Thursday, December 11, 2008
குராண் முரண்பாடுகள்-15
Posted on 6:30 AM by justdial
அவர்கள் இந்த குர்-ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள். குர்-ஆன் 4:82
கை வெண்மையாக மாறும் அற்புதம் பற்றிய விவரங்கள்
இரண்டாவது அத்தாட்சி மோசேக்கு அல்லா காட்டுகிறார். குர்ஆன் 20:22ல் "உம் கையை உம் விலாப்புறமாக புகுத்தி" என்றுச் சொல்கிறார். இதையே சிறிது மாற்றி குர்ஆன் 27:12ல் "உம்முடைய கையை உமது (மார்புபக்கமாக) சட்டைப் பையில் நுழையப்பீராக!" என்றுச் சொல்கிறார். மற்றும் குர்ஆன் 28:32ல், "உம் கையை உம் சட்டைக்குள் புகுத்தும்" என்கிறார். இந்த மூன்று இடங்களில் சொல்லப்பட்டதின் அர்த்தம் அல்லது பொருள் ஒன்றாக இருந்தாலும், ஏன் எழுத்துக்களில் வித்தியாசத்தை அல்லா காட்டுகிறார்.
இஸ்லாமியர்களுக்கு கேள்விகள்: ஒரு வேதம் என்றால், ஒரு நிகழ்ச்சி எழுத்துக்கு எழுத்து மாறாமல் அப்படியே சொல்லவேண்டும் என்று நிபந்தனையை விதிக்கும் இஸ்லாமியர்கள், அதே நிபந்தனையை குர்ஆனுக்கும் இட்டு பார்த்தால் எப்படி இருக்கும் என்பதைத் தான் இக்கட்டுரை எடுத்து கூறுகிறது. ஏன் ஒரு நிகழ்ச்சியை அதுவும் இறைவனாக இருந்து ஒரே மாதிரியாக அல்லாவிற்கு சொல்லத்தெரியாதா? அல்லது அடிக்கடி அவர் என்ன சொன்னார் என்பதை மறந்துவிடுவாரா?
ஏன் மூன்று இடங்களிலும் ஒரே மாதிரியாக அல்லா சொல்லவில்லை, இஸ்லாமியர்கள் விளக்குவார்களா? அல்லது அல்லா ஒரே மாதிரியாகத் தான் சொல்லியிருப்பார், அதை முஹம்மது தான் மாற்றி சொல்லியிருப்பார் என்று சொல்வீர்களா? அல்லது அனேக பிரதிகள் எடுக்கும் போது இப்படி வார்த்தைகள் கொஞ்சம் மாறிவிட்டது என்று சொல்வீர்களா? எந்த பதிலைக் கொடுத்தாலும், ஒரு நிகழ்ச்சியை ஒரே மாதிரியாக சொல்ல அல்லாவிற்கே தெரியவில்லை என்பது மட்டும் உறுதி.
இன்னும் குர்ஆன் 27:12ம் வசனத்தில் "ஒன்பது அத்தாட்சிகளில் உள்ளவைகள்" என்று வருகிறது, இந்த ஒன்பது அத்தாட்சிகள் என்பது மற்ற இரண்டு இடங்களில் இல்லையே! அது ஏன்?http://www.geocities.com/isa_koran/tamilpages/Rebuttals/egaththuvam/Quran_Version1.html
Subscribe to:
Post Comments (Atom)
No Response to "குராண் முரண்பாடுகள்-15"
Post a Comment