலிருந்தும், அவர்களின் நபியாகிய‌ முஹம்மதுவின் போதனைகள், செயல்கள் என்றுச் சொல்லப்படும் ஹதீஸ்களிலிருந்தும் தேவையான அளவிற்கு ஆதாரங்கள் கிடைக்கும். குர்‍ஆனிலிருந்தும், ஹதீஸ்களிலிருந்தும் மற்றும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறுகளிலிருந்தும் வன்முறை வசனங்களை இக்கட்டுரையில் மேற்கோள்களாக காட்டுவது இக்கட்டுரையின் வரைமுறைக்கு அப்பாற்பட்டது (இந்த விவரங்கள் தேவை என்றுச் சொல்லும் வாசகர்கள் இந்த தொடுப்புக்களில் சென்று படித்துப்பார்த்துக் கொள்ளவும், 1. முஹம்மதுவும் அவரது எதிரிகளும் 2. இஸ்லாமும் மற்றும் தீவிரவாதமும்).


ஆனால், சந்தேகத்திற்கு இடமில்லாமல், இது மட்டும் உண்மையாகும், அதாவது, இஸ்லாமிய நபியாகிய முஹம்மது "எதிரிகளை கொல்வதையும் அவர்களை கொடுமைப் படுத்துவதையும் உற்சாகப்படுத்தினார்", இஸ்லாமியர்கள் சொல்வது போல, "அவர் தற்காப்பிற்காக அப்படி செய்தார்" என்ற ஒரு காரணத்திற்காக மாத்திரமல்ல‌, அல்லாஹ்வின் பெயரிலும் இஸ்லாமை பரப்பவேண்டும் என்பதற்காகவும் அவர் வன்முறையையும் கொடுமைப்படுத்துவதையும் கையாண்டுள்ளார். இஸ்லாமிய இறைத்தூதராகிய முஹம்மதுவின் செயல்கள் அனைத்தும் இயேசுக் கிறிஸ்துவின் மற்றும் அவரது சிடர்களின் செயல்களுக்கும் நேரடி எதிர்மறை என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை.


இதனால், கிறிஸ்தவர்கள் வன்முறையில் மற்றும் இதர செயல்களில் ஈடுபடவில்லை என்று இதன் அர்த்தமில்லை. கிறிஸ்தவர்கள் பல பயங்கரமான செயல்களில் ஈடுபட்டுள்ளனர், ஆனால், அவர்கள் இப்படிப்பட்ட செயல்களைச் செய்யும் போது, அவர்கள் யாரை பின் பற்றுகிறார்களோ (இயேசுவை) அவரின் முதுகில் குத்தியுள்ளார்கள், அவரை காயப்படுத்தியுள்ளார்கள், நம்பிக்கை துரோகம் செய்துள்ளார்கள். ஆனால், இதே போல செயல்களை இஸ்லாமியர்கள் செய்யும் போது, தங்கள் நபியின் வாழ்க்கையை உதாரணத்தை நாங்கள் பின்பற்றுகிறோம் என்று அவர்கள் சொல்கிறார்கள், நாங்கள் அல்லாஹ்வின் விருப்பத்தை நிறைவேற்றுகிறோம் மற்றும் அல்லாஹ்விற்காக செய்கிறோம் என்றுச் சொல்கிறார்கள். இது தான் உண்மையிலேயே இரண்டிற்கும் இடையே உள்ள மிகப்பெரிய வித்தியாசமாகும்!



2. இப்போது நாம் பழைய ஏற்பாட்டின் யோசுவா புத்தகத்திலுள்ள வசனங்களைக் குறித்து கவனிப்போம். கானானியர்களை துரத்தியடித்த போர்களைக் குறித்து நாம் அனேக வசனங்களை காணலாம். இப்படி இருந்தும் யோசுவாவின் நிகழ்ச்சிகளுக்கும் இஸ்லாமின் ஆரம்ப கால நிகழ்ச்சிகளுக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பதை நாம் காணலாம். யோசுவா புத்தகத்தின் நிகழ்ச்சிகளின் பின்னணி, "தேவனின் பரிசுத்தம் பற்றியதாகும்". கானானை ஆக்கிரமிப்பதற்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே, தேவன் ஆபிரகாமிடம் கூறினார், அதாவது கானானியர்களின் பாவம் இன்னும் உச்சக்கட்டம் அடையவில்லை, அதாவது என்னிடம் வந்தடையவில்லை, அது முழுமையடையவில்லை, அவர்கள் தேசத்தை தங்கள் பாவங்களால் நிரப்பி பாழாக்கும் போது, தேசம் அவர்களை புறந்தள்ளிப்போடும் என்றுச் சொன்னார். இதே போல, தேவன் இஸ்ரவேல் தேசத்திற்கும் இப்படியே கூறினார், அதாவது "உங்களுக்கு முன்பாக இருந்த மக்களைப்போல பாவம் செய்வீர்களானால், உங்களையும் தேசம் புறந்தள்ளிப்போடும்" என்று எச்சரிக்கை செய்தார். ஆகையால், தேசத்தில் அக்கிரமம் பெருகி பாவம் பெருகியபோது, இஸ்ரவேல் மக்களைக்கொண்டு கானானியர் மீது தன் நியாயத்தீர்ப்பை தேவன் கொண்டு வந்தார். பிறகு, இதே போல அசீரியர்களைக் கொண்டும், பாபிலோனியர்களைக் கொண்டும், இஸ்ரவேல் மக்களின் பாவங்களுக்காக அவர்கள் மீது நியாயத்தீர்ப்பைக் கொண்டு வந்து இஸ்ரவேலர்களை அழித்தார்.


ஆனால், முஹம்மதுவின் வழிப்பறி கொள்ளைகளையும், போர்களையும் இஸ்லாமிய ஆரம்ப கால நிகழ்ச்சிகளையும் ஒருவர் படிப்பாரானால், மக்களின் பாவங்கள் பெருகினதினாலே, இறைவன் த‌ன் நியாயத்தீர்ப்பை முஹம்மது மூலமாக கொண்டுவந்தார் என்ற ஒரு மையக்கருத்தை நாம் காணமுடியாது. இதற்கு பதிலாக, முஹம்மது ஈடுபட்ட அனைத்து போர்களின் முக்கிய நோக்கம், எதிரிகளை கொல்வது, அவர்களது பொருட்களை அபகரிப்பது, சொர்க்கத்தை அடையவேண்டும் என்ற நோக்கத்தோடு போரிடுதல், எதிரி நாடுகளை பிடித்தல், மற்றும் இஸ்லாமிய நபியின் ஆட்சியை பரவச்செய்தல் போன்றவைகளாகத் தான் இருந்தது. இஸ்லாமுக்கு எதிராக யாரோ சொன்ன விவரங்களை நான் இப்போது கிளிப்பிள்ளையைப் போல சொல்லவில்லை. இப்போது தான் நான் மிகவும் பழமைவாய்ந்த இஸ்லாமிய காலத்தின் இரண்டாம் நூற்றாண்டின் முஹம்மதுவின் சரிதையை படித்து முடித்துள்ளேன் (translated by A. Guillaume and published by Oxford University Press in 1955). நீங்கள் இஸ்லாமியராக இருந்தாலும், அல்லது இஸ்லாமியரல்லாதவராக இருந்தாலும் இந்த புத்தகத்தை படிக்கவேண்டும் என்று நான் உங்களை உற்சாகப்படுத்துகிறேன், ஏனென்றால், முஹம்மதுவின் நடத்தைகளில் உள்ள வன்முறையையும், அவரது ஆரம்பகால சஹாபாக்களின் நடக்கையில் உள்ள வன்முறையை நீங்களே படித்து தெரிந்துக்கொள்ளலாம்.



3. இன்னொரு முக்கியமான விவரத்தை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும், அது என்னவென்றால், கானானிய சில பட்டணங்களை அழிக்கும் படி தேவன் கொடுத்த கட்டளையானது, ஒரு குறிப்பிட்ட மக்களுக்கும், ஒரு குறிப்பிட்ட நேரத்திலும் மற்றும் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கும் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக மட்டுமே கொடுக்கப்பட்டது. பழைய ஏற்பாட்டில் வேறு எங்கும் தேவன் இஸ்ரவேல் நாடானது, மற்ற நாடுகள் மீது தானாகச் சென்று போர் தொடுக்கவேண்டும் என்று சொல்லவில்லை. அதாவது, தற்காப்பிற்காகவோ, அல்லது வானத்தையும் பூமியையும் உண்டாக்கிய இஸ்ரவேலின் தேவன் பற்றிய நம்பிக்கையை பரப்புவதற்காகவோ கூட தேவன் இப்படி மற்றவர்களின் நாடுகளின் மீது வலியச் சென்று சண்டையிடுங்கள் என்றுச் சொல்லவில்லை. ஆனால், குர்‍ஆனில் பல பொதுவான வசனங்களை நாம் காணலாம், அதாவது இஸ்லாமின் எதிரிகளை எல்லா காலங்களிலும் எல்லா இடங்களிலும் எல்லா மக்களையும் கொல்லும் படியான வசனங்கள் குர்‍ஆனில் உண்டு. முஹம்மதுவின் மரணத்திற்குப் பிறகு அவரை பின்பற்றினவர்கள் தனித்தனியாக பிரிந்துச் சென்று ஒருவரை ஒருவர் சண்டையிட்டு ஒருவரையொருவர் கொன்றுபோட்டதும், கொலைகள் செய்துக்கொண்டதும் சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிருபனமாகிறது. இஸ்லாமிய சரித்திரத்தில், அன்று முதன் இன்றுவரை தங்கள் எதிரிகளை அழித்து கொல்லும் இஸ்லாமியர்கள் தங்களின் இந்த வன்முறைகளுக்கு ஆதரவாக இஸ்லாமிய வசனங்களையே ஆதாரமாக காட்டி வருகின்றனர்.



4. இந்த சிறிய கட்டுரையை இஸ்லாமியர்கள் "உண்மை என்று நம்பும் தங்கள் கோட்பாட்டை" சொல்லி நிறைவு செய்யலாம் என்று விரும்புகிறேன். இஸ்லாமியர்களை பொருத்தமட்டில், இஸ்லாம் மட்டுமே கடைசியான ஓர் இறைக்கொள்கையுடைய மார்க்கமாகும், இதனால், இஸ்லாம் யூத மற்றும் கிறிஸ்தவத்தை விட உயர்ந்தது என்று நம்புகிறார்கள். மத்திய கிழக்கு நாட்டில் வாழ்ந்துக்கொண்டு இருப்பதாலும், இஸ்லாமிய நாட்டில் நான் வளர்ந்தவன் என்பதாலும், எங்களுக்கு அடிக்கடி கீழ் கண்டவிதமாக கூறுவார்கள். அதாவது, யூத மார்க்கம் என்பது ஒரு ஆரம்ப பள்ளியைப் போன்றது, கிறிஸ்தவ மார்க்கம் என்பது மேல்நிலைப்பள்ளியைப் போன்றது, மற்றும் இஸ்லாம் என்பது பல்கலைக் கழகத்தைப் போன்றது என்று கூறுவார்கள். இந்த எல்லா மார்க்கமும் இறைவனிடமிருந்து வந்தது, ஆனால், ஒவ்வொரு மார்க்கமும் தனக்கு முன்பு இருந்த மார்க்கத்தைவிட சிறந்ததாக விளங்கியது என்று கூறுவார்கள். ஆனால், இப்போது நாம் கேட்கவேண்டிய கேள்வி என்னவென்றால், புதிய ஏற்பாட்டின் கோட்பாடுகள் கட்டளைகளை விட எந்த விதத்தில் இஸ்லாம் சிறந்த நற்குணங்களை, கட்டளைகளை கொண்டு விளங்குகிறது? அதாவது இஸ்லாம் வன்முறையை பின்பற்றுகிறது, இது ஒரு வகையில் யூத பாரம்பரியங்களில் காணப்பட்டது போல இருக்கின்றதே! எப்படி இஸ்லாம் கிறிஸ்தவத்தை விட சிறந்ததாக இருக்கமுடியும்? இஸ்லாம் இயேசுக் கிறிஸ்துவின் மற்றும் புதிய ஏற்பாட்டின் போதனைகளுக்கு மேலாக இன்னும் சிறந்த மார்க்கமாக இல்லாமல் போனதுமட்டுமல்ல, இந்த நன்னடத்தையில் இஸ்லாம் இன்னும் கிறிஸ்தவத்திற்கு முன்னால் அனேக நூற்றாண்டுகள் பின் தங்கியுள்ளது.



தற்காலத்தில் குர்‍ஆன் மற்றும் பைபிளில் காணப்படும் வன்முறையைப் பற்றி ஒரு சில சந்தேகங்களுக்கு இந்த சிறிய கட்டுரை உதவி செய்யும் என்று நான் நம்புகிறேன். கிறிஸ்தவர்களாகிய நாம் இந்த உலகையும், பைபிளையும் மற்றும் எதையானாலும் காணக்கூடிய கண்ணாடியாக இயேசுக் கிறிஸ்துவின் சிலுவையுள்ளது. கடைசியாக, இந்த சிலுவைத் தான் இறைவன் யார் என்று நமக்கு காட்டுகிறது, அவர் எப்படி இருப்பார் என்று காட்டுகிறது, அவர் எப்படி நம்மை இவ்வுலகத்திலிருந்து மீட்டெடுத்தார் என்பதை இதே சிலுவைத்தான் நமக்கு காட்டுகிறது.


ஆங்கில மூலம்: Violence in the Bible and the Qur'an - A Christian Perspective



இந்த தலைப்பு சம்மந்தப்பட்ட இதர கட்டுரையை படிக்கவும்: The Goodness of God


© Answering Islam, 1999 - 2009. All rights reserved.

Tamil Source: http://www.answering-islam.org/tamil/terrorism/violence.html

 

 
 

Thursday, October 29, 2009

முஹம்மதுவின் வினோதமான போதனைகள்




முஹம்மதுவின் வினோதமான போதனைகள்: ஜகரியா பூட்ரோஸின் நேர்க்காணல்


The Strange Teachings of Muhammad By: FrontPage Magazine


Tuesday, June 02, 2009



ப்ரண்ட் பேஜ் (Front Page Magazine Interview) நேர்க்காணலின் இன்றையை விருந்தினர் காப்டிக் பாதிரியார் தந்தை ஜகரியா போட்ரோஸ் என்பவராவார். இவரை அல்-கைதா "உலக‌த்தில் அதிகமாக தேடப்பட்டுக் கொண்டு இருக்கும் இஸ்லாமியரல்லாதவர்" என்றுச் சொல்லி, இவரது தலைக்கு "60 மில்லியன் டாலர் பரிசை நிர்ணயித்துள்ளது. ஒரு புகழ்பெற்ற அரபி பத்திரிக்கை இவரை "இஸ்லாமின் எதிரி நம்பர் 1" என்று அழைக்கிறது. இவர் லைஃப் டீவி (Life TV) என்ற தொலைக்காட்சியில் "உண்மை உரையாடல்கள்" என்ற ஒரு நிகழ்ச்சியை நடத்துகிறார். இவரது இரண்டு இணைய தளங்கள் இவைகளாகும் 1. islam Christianity 2. Father zakaria dot net . இவருக்கு சமீபத்தில் "டானியேல் ஆஃப் தி இயர் – Daniel of the Year " என்ற சன்மானமும் செய்யப்பட்டது.


FrontPage: தந்தை ஜகரியா பூட்ரோஸ் அவர்களே, உங்களை ப்ரண்ட் பேஜ் நேர்க்காணலுக்கு வரவேற்க்கிறேன்.

Botros: என்னை அழைத்ததற்காக உங்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

FrontPage: நேர்க்காணலின் ஆரம்பமாக, உங்களின் சொந்த வாழ்க்கையைப் பற்றியும், இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவம் பற்றிய உங்கள் அனுபவங்கள் பற்றியும் சிறிது நேரம் பேசுவோம்.


Botros: நான் ஒரு காப்டிக் ஆவேன். என்னுடைய 20வது வயதிலே நான் ஒரு போதகரானேன். இஸ்லாமியர்களின் ஆதிக்கம் அதிகம் உள்ள எகிப்திலே கிறிஸ்தவ போதகர்களோ அல்லது இதர சமயத்தார்களோ, இஸ்லாமியர்களிடையே "சமயம்" பற்றி பேசக்கூடாது. கிறிஸ்தவத்தில் அதிகம் ஆர்வமாக இருந்த என்னுடைய மூத்த சகோதரர் இந்த உண்மையை மிகவும் தாமதமாக கற்றுக்கொண்டார். அவர் இஸ்லாமியர்களுக்கு போதித்தார், இதனால் அவர் இஸ்லாமியர்களால் தாக்கப்பட்டார், இஸ்லாமியர்கள் அவரது நாவை துண்டித்தார்கள், மற்றும் அவரை கொலை செய்தார்கள்.

இஸ்லாமியர்களை வெறுப்பதை விட, நான் அவர்களுக்கு நற்செய்தியைச் சொல்ல அதிகமாக தூண்டப்பட்டேன். இயற்கையாகவே, என்னுடைய இந்த எண்ணம் அனேக பிரச்சனைகளை கொடுத்தது. நான் தொடர்ந்து பயமுறுத்தப்பட்டேன், தூஷிக்கப்பட்டேன், சிறையில் அடைக்கப்பட்டேன், ஒரு ஆண்டு காலம் சிறைச்சாலையில் கொடுமைப்படுத்தப்பட்டேன், இதற்கெல்லாம் ஒரே காரணம், இஸ்லாமியர்களுக்கு நான் சுவிசேஷத்தைச் சொன்னதால் தான். எகிப்திய ஆதிகாரிகள், "அபோஸ்டசி" என்றுச் சொல்லக்கூடிய இஸ்லாமை விட்டு வெளியெறி கிறிஸ்தவத்திற்கு மாறுவதற்கு நான் உதவி புரிவதாக என் மீது புகார் கொடுத்தார்கள். இன்னொரு முறை நான் எகிப்திலிருந்து வேறு நாட்டிற்கு விமானத்தில் செல்ல விமான நிலையத்தில் காத்திருக்கும் போது கைது செய்யப்பட்டேன். இந்த பிரச்சனைகளினால், நான் என் சொந்த நாட்டை விட்டு ஓடி ஆஸ்திரேலியாவிலும் இங்கிலாந்திலும் சில நாட்களை கழித்தேன். கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் பற்றிய என்னுடைய வாழ்க்கை வரலாறு மிகவும் நீண்டது மற்றும் அனேக திருப்புமுனைகளைக் கொண்டது. சமீபத்தில், என் வாழ்க்கை வரலாறு (http://www.islam-christianity.net/Defynedeath.html) ஒரு புத்தகமாக வெளியிடப்பட்டது.

FrontPage: இதை நான் கேட்பதால் உங்களிடம் மன்னிப்பை கோறுகிறேன், நீங்கள் சிறைச்சாலையில் எப்படி துன்புறுத்தப்பட்டீர்கள், சிறிது விளக்கமுடியுமா?

Botros: நான் இயேசுவின் நற்செய்தியை பிரசங்கித்ததால், எகிப்திய இராணுவம் என் வீட்டிற்குள் நுழைந்து என் நெத்தியில் துப்பாக்கியை வைத்தார்கள். ஏன் என்னை கைது செய்கிறார்கள் என்பதை எனக்குச் சொல்லாமலேயே என்னை ஒரு சிறிய அறையாக இருந்த சிறைச்சாலையில் அடைத்தார்கள் (1.8 x 1.5 x 1.8 மீட்டர் அளவு கொண்ட சிறிய அறையில் அடைத்தார்கள், என் உயரம் 1.83 மீட்டர் இருந்ததால், இது எனக்கு இன்னும் அதிக பிரச்சனையாக இருந்தது). அந்த அறையில் இன்னும் அனேகர் இருந்தனர், அவ்வறையின் வெட்பநிலை 100 டிக்ரியைவிட அதிகமாக இருந்தது, வெளிச்சம் இல்லை, ஜன்னல்கள் இல்லை மற்றும் காற்றோட்டமும் இல்லை. அந்த அறையில் எந்த கட்டில்களும் இல்லை, மற்றும் நாங்கள் தரையிலேயே படுத்துக்கொண்டோம், எல்லாரும் ஒரே நேரத்தில் தூங்க அங்கு இடமில்லாமல் இருந்ததால், நாங்கள் நேரத்தை பிரித்துக்கொண்டு ஒவ்வொருவராக தூக்கினோம். ஆக்ஸிஜனும் இல்லாமல் இருந்ததால், கதவின் ஓரத்தின் உடைந்த பகுதியின் பக்கத்தில் நாங்கள் எங்கள் மூக்கை வைத்து சுவாசித்தோம். இதுவும், நாங்கள் நேரத்தை பகிர்ந்துக்கொண்டு ஒவ்வொருவராக செய்தோம். இந்த நிலையில் நான் இருந்ததால், எனக்கு கிட்னி பிரச்சனை வந்தது, அவர்கள் எந்த மருத்துவ உதவியும் செய்யவில்லை. கொசுக்கள் எங்கள் மீது உலாவின. உணவை அவர்கள் வாலிகளில் கொடுப்பார்கள். கூழ் என்றால் என்ன என்று அப்போது தான் எங்களுக்கு தெரியவந்தது. அந்த சிறைச்சலையின் பாதுகாவலன் அடிக்கடி எங்களுக்கு உணவு வழங்கும் வாலிகளில் எங்களுக்கு முன்பாகவே துப்புவான், மற்றும் மூக்கை சிந்தி அந்த வாலிகளில் போடுவான்.

FrontPage: நீங்கள் அனுபவித்த இந்த கொடுமைகளை கேட்கும் போது, எனக்கு இதயம் பதபதக்கிறது. இப்படி செய்து நீங்கள் துன்பம் அனுபவிப்பதற்கு உங்களின் முக்கியமான நோக்கம் தான் என்ன?

Botros: அதாவது "மனிதர்களின் இரட்சிப்பிற்காக" இப்படி நான் செய்கிறேன். நான் அடிக்கடி சொல்வதுண்டு, நான் எந்த அளவு இஸ்லாமை விமர்சிக்கின்றேனோ, அவ்வளவு அதிகமாக இஸ்லாமியர்களை நேசிக்கிறேன். ஆகையால், இஸ்லாமியர்களை காப்பாற்ற, இரட்சிப்படையச் செய்ய இதைவிட வேறு மார்க்கம் இல்லை, அதாவது "இஸ்லாமின் பொய்களை உலகிற்கு தெரிவிப்பதை தவிர வேறு வழியே இல்லை". உலகிற்கு நற்செய்தியைச் சொல்லும்படி, கிறிஸ்து நமக்கு கட்டளையிட்டுள்ளார். இஸ்லாமியர்களை கிறிஸ்துவிற்கு மாற்றுவது மிகவும் ஆபத்தான காரியமாகும். ஆபத்து இருக்கிறது என்பதற்காக‌ நாங்கள் அவர்களை அப்படியே அனாதைகளாக விட்டுவிடமாட்டோம். அனேக இஸ்லாமியர்கள் அதிக பக்தியுள்ளவர்களாக இருக்கிறார்கள், அவர்கள் இறைவனை திருப்திப்படுத்த விரும்புகிறார்கள், ஆனால், அவர்களுக்கு தவறான வழிகாட்டுதல் தரப்பட்டுள்ளது, அவ்வளவு தான். ஆகையால், அவர்களின் ஆர்வத்தை மதித்து, நான் அவர்களுக்கு உண்மையான வெளிச்சத்தை காட்ட முயற்சிக்கிறேன்.

FrontPage: இஸ்லாம் ஒரு "பொய்யான மார்க்கம்" என்பதை சுருக்கமாக விவரிக்கிறீர்களா?

Botros: இறையியல் முறையில் நான் ஒரு கிறிஸ்தவ பாதிரியார் ஆவேன். எனவே, கிறிஸ்தவம் மட்டுமே உண்மையைச் சொல்கிறது என்று நான் நம்புகிறேன். கிறிஸ்துவில் எனக்கு இருக்கும் நம்பிக்கையால், நான் இதர மார்க்கங்கள் மனிதர்களால் உண்டானவை என்று அவைகளை புறக்கணிக்கிறேன். இவை எல்லாவற்றிற்கும் மேலாக, முஹம்மது செய்த மிகப்பெரிய குற்றம் மற்றும் இந்தக் குற்றம் மன்னிக்கப்படாத குற்றம், என்னவென்றால், "கிறிஸ்து கொண்டு வந்த இரக்கத்தையும், கிருபையையும் அவர் மறுத்தது தான்" மற்றும் முஹம்மது மனித இனத்தை மறுபடியும் பழைய சட்டத்தின் காலத்திற்கு அழைத்துச் சென்றது தான்.

ஆனால், நம் சமய நம்பிக்கையை பக்கத்தில் வைத்துவிட்டு, பொதுவாக‌ சிந்தித்தாலும், உலகில் இருக்கும் பெரிய மதங்களில் இஸ்லாம் மட்டுமே கண்டிப்பாக தவறானதாக இருக்கும். உதாரணத்திற்கு, நான் புத்த சமயத்தில் நம்பிக்கை இல்லாதவனாக இருந்தாலும், புத்தசமயம் நல்ல கோட்பாடுகளை தருகிறது மற்றும் மக்கள் அதன் நல்ல கட்டளைகளுக்காக அதனை பின் பற்றுகிறார்கள். இதே போல இஸ்லாமுக்கு நாம் சொல்லமுடியாது. உலகில் இருக்கும் எல்லா மதங்களிலும் இஸ்லாம் மட்டுமே தன்னை பின்பற்றும் மனிதர்களை பயப்படவைத்து, அதாவது இஸ்லாமை விட்டுவெளியேறினால் உன்னை கொன்றுவிடுவேன் என்று பயமுறுத்துகிறது, மரண பயத்தை கொடுத்து இஸ்லாம் மனிதர்களை தக்கவைத்துக் கொள்கிறது. மற்றும் போரிட்டு நாடுகளை பிடிக்கும் ஆசைக் காட்டி, ஆபாசத்தில் ஈடுபட ஆசைக்காட்டி, இன்னும் பொருட்கள் கொள்ளையிட ஆசைக்காட்டி மக்களை தக்கவைத்துக்கொள்கிறது.

இஸ்லாமிய சரித்திரமே, இவைகளுக்கு சாட்சியாக ஆதாரமாக இருக்கின்றது. ஆனால், கிறிஸ்தவம் தனக்காக உயிரை விடும் கிறிஸ்தவர்களால் அவர்களின் வாழ்க்கையை தியாகம் செய்யப்பட்டு பரப்பப்பட்டது, கிறிஸ்தவர்கள் இயேசுவின் மீது நம்பிக்கை கொண்டுள்ளார்கள் என்பதாலேயே கொல்லப்பட்டனர். இஸ்லாம் வன்முறை மூலமாக பரப்பப்பட்டது, வாளின் முனையில் இஸ்லாம் பரவியது, பயத்தையும் நடுக்கத்தையும் உண்டாக்கி இஸ்லாம் பரவியது. இஸ்லாம் மனிதனின் பலவீனங்களை புரிந்துக்கொண்டு அவனுக்கு ஆசைக்காட்டி அதன் மூலமாக பரவியது. இறையியல் முறையிலும், தத்துவ ரீதியிலும் இன்னும் சரித்திர பூர்வமாகவும் இஸ்லாம் ஒரு தவறான மார்க்கம் என்பது நிருபனமாகிறது.

FrontPage: நீங்கள் உங்கள் உரையாடல்களை, விவாதங்களை இஸ்லாமிய ஆதாரங்களை முன்வைத்தே செய்கிறீர்கள். ஏன் இஸ்லாமிய போதகர்களும், இமாம்களும், தங்கள் இஸ்லாமிய நூல்கள் என்ன சொல்கின்றன என்று தெரிந்துக் கொள்வதற்கு பதிலாக, அதன் படி விவாதிப்பதற்கு பதிலாக, உங்களை ஏன் தனிப்பட்ட முறையில் தாக்குகிறார்கள்?


Botros
: இதன் பதில் தெளிவாக இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். இஸ்லாமிய ஆதாரங்கள், நூல்கள் அனைத்தும் இஸ்லாம் பற்றி அவைகளே பேசுகின்றன. உலகத்திலேயே இஸ்லாமியர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய எதிரி, அவர்களின் இஸ்லாமிய நூல்களேயாகும். அதாவது ஹதீஸ்களும், முஹம்மதுவின் சரிதைகளும் தான் அவர்களுக்கு மிகப்பெரிய எதிரியாக இருக்கின்றன. இவைகள் தான் இஸ்லாமியர்களை தர்மசங்கடமாக்குகின்றன. இந்த நாள் வரை நான் கிட்டத்தட்ட 500 தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை இஸ்லாமிய பல தலைப்புக்கள் பற்றி ஒளிபரப்பியுள்ளேன். இந்த எல்லா நிகழ்ச்சிகளிலும் நான் இஸ்லாமிய நேரடி ஆதாரங்களையும் நூல்களையும் பயன்படுத்தியுள்ளேன், அதாவது குர்‍ஆன், ஹதீஸ்கள், தஃப்சீர்கள் (இஸ்லாமிய விரிவுரைகள்) போன்றவற்றை பயன்படுத்தியுள்ளேன்.

ஆகையால், இஸ்லாமிய அறிஞர்கள் இமாம்களுக்கு என்ன செய்யமுடியும்? இஸ்லாமிய ஆதார நூல்களிலிருந்தும், ஷரியா சட்டங்களிலிருந்தும் நான் மேற்கோள் காட்டும் விவரங்களுக்கு அவர்கள் பதில் சொல்லவேண்டுமானால், அவர்களுக்கு நான் சொல்வதை ஏற்றுக்கொள்வதை தவிர வேறு வாய்ப்பு இல்லாமல் போகிறது, உதாரணத்திற்குச் சொல்லவேண்டுமானால், இஸ்லாமில் வைப்பாட்டி வைத்துக்கொள்வது சட்டபூர்வமானது, ஒட்டகத்தின் மூத்திரத்தை குடிப்பதும் ஆதார பூர்வமான விவரமாக உள்ளது, இதனை அவர்கள் அங்கீகரித்தே ஆக வேண்டும். அவர்களுக்கு இருக்கும் ஒரே வழி என்னவென்றால், நான் சொல்வதையெல்லாம் உதரித்தள்ளிவிட்டு, தனிப்பட்ட முறையில் என்னை தாக்குவது மட்டுமேயாகும்.

ஆனால், சாதாரண முஸ்லிம்கள் தங்கள் இமாம்களிடம் அறிஞர்களிடம் இந்த என் குற்றச்சாட்டுகளுக்கு பதிலைத் தாருங்கள் என்று கேட்கும் போது, பொதுவாக இஸ்லாமிய அறிஞர்கள் சொல்லும் பதில் "உங்களை பாதிக்கும் கேள்விகளை கேட்காதீர்கள்" என்பதேயாகும்.

FrontPage: ஆக, தங்கள் மத நூல்கள் சொல்வதையே புறக்கணித்துவிடும் இஸ்லாமிய அறிஞர்களும், இஸ்லாமியர்களும் பின்பற்றும் இஸ்லாமைப் பற்றி என்ன சொல்லமுடியும்? இதலிருந்து நாம் எதனை தெரிந்துக்கொள்கிறோம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

Botros: இது நமக்கு எதை காட்டுகிறது என்றால், இஸ்லாமில் நம்பிக்கை குறைவு, ஆனால், ஆட்சி அதிகாரங்கள் அதிகம் என்பதைக் காட்டுகிறது. நீங்கள் சொன்னது போல, ஒருமனிதன் தான் பின் பற்றும் நம்பிக்கையின் கோட்பாடுகளை புறக்கணித்துவிட்டு, அதற்கு வேறுவகையான அர்த்தங்களை கொடுத்துக்கொண்டு இருப்பதினால், அவனுக்கு என்ன பயன் உண்டாகமுடியும்? உண்மையைச் சொல்லவேண்டுமானால், பெரும்பான்மையான இஸ்லாமியர்களுக்கு இஸ்லாமிய நூல்களில் என்ன இருக்கிறது என்பதே தெரிவதில்லை. பொதுவாக அவர்கள் தெரிந்துக்கொண்டு இருப்பதெல்லாம் இங்கே ஒரு கட்டளை அங்கே ஒரு கட்டளை முக்கியமாக "இஸ்லாமின் ஐந்து தூண்கள்" போன்றவைகள் மட்டுமே. இதனால் தான் நான் பேசும் தலைப்புக்களை கேட்கும் இஸ்லாமியர்களுக்கு கன்னத்தில் அறைவது போன்ற ஒரு அதிர்ச்சியைத் தருகிறது. ஆனால், இவைகளை புரிந்துக்கொள்ளாத இஸ்லாமியன் "எங்களுக்கு அவர்கள் எதிரி" என்றுச் சொல்லி, உண்மை எதுவாக இருந்தாலும் சரி, அதைப் பற்றி கவலைப்படாமல் என்னை கொலை செய்ய முயற்சி எடுப்பான். அதே போல, உண்மையான சத்தியம் எது என்று விரும்பும் இஸ்லாமியர்கள், சத்தியத்தை தேடும் இஸ்லாமியர்கள், இஸ்லாமின் உண்மை நிலையை அறிந்துகொண்டு, 1400 ஆண்டுகளாக நம்பிக்கொண்டு இருந்த மிகப்பெரிய பொய்யிலிருந்து விடுபட்டு சத்தியத்தை நோக்கி வெற்றி நடை போடுகிறார்கள்.

ஒரு நேர்மையான கேள்வி என்னவென்றால், ஏன் இஸ்லாமிய உலேமாக்கள் போதகர்கள், இந்த விஷயங்களை எல்லாம் சாதாரண இஸ்லாமியர்களிடமிருந்து மறைக்கிறார்கள்? ஏன் இஸ்லாமியரல்லாதவர்களிடமிருந்து மறைக்கிறார்கள் என்பதேயாகும்? உண்மை யாரிடம் எதிர்ப்பார்க்க முடியும் என்று ஒருவர் சிந்தித்தால், "உலேமாக்களிடம் தான் எதிர்ப்பார்க்கமுடியும்" என்பது தான் பதிலாக இருக்கும். ஆனால், உண்மையில் உலேமாக்கள் உண்மையை மறைத்துவிடுகிறார்கள். ஒரு உதாரணத்தைச் சொல்லவேண்டுமானால், எப்போதெல்லாம் ஒரு இஸ்லாமிய நூலிலிருந்து நான் ஒரு பிரச்சனையுள்ள மற்றும் இஸ்லாமியர்களுக்கு தர்மசங்கடமான விவரத்தை மேற்கோள் காட்டுகின்றேனோ, உடனே இஸ்லாமிய உலக‌ அரபி நூலகங்களிலிருந்து அந்த நூல் மாயமாக மறைந்துவிடும்.

ஒரு அடிப்படை என்னவென்றால், அனேக இஸ்லாமியர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால், "இஸ்லாம் என்பது இந்த உலகில் சத்தியத்திற்காக ஆன்மீக வாழ்க்கையை வாழ்வைதை விட, கேள்வி கேட்காமல் இஸ்லாமை பின்பற்றினால் போதும், எதிர் காலத்தில் கிடைக்கும் சொர்க்கம் மட்டுமல்ல, இந்த பூமியிலும் கூட தங்களுக்கு வெற்றியும், மரியாதையும் அதிகாரமும் கிடைக்கும் என்று நம்புகிறார்கள்".

FrontPage: நீங்கள் ஒரு முறை ஒரு இஸ்லாமிய பெண் ஆண்களுக்கு பாலுட்டலாம் என்ற ஹதீஸ் பற்றி சொல்லியுள்ளீர்கள். உண்மையாக அது என்ன விவரம், இதைப் பற்றி உலேமாக்கள் (கடந்தகால நிகழ் கால உலேமாக்கள்) இதைப் பற்றி என்ன கூறுகிறார்கள்?

Botros: நான் இதற்கு முன்னால் சொன்ன விவரத்திற்கு இது சரியான ஒரு எடுத்துக்காட்டாகும். நான் இந்த "இஸ்லாமிய பெண்கள் ஒரு புதிய மனிதருக்கு பால் ஊட்டலாம்" என்ற ஹதீஸ் பற்றிய பிரச்சனையை வெளிக்காட்டியபோது, உலேமாக்கள், தங்கள் இஸ்லாமிய ஹதீஸைப் பற்றி சிந்திப்பதை விட்டுவிட்டு என்னை தாக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஏன் இப்படி செய்கிறார்கள் என்று கேட்டால், அவர்களிடம் சரியான பதில் இல்லை. தங்கள் நூல்களில் இருக்கும் பிரச்சனைகளை அலசுவதை விட என்னை தாக்கி பேசுவது அவர்களுக்கு சுலபமான வழியாகும்.

கடந்த காலத்திலும் சரி, நிகழ் காலத்திலும் சரி, உலேமாக்கள் இந்த கீழ்தரமான பழக்கத்தை ஆதரித்துவந்தார்கள், இதில் இபின் தமிய்யா "ஷேக் அல் இஸ்லாம்" என்பவரும் அடங்குவார். இதற்கும் மேலாக, நான் இந்த ஹதீஸ் பற்றி பேசிய பிறகு, அல் அஜர் என்ற சுன்னி இஸ்லாமிய பல்கலைக் கழகத்தின் அறிஞர், ரிதா அல் கபீர் என்ற இஸ்லாமிய அறிஞர் இதற்கு ஒரு பத்வா வெளியிட்டார், அதாவது "இஸ்லாமிய பெண்கள் புதிய மனிதர்களுக்கு பால் ஊட்டலாம்" என்று பத்வா வெளியிட்டார். இதற்கு எகிப்திய மக்கள் (சந்தோஷமாக) எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், நான் தனியாக இதனைப் பற்றி குறிப்பிட்டபோது "நான் இஸ்லாமின் கோட்பாடுகளை திருத்தமுயற்சிப்பதாக" குற்றம் சாட்டுகிறார்கள்.

FrontPage: ஆக, இஸ்லாமிய ஆதார நூல்கள் புதிய மனிதர்களுக்கு பெண்கள் பாலூட்டலாம் என்றுச் சொல்கிறது. சரி, இப்படிப்பட்ட ஒரு விவரத்தை யார் சொல்லியிருப்பார்கள்? எந்த நோக்கத்திற்காக இப்படி சொல்லியிருப்பார்கள்? யாராவது சொன்னாலும் எழுதி வைத்தவர்கள் யார்? நான் இந்த விவரத்தை ஒரு சரியான போதனையாகவே ஏற்றுக்கொள்வதாகவும் வைத்துக்கொண்டாலும், இந்த கட்டளையின் பின்னால் என்ன நன்மை இருக்கப்போகிறது?

Botros: முஹமம்து (அல்லாஹ்வின் வேண்டுதலும், பாக்கியமும் அவர் மீது உண்டாவதாக) சொன்னார் என்று எழுதிவைத்திருக்கிறார்கள். யார் இப்படிப்பட்ட ஒரு விவரத்தை உருவாக்கியவர்? முஹம்மது தான். ஏன் உருவாக்கினார்? யாருக்குத் தெரியும் ஆண்களுக்கு பாலூட்டிவிடு என்று அந்த பெண்ணுக்குச் சொல்லிவிட்ட பிறகு முஹம்மது தனக்குள் தானே சிரித்துக் கொண்டும் இருக்கக்கூடும். ஒருவேளை அவர் இதை ஒரு நகைச்சுவையாகவும் சொல்லியிருக்கலாம், அதாவது தன்னை ஒரு நபி என்று எவ்வளவு தூரம் இவர்கள் நம்புகிறார்கள் என்பதை அறியவும், அவர் வேடிக்கைக்காக சொல்லியிருக்கலாம். ஹதீஸ்களை சேகரித்த பெரியவர்கள் இதனை எழுதியும் வைத்துள்ளனர், எதிர் கால சந்ததிகளுக்கு உதவும் என்பதால். இந்த ஹதீஸினால் என்ன பயன் என்று ஒருவர் கேட்கலாம், இப்படி கேட்பதாக இருந்தால், முஹம்மது செய்த அனேக காரியங்களைப் பற்றி கேட்கவேண்டிவரும்.

ஒட்டகத்தின் மூத்திரத்தை குடிப்பதால் என்ன பயன்?

ஆண்கள் தங்கத்தை அணியக்கூடாது, வெள்ளியை மட்டுமே அணியவேண்டும் என்ற கட்டளையினால் என்ன நனமை?

தங்கம் அணிவதை விட வெள்ளியை ஆண்கள் அணிவதினால் அதிக நன்மை எப்படி கிடைக்கும்?

"இசை" கூடாது என்றுச் சொல்வதினால் என்ன நன்மை உண்டாகப்போகிறது?

நாய்களை வெறுத்து தூரப்படுத்துவதினால் என்ன நன்மை உண்டாகும்?

மனிதர்கள் வெறும் தங்கள் வலது கையினால் மட்டும் சாப்பிடவேண்டும், இடது கையினால் சாப்பிடக்கூடாது என்ற கட்டளை எந்த நன்மையைத் தரப்போகிறது?

எல்லா இஸ்லாமியர்கள் தாங்கள் சாப்பிட்ட பிறகு தங்கள் விரல்களை நக்கவேண்டும் அல்லது வாயினால் உருஞ்சி சுத்தம் செய்ய வேண்டும் என்ற கட்டளையினால் என்ன நன்மை?

சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால், ஷரியா சட்டம் தான் நடுநிலையாக இருக்கவேண்டும், சர்வ அதிகாரமும் படைத்ததாக இருக்கவேண்டும் என்ற கட்டளைகளினால், இஸ்லாமியர்கள் மூளைச் சலவை செய்யப்படுகிறார்கள்? இஸ்லாமியர்கள் இயந்திரங்களைப் போல இஸ்லாமை கேள்வி கேட்காமல் பின்பற்ற உற்சாகப்படுத்தப்படுகிறார்கள், குர்‍ஆனை கேள்வி கேட்கவிரும்புவதில்லை, "உங்களை பாதிக்கும் படியாக, கேள்விகளை கேட்கவேண்டாம்" என்று சொல்லப்படுகிறார்கள்.

FrontPage: முஹம்மதுவின் செக்ஸ்/பாலுறவு வாழ்க்கையைப் பற்றி இஸ்லாமிய நூல்களில் பதிவு செய்யப்பட்டவைகள் என்ன என்று சிறிது சொல்லுங்களேன்.

Botros: உரையாடுவதற்கு இது எனக்கு மிகவும் தர்மசங்கடமான தலைப்பாகும். இந்த விவரங்களை இஸ்லாமியர்கள் கேட்டால் அவர்களின் மனது வேதனை அடையும் என்று எனக்குத் தெரியும், இருந்தாலும், அவர்கள் மீதுள்ள என் அன்பின் காரணமாக நான் இவைகளை சொல்லவேண்டி வருகிறது. ஆனால், என்ன செய்யமுடியும், சுகம் கிடைக்கவேண்டுமானால், முதலில் சிறிது வலியும் வேதனையும் இருக்கத்தானே செய்யும், அப்போது தான் காயம் ஆரும். சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால், இஸ்லாமிய நூல்களின் ஆதாரங்களின் படி, முஹம்மது ஒரு வழி தவறிய பாலுணர்வு கொண்ட நபர் ஆவார்.

அவர் சிறுமிகளின் மற்றும் சிறுவர்களின் நாக்கை உறிஞ்சி சுவைப்பார்.

அவர் பெண்களின் உடைகளை அணிந்துக்கொள்வார் (இந்த நிலையிலும் அவருக்கு வெளிப்பாடுகள் வரும்).

குறைந்த பட்சம் அவருக்கு 66 மனைவிகள் இருந்தனர். சில நேரங்களில், அதாவது தன் வளர்ப்பு மகனின் மனைவியை திருமணம் செய்துக்கொள்ளும்படி அல்லாஹ் சிறப்பான வெளிப்பாடுகளை அனுப்புவார். மற்றும் வேறு எந்த ஒரு முஸ்லீமுக்கு இல்லாத அளவிற்கு மனைவிகளை வைத்துக்கொள்ளும் படி இவருக்கு சிறப்பு வெளிப்பாடுகள் இருந்தன. இவர் எப்போதும் பாலுணர்வு எண்ணங்களாலேயே எப்போதும் ஆட்கொள்ளப்பட்டு இருந்தார். ஒரு முறை "பேசும் கழுதையிடம் இவர் கேட்ட கேள்வி என்ன தெரியுமா ‍ கழுதையே உனக்கு செக்ஸ் என்றால் பிடிக்குமா?" என்பது தான். இவர் அல்லாஹ்வின் சொர்க்கத்தை ஒரு பாலுணர்வு நிரம்ப வழியும் இடமாக சித்தரிக்கிறார், சில மிகப்பெரிய இஸ்லாமிய விரிவுரையாளர்களின் கருத்துப்படி, முஸ்லீம்கள் சொர்க்கத்தில், நாள் முழுவதும் கன்னிப்பெண்களோடு உடலுறவு கொள்வதிலேயே ரொம்பவும் பிஸீயாக இருப்பார்களாம். அவர் ஒரு மரித்த பெண்ணோடும் உடலுறவு கொண்டுள்ளார். இன்னும் இப்படி அனேக வெட்கப்படக்கூடிய விஷயங்களை அவரைப் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். மறுபடியும் நான் அழுத்திச் சொல்கிறேன், இவைகளை நான் சொல்லவில்லை, இஸ்லாமின் சொந்த நூல்களே அவரைப் பற்றி இவைகளைச் சொல்கின்றன. ஆனால், அரபி பேசாத இஸ்லாமியர்களுக்கு இவைகள் தெரிவதில்லை. ஏனென்றால், இப்படிப்பட்ட புத்தகங்கள் அரபியிலிருந்து வேறு மொழிக்கு மொழியாக்கம் செய்யப்படவே இல்லை. ஜிஹாத் வாட்ச் (http://www.jihadwatch.org/) என்ற தளத்தில் எழுதும் ஒருசில கதா நாயகன்களுக்கு தவிர மற்றவர்களுக்கு இவைகள் தெரியவாய்ப்பில்லை.



FrontPage: ஆமாம், அந்த தளம் நம்முடைய நண்பர் ராபர்ட் ஸ்பென்சர் அவர்களின் தளமாகும்.

ஆனால், இங்கே தான் முக்கியமான விவரம் உள்ளது. இப்படிப்பட்ட காரியங்களை நீங்கள் சொல்கிறீர்கள் என்று அனேக இஸ்லாமியர்கள் உங்கள் மீது குற்றம் சுமத்துகிறார்கள். ஆனால், இந்த பிரச்சனை நீங்கள் சொல்வதினால் அல்ல, இந்த விவரங்கள் அனைத்தும் இஸ்லாமிய ஆதார நூல்களிலேயே இருக்கின்றது என்பது தான் முக்கியமான விஷயமாக உள்ளது. இஸ்லாமியர்கள் இப்படிப்பட்ட விஷயங்களினால் அதிர்ச்சி அடைந்தால் அவர்களே தங்கள் இஸ்லாமிய நூல்களை படித்து தெரிந்துகொள்ளட்டும், அல்லது வேறு ஏதாவது செய்துக்கொள்ளட்டும். இந்த விவரங்களை யார் எழுதினார்கள்? ஏன் எழுதினார்கள் என்று அவர்களே ஆராய்ச்சி செய்யட்டும், அவைகள் உண்மையென்றோ அல்லது பொய் என்றோ விளக்கிவிடட்டும்.

இங்கு முழு பிரச்சனையும் நீங்கள் சொல்வதினால் அல்ல, அதற்கு பதிலாக இஸ்லாமிய நூல்களே இப்படி சொல்வதினால் தான் உள்ளது.

Botros: இவைகள் எல்லாம் எங்கேயிருந்து ஆரம்பமாகிறது? குர்‍ஆன் 33:37ன் படி முஹம்மது தன் மருமகளையே திருமணம் செய்துக்கொள்ள அனுமதிக்கிறது, இந்தப் பெண் மீது தான் அவர் மோகம் கொண்டு இருந்தார். சில வசனங்களுக்குப் பிறகு, குர்‍ஆன் 33:50ல், உலகத்தில் எந்த பெண்ணாக இருந்தாலும் சரி, அப்பெண் தன்னை முஹம்மதுவிற்கு அர்பணித்தால் அவளோடு உடலுறவு கொள்ள அல்லாஹ் முஹம்மதுவிற்கு அனுமதி அளிக்கிறார். இந்த சலுகை, அனுமதி முஹம்மதுவிற்கு மட்டுமே தான், வேறு யாருக்கும் இல்லை. இப்படி தன் மோக இச்சைகளை நிறைவேற்ற வெளிப்படும் அல்லாஹ்வின் வெளிப்பாடுகள் அடிக்கடி வருவதினால், அவரின் சிறுமி மனைவி ஆயிஷா முஹம்மதுவிடம் இவ்வாறு கூறுவாராம்: "உங்கள் இறைவன் உங்கள் ஆசைகளை வெகு சீக்கிரத்தில் நிறைவேற்றுகிறார்". மற்றும் தன்னை பின்பற்றும் முஸ்லிம்களுக்கு, போரில் பிடிபடும் எந்த இஸ்லாமியரல்லாத பெண்ணாக இருந்தாலும், அவளை வைப்பாட்டியாக வைத்துக்கொள்ள முஹம்மது அனுமதி அளித்துள்ளார் (குர்‍ஆன் 4:3). இந்த விவரங்கள் வெறும் குர்‍ஆனிலிருந்து வந்தவைகள் மட்டுமே. இன்னும் ஹதீஸ்களிலும், அவரது வாழ்க்கை சரிதைகளிலிருந்தும் அவரது பாலுணர்வு விவரங்களைப் பற்றி பேச ஆரம்பித்தால், அது மணிக்கணக்கில் நேரம் எடுத்துக்கொள்ளும்.

இதற்காகவே, நான் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் முஹம்மதுவின் பாலுணர்வு நடத்தைகள் பற்றி விளக்கியுள்ளேன், அவைகளில் இவைகள் அடங்கும், அதாவது,

செத்துப்போன பெண்ணோடு முஹம்மது தூங்கியது,

மாதவிடாய் இருக்கும் பெண்ணிலிருந்து வரும் இரத்த வாடையை அவர் முகர்ந்துப்பார்த்தது,

பெண்களின் உடைகளை அவர் அணிந்துக்கொண்டு இருந்தது போன்றவைகளைச் சொல்லலாம்.

ஜிஹாத் வாட்ச் தளம் அனேக இந்த சிகழ்ச்சிகளை விவரங்களை மொழியாக்கம் செய்துள்ளது (http://www.jihadwatch.org/archives/025511.php).

FrontPage: உங்களின் அனேக வீடியோக்களில் மிகவும் பிரபலமானது, உங்களின் 10 கோரிக்கைகள் பற்றியது. http://www.youtube.com/watch?v=4HXX2fO8pM4

உங்களின் இந்த ஊழியங்களினால் என்ன மாற்றம் ஏற்பட்டுள்ளது.

Botros: இறைவன் தனக்காக என்னை பயன்படுத்துவதினால் நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஹயா தொலைக்காட்சி நிலையத்திற்கும் எனக்கு தினமும் கணக்கிலடங்கா ஈமெயில்களை வருகின்றன, அவைகள் இஸ்லாமியரிலிருந்து கிறிஸ்தவத்திற்கு மாறியவர்களிடமிருந்து வருகின்றன. எங்கள் நிகழ்ச்சிகள‌ உலகத்தில் கோடிக்கணக்கான அரபி பேசும் நபர்களை சென்று அடைகிறது. குறிப்பிட்ட சில நாடுகளில் என் நிகழ்ச்சிகள் தடை செய்யப்பட்டுள்ளது, முக்கியமாக சௌதி அரேபியா நாட்டில் என் நிகழ்ச்சிகள் தடை செய்யப்பட்டுள்ளது, இருந்தாலும் அங்குள்ளவர்கள் என் நிகழ்ச்சிகளை எப்படியாவது பார்த்துவிடுகின்றனர்.

FrontPage: உங்களுக்கு வரும் பின்னூட்டங்கள் என்ன?


Botros: பெரும்பான்மையாக நல்ல பின்னூட்டங்கள் வருகின்றன, முக்கியமாக இஸ்லாமிலிருந்து தாண்டி, கிறிஸ்தவத்திற்கு வந்தவர்களிடமிருந்து பின்னூட்டங்கள் வருகின்றன. இன்னும் ஒரு சில மெயில்கள் மிகவும் கோபத்தோடும், வெறுப்போடும் வருகின்றன. எனக்கு நல்ல பின்னூட்டங்கள் வருகின்றனவா அல்லது கெட்ட பின்னூட்டங்கள் வருகின்றனவா என்பது கேள்வியில்லை, அடிமைகளாக உள்ள இஸ்லாமியர்களின் மீதுள்ள நிபந்தனையற்ற அன்பு தான் என்னை உற்சாகப்படுத்துகிறது.

FrontPage: முஸ்லிம்கள் கிறிஸ்துவிடம் வருகிறதற்கு நீங்கள் ஒரு பாலமாக இருக்கிறீர்கள், அப்படித்தானே?

Botros: இப்படி தான் அவர்களும் சாட்சி கூறுகிறார்கள். அனேகர் என்னிடம் "நான் ஒரு தந்தையாக" அவர்களுக்கு இருப்பதாகச் சொல்கிறார்கள், இப்படி நான் அழைக்கப்படுவதற்கு நான் சந்தோஷப்படுகிறேன், ஆனால் நம் அனைவருக்கும் ஒரு தந்தை இருக்கிறார், அவர் தான் இறைவன். ஒரு உதாரணத்தைச் சொல்லவேண்டுமானால், ஒரு இஸ்லாமியர் என்னிடம் தொடர்பு கொண்டு கண்ணீரோடு கூறினார், "தான் ஒரு முஸ்லிமாக இருந்த போது, என் தலையை வெட்டிவிடவேண்டும் கொல்லவேண்டும் என்று விரும்பியிருந்தாராம், இதனால், நான் எங்கே இருக்கிறேன் என்பதை அறிந்துக்கொள்ள பல நாட்கள் முயற்சி எடுத்தாராம். இதனால், என் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொடர்ந்து பார்ப்பாராம், இப்படி பார்க்கும் போது தனக்கு ஏதாவது துப்பு கிடைக்குமா? நான் எங்கே இருக்கிறேன் என்று விவரம் தெரியுமா என்று பார்ப்பாராம்”. ஆனால், அற்புதம் நிகழ்ந்தது: இப்படி காலம் செல்லச் செல்ல, நான் சொல்வது அனைத்தும் இஸ்லாமிய நூல்களிலேயே இருக்கிறது, என்பதை அவர் அறிந்துக்கொண்டார். என்னை வெறுப்பதை அவர் நிறுத்திவிட்டார். கடைசியாக இயேசுவிடம் வந்தும் விட்டார். இப்படிப்பட்ட சாட்சிகள் தான் நான் தொடர்ந்து இந்த ஊழியத்தைச் செய்ய உற்சாகம் தருகிறது.


FrontPage: உங்களின் பார்வையில் முஹம்மது எப்படிப்பட்டவர்?

Botros: இஸ்லாமிய புத்தகங்களிலிருந்து இதற்கு பதில் எனக்கு கிடைத்தது. தற்கால முஜாஹிதீன் இயக்கத்தின் நாயகனாக கருத்தப்படும், இபின் தமிய்யா என்பவர் "ஒருவர் நபியாக இருப்பதற்கு" என்ன தகுதிகள் இருக்கவேண்டும் என்று கூறுகிறார். அவரது கூற்றுகளில் ஒன்று, ஒருவரை நபி என்று தெரிந்துக்கொள்வதற்கு அவரது வாழ்க்கை சரிதையை படிக்கவேண்டும் என்றுச் சொல்கிறார், இயேசு கூட இப்படி கூறியுள்ளார் "அவர்களின் கனிகளின் மூலமாக அவர்களை நீங்கள் அறியமுடியும்" என்பதாகும். இபின் தமிய்யாவின் அறிவுரையின் படி, நான் அனேக நிகழ்ச்சிகளை முஹம்மதுவின் சரிதைக்காக ஒதுக்கினேன், இதன் மூலம் அறிந்துக்கொண்டது என்னவென்றால், சந்தேகத்திற்கு இடமில்லாமல், முஹம்மது ஒரு நபி அல்ல என்பதாகும். முஹம்மதுவின் கனி "மரணம், அழிவு மற்றும் பாலுணர்வு/ஆபாசமாகும்".
உண்மையில், முஹம்மதுவே தனக்கு ஒர் ஜின் பிசாசு பிடித்துவிட்டது என்று நம்பினார், ஆனால், அவரது மனைவி கதிஜா அவர்கள் தான், "இல்லை இல்லை உன்னை சந்தித்தது, ஜின் அல்ல, அவர் காபிரியேல் தூதன்" என்று சொன்னார்கள். ஆனால், பிறகு தான் முஹம்மது ஒரு பெண்ணின் சாட்சி ஒரு ஆணின் சாட்சியில் பாதிக்கு சமம் என்றுச் சொன்னார். இதனால், கதிஜா அவர்கள் சொன்னது தவறானது, முஹம்மது முதலில் நினைத்தது தான் சரியானது என்பது நிருபனமானது.

FrontPage: பூட்ரோஸ் அவர்களே இன்று எங்களோடு உரையாடிமைக்காக நன்றி.

Botros: நன்றி, உங்களை இறைவன் நிறைவாக ஆசீர்வதிப்பாராக.

Thanks FrontPage Magazine:
Source: http://frontpagemag.com/readArticle.aspx?ARTID=35073