Saturday, July 26, 2008
இப்போது குரானில் கலப்படம் இல்லை - நான் நீக்கிவிட்டேன் ஜைனுலாபிதீன் அறிக்கை
இப்போது குரானில் கலப்படம் இல்லை - நான் நீக்கிவிட்டேன் ஜைனுலாபிதீன் அறிக்கை
இப்போது குரானில் கலப்படம் இல்லை - நான் நீக்கிவிட்டேன் ஜைனுலாபிதீன் அறிக்கைஇஸ்லாமியர்கள் இதுநாள் வரை குரானில் எந்த கலப்படமும் இல்லை.குரான் முழுமையாக பாதுகாக்கப்பட்டது.அதை அல்லாவே பாதுகாத்தான் என்றெல்லாம் எல்லாருடைய காதிலும் பூ சுற்றி வந்ததை நாம் அறிவோம்.தற்பொழுது இந்த புளுக்குக்கு முடிவு வந்து விட்டது.ஆம் தமிழ் நாட்டின் இஸ்லாமிய அறிஞர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் ஏகத்துவம் என்ற பத்திரிக்கையில் ஏப்பரல் மாதம் எழுதியுள்ள கட்டுரையில் குரானில் கலப்படம் இருந்ததாகவும்.அதை நீக்க இவருக்கு அல்லா அருள் புரிந்ததாகவும் சொல்லியுள்ளார்.இது எதோ தமிழ் நாட்டில் மட்டும் உருவான கலப்படம் அல்ல இஸ்லாம் உருவான சவுதி அரேபியாவிலேயே இந்த குரான் கலப்படம் இருந்ததாக அவர் சொல்கிறார்.ஏகத்துவம் பத்திரிக்கையில் வெளியான கட்டுரையின் பகுதி கீழேகலப்படமின்மைவணக்கங்களில் பித்அத் கூடாது என்று தத்துவார்த்தமாகச் சொன்ன போது, மக்கள் மிகக் கடுமையாக அதை எதிர்த்தனர். இன்று அதே மக்கள் செயல்பாட்டு அடிப்படையில் பார்க்கும் போது அதை எற்றுச் செயல்படவும் அரம்பிக்கின்றனர். அல்ஹம்துலில்லாஹ். இவ்வாறு வணக்கங்களில் கலந்து விட்ட கலப்படங்களைக் களைந்து விட்டோம். அனால் குர்அனில் உள்ள கலப்படங்களை நாம் இதுவரைக் களையவில்லை. குர்அனில் கலப்படமா? என்று கொதிப்புடனும், ஆச்சரியத்துடனும் நீங்கள் இங்கு கேள்வி எழுப்பலாம். அதற்கான விடை கீழே இடம் பெற்றுள்ளது. தமிழகம் மட்டுமல்ல! சவூதியின் வெளியீடுகளில் கூட இந்தச் சேர்மானங்கள் இடம் பெறத் தவறவில்லை. இந்தச் சேர்மானங்களைக் களைவதற்கு அல்லாஹ் ஒர் அரிய வாய்ப்பை வழங்கினான். அது தான் இந்தத் தமிழாக்கமாகும். 1. மன்ஜில் 2. ருகூவுக்கள் 3. ஸஜ்தா அடையாளங்கள் 4. நிறுத்தல் குறியீடுகள். 5. வேண்டாத அய்வுகள் 6. மக்கீ, மதனீ 7. குர்அனை முடிக்கும் துஆ மேற்கண்ட இந்தச் சேர்மானங்களை நீக்கி வெளியிட்டிருப்பதன் மூலம் ஆந்த தர்ஜுமா தனிச் சிறப்பைப் பெறுகின்றது. அல்லாஹ்வைப் பயந்து, உலகத்தில் யாருக்கும் பயப்படாமல் ஒரு தூய வடிவைக் கையாண்டதற்காக இது கடுமையான விமர்சனங்களைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றது. குர்அன் மொழியாக்கத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் பெரும் பங்காற்றியதுடன் மட்டுமின்றி, குர்அனில் இருந்த இந்தக் கலப்படங்களை மக்களிடம் அடையாளம் காட்டி, அப்புறப்படுத்தியதும் தவ்ஹீது ஜமாஅத் செய்த சாதனைகளில் ஒன்று என்றால் மிகையாகாது. ஏகத்துவம் ,ஏப்ரல் 2008:http://www.onlinepj.com/இந்த கட்டுரையை படித்த உங்களுக்கு கண்டிப்பாக இவகளின் போலி முகங்கள் வெளிப்பட்டிருகும்.இந்த நிலையில் தமிழ் உலக மக்கள் இந்த போலியான இஸ்லாமிய பிரச்சாரங்களை உதறித்தள்ளுவது மட்டும் அல்ல அவர்களின் பொய்யும், புணை சுருட்டுமான எழுத்துக்களை எல்லோருக்கும் வெளிச்சம் போட்டுக்காட்ட வேண்டிக்கொள்ளுகிறோம்.
No Response to "இப்போது குரானில் கலப்படம் இல்லை - நான் நீக்கிவிட்டேன் ஜைனுலாபிதீன் அறிக்கை"
Post a Comment