Thursday, June 11, 2009

கிறிஸ்தவன் பார்வையின் "பைபிள் கூறும் பயங்கரவாதம் (1) கட்டுரைக்கு பதில் 1

Posted on 1:36 AM by justdial

 

 
.

கிறிஸ்தவன் பார்வையின்:

பைபிள் கூறும் பயங்கரவாதம் (1) கட்டுரைக்கு பதில் 1

முன்னுரை: அபூ அப்திர்ரஹ்மான் என்ற இஸ்லாமிய சகோதரர் எனக்கு பைபிள் கூறும் பயங்கரவாதம் என்ற தொடர் கட்டுரைகளை அனுப்புகிறார். அவர் அனுப்பிய தொடர் கட்டுரைகளுக்கு பதிலை நாம் தொடர் கட்டுரைகளாக காணலாம்.

அவர் அனுப்பிய கட்டுரை "பைபிள் கூறும் பயங்கரவாதம்" என்ற தலைப்புள்ளதால், அவர் முன்வைக்கும் வசனங்களுக்கு விளக்கமளிப்பது நம் கடமையாக இருக்கிறது, அதே நேரத்தில், பயங்கரவாதம் பற்றி அவருக்கும் (இஸ்லாமுக்கும்) சில கேள்விகளும் முன்வைக்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

அபூ அப்திர்ரஹ்மான்

பைபிள் கூறும் பயங்கரவாதம் (1)

கிறிஸ்தவர்களில் சிலர், முகம்மது (ஸல்) அவர்கள் வன்முறையைப் போதித்ததாகவும் இயேசு அகிம்சையையும் அன்பையும் போதித்ததாகவும் ஒப்பீட்டுப் பிரச்சாரம் நடத்தி வருகின்றனர்.

Source: http://christianpaarvai.blogspot.com/2009/02/1.html
emphasis mine

ஈஸா குர்‍ஆன்:

உண்மை தானே. முஹம்மது பற்றி அறியவேண்டுமானால், குர்‍ஆனை, ஹதீஸ்களை படித்துப் பாருங்கள். இயேசுவின் போதனைகளை அறிய பைபிளை படியுங்கள். இருவரின் வாழ்க்கை சரித்திரம் மட்டுமே அவர்கள் என்ன சொன்னார்கள், செய்தார்கள் என்பதை அறிந்துக்கொள்வதற்கு உதவும்.

அபூ அப்திர்ரஹ்மான்

முஸ்லிம்களைப் பொறுத்தவரை இதற்கு மாறாக இயேசுதான் வன்முறையைப் போதித்தார் என்று ஒருபோதும் சொல்ல மாட்டார்கள்; சொல்லவும் முடியாது. ஏனென்றால் அது அவர்களின் நம்பிக்கைக்கு எதிரானதாகும்.

ஈஸா குர்‍ஆன்:

இயேசு வன்முறையை போதித்தார் என்று உங்களால் எப்படி சொல்லமுடியும்? அதற்கு உங்களுக்கு ஆதாரங்கள் வேண்டுமல்லவா?

ஆனால், முஹம்மதுவின் முழு வாழ்க்கையும் செயல்களும் வெட்ட வெளிச்சமாக குர்‍ஆனிலும், ஹதீஸ்களிலும், அவரது வாழ்க்கை சரித்திரங்களிலும், அதே நேரத்தில் தற்காலத்தில் நம் முன் வாழும் சில இஸ்லாமியர்களின் வாழ்க்கையிலும் தெளிவாக தெரிவதால், அதைப் பற்றி கேள்வி எழுப்புகிறார்கள், உலக மக்கள் அல்லது கிறிஸ்தவர்கள்.

அபூ அப்திர்ரஹ்மான்

முஸ்லிம்களைப் பொறுத்தவரை இயேசுவும் முஹம்மதுவும் (அவர்கள் மீது இறையருள் உண்டாகட்டும்) தார்மீக வழிகாட்டுதல்களுடன் அனுப்பப்பட்ட இறைவனின் அடியார்களும் தூதர்களும் ஆவார்கள். அவர்கள் இருவரிடையே வேற்றுமை பாராட்டுவது இஸ்லாமிய நம்பிக்கைக்கு எதிரான செயல்பாடாகும்.

ஈஸா குர்‍ஆன்:

இஸ்லாமிய நம்பிக்கையின் படி எப்படி "இயேசுவை ஒரு நபி" என்று நீங்கள் நம்புகிறீர்களோ, அதே போல, பைபிளின் நம்பிக்கையின் படி "முஹம்மது ஒரு நபி இல்லை" அதாவது, பைபிள் படி வந்த நபி அல்ல என்று நம்புகிறோம்.

உங்களின் நம்பிக்கையின் படி, இயேசு ஒரு நபி, எங்களின் நம்பிக்கையின் படி, முஹம்மது ஒரு நபி அல்ல அவ்வளவே.

உங்களுக்கு வேண்டுமானால், இவ்விருவருக்கும் இடையில் வேற்றுமை பாராட்டுவது இஸ்லாமிய நம்பிக்கைக்கு எதிராக இருக்கலாம். ஆனால், எங்கள் நம்பிக்கையின் படி, "இவ்விருவரும் இறைத்தூதர்கள் மட்டுமே" என்றுச் சொல்வது இறைக் குற்றமாகும். அதாவது, யேகோவா தேவன் அனுப்பாத ஒரு தூதரை அவர் அனுப்பியதாக கிறிஸ்தவர்கள் நம்பினால் அது தவறாகும். அதே போல, இயேசு தெய்வமாக இருக்கும் போது, அவர் ஒரு மனிதர், தூதர் மட்டுமே என்றுச் சொல்வது தவறானதாகும்.

உங்களுக்கு உங்கள் நம்பிக்கைத் தான் சரி, எங்களுக்கு எங்கள் நம்பிக்கைத் தான் சரி. ஆனால், இயேசு இறைவனாக இருக்கிறாரா? என்ற கேள்வியும், அதே நேரத்தில் முஹம்மது ஒரு தீர்க்கதரிசியாக (நபியாக) இருந்தாரா? அல்லது ஒரு நபிக்கான தகுதி அவருக்குள்ளதா? போன்ற கேள்விகளும் எழும்பும். இக்கேள்விகளுக்கு பதில்கள், பைபிளும், குர்‍ஆனிலும், ஹதீஸ்களிலும் கிடைக்கும்.

ஆக, இயேசுவோடு முஹம்மதுவை ஒப்பிட்டு, நாங்கள் வேற்றுமை பாராட்டமாட்டோம் என்றுச் சொல்வது உங்களுக்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம். ஆனால், இறைவனோடு ஒரு சாதாரண மனிதரை ஒப்பிடுவது கிறிஸ்தவத்திற்கு ஏற்றதல்ல.

அபூ அப்திர்ரஹ்மான்

இஸ்லாம் பயங்கரவாதத்தைப் போதிக்கும் பொய் மார்க்கம் என்றும் கிறிஸ்தவம் தான் படைத்தவனின் உண்மையான வழிகாட்டுதல் - மார்க்கம் என்றும் நிறுவதற்காகவே இத்தகைய பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன எனில், அவற்றிற்குச் சரியான பதிலளிப்பதும் உண்மை என்ன என்பதை ஆதாரங்களுடன் வெளிப்படுத்துவதும் முஸ்லிம்களின் மீது கடமையாகிறது!

ஈஸா குர்‍ஆன்:

நீங்கள் சொல்வது போல, இஸ்லாம் தான் உண்மையான மார்க்கம் என்றுச் சொல்லி, கிறிஸ்தவத்திற்கும், பைபிளுக்கும் எதிராக இஸ்லாமியர்களால முன்வைக்கும் கேள்விகளுக்கு பதில்கள் சொல்வதும், ஆதாரங்களை முன்வைப்பதும் எங்களுக்கும் கடமையாக உள்ளது.

உங்கள் கடமையை நீங்கள் செய்யும் போது, நாங்கள் அமைதியாக பதில் தருவது போல, குறைந்த பட்சமாக, நீங்களும் எங்கள் கடமையை நாங்கள் செய்ய எங்களை அனுமதிப்பீர்கள் என்று நம்புகிறோம்.

அபூ அப்திர்ரஹ்மான்

இஸ்லாம் வன்முறை - பயங்கரவாத மதம் என சாதாரண மக்களை ஏமாற்ற முயலும் இத்தகையவர்கள், தாங்கள் வேதமாக நம்பியிருக்கும் "மனித கரங்களால் கையாடல் செய்யப்பட்டுள்ள பைபிள்" உண்மையில் அகிம்சையையும் அன்பையும் தான் போதிக்கிறதா? என்பதை முழுமையாக விளக்க முற்படுவதில்லை.

மாறாக இயேசுவின் உபதேசங்களாகக் குறிப்பிடப்பட்ட சிலக் கருத்துக்களை மட்டும் பொறுக்கி எடுத்து முஹம்மது (ஸல்) அதற்கு எதிரானவர் என்று ஒப்பீட்டுப் பிரச்சாரம் செய்து பாமர மக்களை ஏமாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஈஸா குர்‍ஆன்:

"இஸ்லாம் வன்முறை பயங்கரவாத மார்க்கம்" என்று ஏன் நாங்கள் சாதாரண மக்களை ஏமாற்றப் போகிறோம்? உங்கள் குர்‍ஆனின் வசனங்கள், ஹதீஸ்கள் இப்படி சொல்கின்றன என்றுச் சொல்கிறோம், அதைப் படிப்பவர்கள் இஸ்லாமின் உண்மை முகம் என்ன என்று அவர்களாகவே, அவ்வசனங்களை பார்த்து தெரிந்துக்கொள்வார்கள்.

நாங்கள் காட்டும் வசனங்கள் உங்கள் குர்‍ஆனில் இல்லையா?

நாங்கள் முன்வைக்கும் ஹதீஸ்கள் இஸ்லாமிய உண்மை ஹதீஸ்கள் இல்லையா?

எங்கள் கட்டுரையை படிப்பவர்களுக்கு, உங்கள் கட்டுரைகளையும் படிக்க வசதி கிடைக்கும் விதமாக, உங்கள் கட்டுரைகளின் தொடுப்புக்களையும் நாங்கள் தருவதில்லையா?

சாதாரண மக்களாகிய இஸ்லாமியர்களை ஏமாற்றுவது நீங்கள் தானே?

கீழ் கண்ட விவரங்களை சிந்தித்துப் பாருங்கள்.

1) அல்லாஹ் உங்களுக்காக இறக்கிய குர்‍ஆனை ஏன் தாய் மொழியில் படிக்க உற்சாகப்படுத்துவதில்லை?

2) இமாம்கள், இஸ்லாமிய அறிஞர்கள் சொல்வதைத் தான் சாதாரண இஸ்லாமியர்கள் நம்பவேண்டுமா? அவர்களாகவே அல்லாஹ்வின் வார்த்தையாகிய குர்‍ஆனை புரியும் மொழியில் படிக்கக்கூடாதா?

3) எங்கள் கட்டுரைகளை படிக்க இஸ்லாமியர்களுக்கு ஏன் வாய்ப்பு தருவதில்லை, அதாவது, எங்களுக்கு பதில்கள் என்று எழுதிவிட்டு, எங்கள் தொடுப்புக்களையும் தருவதில்லையே ஏன்?

இப்பொழுது, "புரியும் மொழியில் குர்‍ஆனை படிக்காமலா நாங்கள் கட்டுரைகள் எழுதுகிறோம்?" என்று நீங்கள் கேட்கக்கூடும். நாங்கள் கேட்கும் கேள்வி, எத்தனை பேர் கட்டுரைகளை எழுதுகிறீர்கள்? எத்தனை பேர் பதில்களை எழுதுகிறீர்கள்? இங்கு கேள்வி, ஒட்டு மொத்த இஸ்லாமிய மக்களின் குர்‍ஆன் அறிவைப் பற்றியது.

இஸ்லாமிய ஜனத்தொகையில் படிக்கத் தெரிந்தவர்களில் 10% பேராவது குர்‍ஆனை தங்கள் தாய் மொழியில் படிக்கிறார்களா? இந்த எண்ணிக்கையை 20%ஆக உயர்த்தலாமா? 30%, 40% அல்லது 50% ஆக உயர்த்தலாமா?

ஒரு பேச்சுக்காக 50% என்றே வைத்துக்கொண்டாலும், மீதமுள்ள 50% சதவிகிதம் பேர், உங்களைப் போன்ற இஸ்லாமிய அறிஞர்கள் சொல்வதைத் தானே இஸ்லாம் என்று நம்பவேண்டிய நிர்பந்தத்தில் பரிதாப‌ நிலையில் இருக்கிறார்கள்? கிறிஸ்தவம் பற்றி பைபிள் பற்றி நீங்கள் சொல்லும் பொய்யும் புரட்டும் தானே "கிறிஸ்தவம் என்று அவர்கள்" நம்பவேண்டிய நிலையில் இருக்கிறார்கள்?

ஆகையால், சாதாரண மக்களை ஏமாற்றுவது நாங்கள் அல்ல, நீங்களும் உங்கள் இஸ்லாமும் தான்.

இறைவன் "எல்லாருக்காக" இறக்கிய வேதம் என்று ஒரு புறம் சொல்லிக்கொண்டு, இன்னொரு புறம் அவர்களை அரபியில் மட்டுமே படிக்க உற்சாகப்படுத்துகிறீர்களே, இதை என்னவென்றுச் சொல்லலாம். குறைந்த பட்சம், அரபியில் குர்‍ஆனை படிக்கும் ஒவ்வொருவரும் கண்டிப்பாக தமிழிலும் படிக்கவேண்டும் என்று தமிழ் நாட்டு எல்லா இஸ்லாமியர்களுக்கும் அதிகார பூர்வமாக அறிவுரை சொல்லமுடியுமா? அப்படி சொல்லிவிட்டு, அதன்படி தாய் மொழியில் படிக்கிறார்களா என்று தொடர்ந்து உற்சாகப்படுத்த முடியுமா?

இப்படி செய்யாத பட்சத்தில், சாதாரண இஸ்லாமியர்களின் இஸ்லாமிய ஞானம் வெறும் கேள்வி ஞானம் தானே!

யார் யாரை ஏமாற்றுகிறார்கள்? என்று இப்பொழுது சிந்தித்துப்பாருங்கள்.

//தாங்கள் வேதமாக நம்பியிருக்கும் "மனித கரங்களால் கையாடல் செய்யப்பட்டுள்ள பைபிள்" உண்மையில் அகிம்சையையும் அன்பையும் தான் போதிக்கிறதா? என்பதை முழுமையாக விளக்க முற்படுவதில்லை.//

குர்‍ஆன் மனிதனின் கற்பனையா அல்லது அல்லாஹ் இறக்கினானா என்பதை நாம் கடந்த இரண்டு ஆண்டுகளாக பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம். அதே நேரத்தில் பைபிளை ஒருவர் படித்தால், புரிந்துக்கொள்ள முடியாத நிலையில் இருப்பதற்கு பைபிள் ஒன்றும் குர்‍ஆன் போல அமைப்பு உள்ளதல்ல.

ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் சம்மந்தப்பட்ட சூழ்நிலை என்ன என்பதை பைபிள் தன்னகத்தே கொண்டுள்ளது, மற்றும் நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு நாங்கள் விளக்கங்கள் கொடுத்துக்கொண்டே இருக்கிறோம்.

கிறிஸ்தவத்தின் போதனை அன்பா, அஹிம்சையா என்பதை பைபிளை படித்தால் புரியும், அதே போல, குர்‍ஆனை படித்தால், ஹதீஸ்களை படித்தால், இஸ்லாம் என்றால் வன்முறை என்பது விளங்கும், அதை விளங்கிக்கொண்டு தானே இப்போது உலகில் எல்லா தீவிரவாத செயல்கள் நடைபெறுகின்றன.

//மாறாக இயேசுவின் உபதேசங்களாகக் குறிப்பிடப்பட்ட சிலக் கருத்துக்களை மட்டும் பொறுக்கி எடுத்து முஹம்மது (ஸல்) அதற்கு எதிரானவர் என்று ஒப்பீட்டுப் பிரச்சாரம் செய்து பாமர மக்களை ஏமாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.//

யார் இயேசுவின் ஒரு சில வசனங்களை எடுத்து விளக்கமளிக்கிறார்கள் என்பதை இந்த தொடர் கட்டுரைகளில் பார்க்கத் தான் போகிறோம்.

அமைதியை போதித்த இயேசு எங்கே, வன்முறையை தன் ஆயுதமாகக் கொண்ட முஹம்மது எங்கே, நம் பதில்களில் நாம் காண்போம்.

அபூ அப்திர்ரஹ்மான்

அத்துடன் உலகெங்கும் வாழும் கோடிக்கணக்கான மக்கள் தம் உயிரைவிட மேலாக மதிக்கக் கூடிய, ஒரு சமுதாயத்தின் நம்பிக்கைக்கு உட்பட்ட ஆன்மீகத் தலைவரை ஒற்றை வார்த்தையில் பொய்யான குற்றச்சாட்டுகளுடன் கேவல விமர்சனம் செய்வதன் மூலம் தம்மை விட மதவெறி பிடித்தவர்கள் வேறுயாரும் இல்லை என்பதையும் வெளிக்காட்டியுள்ளனர்.

ஈஸா குர்‍ஆன்:

இதே போல, கோடிக்கணக்கான மக்கள் இறைவன் என்று நம்பும் இயேசுவை "அவர் ஒரு நபி என்றுச் சொல்லி அவமானப்படுத்துவதும், இயேசுவை முஹம்மதுவோடு ஒப்பிட்டு அவர் வெறும் நபி என்று இஸ்லாமியர்கள் சொல்வதும்" மதவெறி இல்லையா?

உங்கள் சமுதாயத்திற்கு அவர் வழிகாட்டி என்பதால், மற்ற மார்க்கங்கள் பற்றி அவர் எது சொன்னாலும் மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டுமா என்ன? அப்படி ஒன்றும் கட்டாயமில்லையே. அவர் மற்ற மார்க்கங்களை விமர்சித்தால், அதைக் கேட்டுக்கொண்டு, சும்மா இருப்பதற்கு யாரும் காதில் பூவைத்துக் கொண்டு இல்லையே!

நாளைக்கு ஒருவர் தன்னை முஹம்மதுவிற்கு பின்பு வந்த நபி என்றுச் சொல்லி, இஸ்லாம் தவறு, அதன் புனிதத்தன்மை மாற்றப்பட்டுவிட்டது, அதை சரிபடுத்த என்னை அல்லாஹ் அனுப்பினார் என்று சொன்னால், அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பீர்களா? அவருக்கு பதில் சொல்லமாட்டீர்களா, விமர்சிக்கமாட்டீர்களா, அவர் ஒரு பொய் நபி என்றுச் சொல்லமாட்டீர்களா? அதே போலத்தான் முஹம்மதுவும் கிறிஸ்தவர்களைப் பொருத்தமட்டில், "ஒரு பொய் நபி" ஆவார்.

யாருக்கு மதவெறி உள்ளது என்பதை இஸ்லாமிய நாட்டில், ஷரியா சட்டமுள்ள நாட்டில் சென்று பார்த்தால் தெரியும்?

அபூ அப்திர்ரஹ்மான்

பைபிள் என்றவுடனே பெரும்பாலானவர்களுக்கு நினைவில் வருவது "ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு" என்பது மட்டும் தான். சுருங்கக் கூறினால், இந்த ஒரு சொல்லை மட்டும் பரவலாக எடுத்து வைத்து, மனிதர்களால் கலப்படம் செய்யப்பட்ட பைபிளின் உண்மையான பக்கங்களுக்குள் பாமர மக்களைச் செல்ல விடாமல், காசுக்கு மாரடிக்கும் மிஷனரிகள் கட்டி வைத்துள்ளன.

தொடரும்...

ஈஸா குர்‍ஆன்:

இஸ்லாம் என்றுச் சொன்னால், இஸ்லாமியரல்லாத உலக மக்களுக்கு என்ன நியாபகம் வரும் என்று உங்களுக்குத் தெரியுமா?

"தீ வி ர வா த ம்" என்ற வார்த்தை தான் நியாபகம் வரும்.

இதற்கு எங்களைப் போல, விரல் விட்டு எண்ணக்கூடிய வாசகர்கள் படிக்கும் கட்டுரைகள் எழுதுபவர்கள் காரணமல்ல. இதற்கு காரணம்,

தங்களை இஸ்லாமியர்கள் என்று அடையாளம் காட்டிக்கொள்ளும் தீவிரவாதிகளும்,

தங்கள் கைகளில் துப்பாக்கியுடனும், குர்‍ஆனுடனும் புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கும் தீவிரவாதிகளும் தான் கார‌ண‌ம்.

மட்டுமல்ல, உங்கள் குர்‍ஆனின் போதனைகளும், உங்கள் அன்பான நபியின் செயல்களும் தான் படித்தவர்களின் மத்தியில் இப்படிப்பட்ட எண்ணத்தை உண்டாக்குகிறது.

இன்னும் பல ஆண்டுகள் சென்றால், இஸ்லாம் என்றால் என்ன பொருள் என்று கேட்டால், மக்கள் "வன்முறை அல்லது தீவிரவாதம்" என்று பொருள் கூறும் நாட்கள் வந்துவிடும் போல் இருக்கிறது. அதற்கான அடிப்படையை "ஒரு சில இஸ்லாமியர்கள்" இப்போதே அமைத்துக்கொண்டு இருக்கிறார்கள். மக்கள் நடமாடும் சாலைகள், கடைகள், பேருந்துகள், போதாகுறைக்கு உணவு விடுதிகளையும் விட்டு வைக்காமல் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டவர்கள் இப்போது, கிரிக்கெட்டையும் விட்டுவைக்கவில்லை.

உலகத்தில் அன்று, "இலங்கை" என்றுச் சொன்னால், அங்கு நடக்கும் உள்நாட்டுச் சண்டை, மற்றும் விளையாட்டு என்றால், பந்து வீச்சாளர் முரளிதரன் போன்றவர்கள் நியாபகத்துக்கு வருவார்கள். ஆனால், இப்போது "என்ன நியாபகம் வரும் தெரியுமா? பாகிஸ்தான், லாஹூர், மற்றும் தீவிரவாதம் கடைசியாக இஸ்லாம்".

எனவே, நாங்கள் அல்ல, உங்கள் இஸ்லாமியர்களே இஸ்லாமுக்கு அதிக பாதிப்பை உண்டாக்குகிறார்கள்.

எனவே, முதலில் இஸ்லாம் வன்முறையை செய்யும் படி சொல்வதில்லை என்று உங்கள் "இஸ்லாமியர்களுக்கு" போதியுங்கள், குர்‍ஆன் அப்படி போதிக்கவில்லை என்று நீங்கள் கருதினால்.

// மனிதர்களால் கலப்படம் செய்யப்பட்ட பைபிளின் உண்மையான பக்கங்களுக்குள் பாமர மக்களைச் செல்ல விடாமல், காசுக்கு மாரடிக்கும் மிஷனரிகள் கட்டி வைத்துள்ளன.//

பாமர மக்கள் பைபிளை தங்கள் மொழியில் படித்து தெரிந்துக் கொள்கிறார்கள், கிறிஸ்தவர்களிடம் "யாரும் தங்கள் கைவரிசையை" காட்டமுடியாது. பாமர மக்கள் இஸ்லாமின் உண்மை முகத்தை தெரிந்துக் கொள்ளக் கூடாது என்பதற்காகத் தானே, அரபியில் படித்தால் தான் அதிக நன்மைகள் என்று அவர்களை ஏமாற்றிக்கொண்டு வருகிறீர்கள்? முதலில், அரபியை விட்டு வெளியே வாருங்கள், புரியும் மொழியில் படியுங்கள், அப்போது புரியும் உண்மை எது பொய் எது என்று.

யார் இஸ்லாமை விமர்சித்தாலும் போதும், உடனே "காசுக்காக மாரடிக்கிறவர்கள்" என்று பட்டம் கொடுத்துவிடுவார்கள் இஸ்லாமியர்கள்.

நான் என் சொந்த வேலை செய்கிறேன், வருமானத்தை சம்பாதிக்கிறேன், எனக்கு யாருடைய காசும் தேவையும் இல்லை. சரி ஒரு கேள்வியை கேட்கிறேன், "இஸ்லாமை ஒருவர் கேள்வி கேட்டால், அவர் காசுக்காக மாரடிப்பதாக அர்த்தம் அப்படித்தானே, அதே நீங்கள் இஸ்லாமுக்கு வக்காளத்து வாங்கினால், உங்களுக்கு சொர்க்கத்தில் "அனேக பெண்கள்" கிடைப்பார்கள் என்ற நப்பாசையாலா?"

முடிவுரை:

அருமை அப்திர்ரஹ்மான் அவர்களே, பயங்கரவாதம், தீவிரவாதம் என்பதைப் பற்றி இஸ்லாமியர்கள் எழுதவேண்டுமென்றால், ஒரு முறைக்கு நூறு முறை சிந்திக்கவேண்டும், அப்படி சிந்திக்காத பட்சத்தில் அனேக கேள்விகளுக்கு பதில் அளிக்கும் கட்டாயத்தில் தள்ளப்படுவீர்கள். உங்களின் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

இஸ்லாம் மற்றும் பயங்கரவாதம் பற்றிய தமிழ் கட்டுரைகள்

இஸ்லாம் அமைதி மார்க்கம் இல்லை என்பதற்கு பத்து முக்கிய காரணங்க‌ள் (முஹம்மதுவின் வாழ்க்கையிலும் குர்‍ஆனிலும் வன்முறை) Top ten reasons why Islam is NOT the religion of peace (Violence in Muhammad's life and the Quran)

அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு (To Kill and To Die In The Name of Allah)

முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும் (MUHAMMAD AND THE MURDER OF ABU AFAK)

முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல் (திய வான் கோவின் கொலை) MUHAMMAD'S ASSASSINS AND INTIMIDATION IN ISLAM (The Murder of Theo Van Gogh)

முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும் (MUHAMMAD'S USE OF TORTURE)

இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)




Isa Koran Home Page Back - Abu AbdirRahmaan/AbuNoora/UlaralPage Rebuttals Index
Source: http://www.geocities.com/isa_koran/tamilpages/Rebuttals/AbuNoora/cpaarvai_violence1.html

--
 

No Response to "கிறிஸ்தவன் பார்வையின் "பைபிள் கூறும் பயங்கரவாதம் (1) கட்டுரைக்கு பதில் 1"