Tuesday, December 9, 2008
குரான் முரண்பாடுகள்-13
Posted on 8:55 PM by justdial
அவர்கள் இந்த குர்-ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள். குர்-ஆன் 4:82
3. மோசே அழைக்கப்பட்ட பிறகு, இறைவன் சொன்ன அதிகபடியான விவரங்கள்
மோசேயிடம் அல்லா இன்னும் அதிகமான விவரங்களை பேசியதாக, குர்ஆன் 20:12 லிருந்து 16ம் வசனம் வரை சொல்கிறது. அதாவது, உம் காலணிகளை கழற்றும், நான் உம்மை என் தூதராக தேர்ந்தெடுத்தேன், ஒவ்வோர் ஆத்மாவும் தான் செய்யும் செயலுக்குத் தக்கதாக பலன் அளிக்கப்படும், நீரும் உம் மன இச்சையின்படி செய்யாதிரும், என்று அல்லா மோசேயுடன் பேசுகிறார். ஆனால், இவைகள் மற்ற இரண்டு இடங்களில் இல்லை.
இஸ்லாமியர்களுக்கு கேள்விகள்: ஒரே நிகழ்ச்சியை சொல்லும் போது ஏன் அல்லா இவ்வளவு விவரங்களை குர்ஆன் 27 மற்றும் 28ம் அதிகாரத்தில் சொல்லவில்லை. அல்லாவின் வேதத்தில் இப்படி ஒரு நிகழ்ச்சி வெவ்வேறு விதமாக சொல்லப்படுவது அல்லது சில விவரங்களை சொல்லாமல் விட்டுவிடுவது சரியானதா? இது முரண்பாடில்லையா? இரண்டு இடங்களில்(குர்ஆன் அதிகாரம் 27, 28) "காலணிகளை கழற்றும்" என்ற விவரம் பற்றி அல்லா சொல்லவில்லை, இந்த விவரம் மற்ற இரண்டு விவரங்களோடு ஏன் முரண்படுகிறது?
Source: http://www.geocities.com/isa_koran/tamilpages/Rebuttals/egaththuvam/Quran_Version1.html
Subscribe to:
Post Comments (Atom)
No Response to "குரான் முரண்பாடுகள்-13"
Post a Comment