Tuesday, March 25, 2008
கிறிஸ்தவ பாதிரியார்கள் ஹஜ் செய்தார்கள்: உண்மையா பொய்யா?
கிறிஸ்தவ பாதிரியார்கள் ஹஜ் செய்தார்கள்: உண்மையா பொய்யா? - New 24/03/2008 முன்னுரை: நம் தமிழ் நாட்டு இஸ்லாமியர்கள்(அறிஞர்கள்) கடந்த ஒரு ஆண்டு காலமாக அதி வேகமாக தளங்களை உருவாக்கிக்கொண்டு இஸ்லாமிய செய்தியை பதித்துக்கொண்டு வருகிறார்கள். கிறிஸ்தவ கட்டுரைகளை எழுதிக்கொண்டு வருகிறார்கள். சிலர் உண்மையை பொய் என்றுச் சொல்கிறார்கள். சிலர் பொய்யை உண்மை என்று சொல்லிக்கொண்டு வருகிறார்கள். இஸ்லாம் தளங்களில் பொய் செய்திகள்:
இவர்களில் சிலர்(கவனிக்கவும் "சிலர்") பல பொய்யான தகவல்களை கொடுத்துக்கொண்டு வருகிறார்கள்.
பல ஆயிரம் கிறிஸ்தவர்கள், கிறிஸ்தவ போதகர்கள் திடீரென்று இஸ்லாமுக்கு மாறினார்கள் என்று மிகவும் ஆவேசமாக கட்டுரை எழுதினார்கள்? ஆதாரம் எங்கே என்றுக் கேட்டால், "மௌனம்"...... பதில் இருக்காது.....
இந்த கட்டுரையில், நாம், "இஸ்லாம் இணைய பேரவை" தளம் எழுதிய ஒரு கட்டுரைக்கான பதிலை காணப்போகிறோம். இந்த கட்டுரையில் இவர்களாகவே சில விஷயங்களை சுயமாக முடிவு செய்துவிட்டு அதை வெளியிட்டுள்ளனர்.
இவர்கள் சுயமாக எடுத்த முடிவு என்ன?
1. கிறிஸ்தவர்களுக்கு உண்மை மார்க்கம் இஸ்லாம் என்று தெரியுமாம்
2. அப்படி தெரிந்து இருந்தும், கிறிஸ்தவர்கள் வறட்டு கௌரவத்தால் இஸ்லாமை நிராகரிக்கிறார்களாம்.
[என்னே கண்டுபிடிப்பு! நான் மட்டும் நோபல் யாருக்கு கொடுக்கலாம் என்று நிர்ணயிக்கும் குழுவில் இருந்தால், 2008ம் ஆண்டிற்கான நோபல் பரிசை இந்த கண்டுபிடிப்பிற்காக இதை எழுதவருக்கு கொடுக்க சிபாரிசு செய்வேன்.]
நான் இந்த கட்டுரையில் மேலே குறிப்பிட்ட இரண்டு குறிப்புகளுக்கு மட்டும் பதில் தரலாம் என்று விரும்புகிறேன். அதே நேரத்தில் இவர்களின் வாடிக்கையான கிளிப்பிள்ளை வார்த்தைகளுக்கும் பதில் ஆங்காங்கே சொல்லிவிடுகிறேன்.
10ம் வகுப்பு படிக்கும் மாணவன் அல்லது மாணவிக்கு ஒரு பரிட்சை:
நான் இந்த யோவான் 2:1-11 வசனங்களை 10ம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கோ, மாணவிக்கோ கொடுத்து, இவ்வசனங்களை படிக்கச்சொல்லி, கீழ் கண்ட சில கேள்விகளுக்கு பதில் தரும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று கற்பனை செய்துக்கொள்ளுங்கள். இந்த மாண(வி)வன் என்ன பதில் சொல்வா(ள்)ன் என்பதை, இந்த கட்டுரையை படிக்கும் நீங்கள் யாராக இருந்தாலும் சிந்தித்துப்பாருங்கள். பிறகு நாம் இஸ்லாமிய அறிஞர் எம். எம். அக்பர் அவர்களின் ஆராய்ச்சியைப்பற்றி சிறிது சிந்திப்போம்.
சரி, அப்படியானால், இப்படிப்பட்ட கிறிஸ்தவ கேள்வி பதில் நிகழ்ச்சிகளை யார் நடத்துகிறார்கள்? குறைந்த பட்சம் ஒரு பெயரைச் சொல்லுங்கள் ? என்று நாம் கேட்டால் பெரும்பான்மையாக "கிறிஸ்தவர்களிலிருந்தே" பதில் வராது? அது ஏன்? சரி கிறிஸ்தவ போதகர்கள், ஊழியர்களின் பெயரைச் சொல்லுங்கள் என்று கேட்டால், உடனே குறைந்தது 10 பேரின் பெயரை அதிகமாக சிந்திக்காமலேயே சொல்லிவிடுவார்கள் கிறிஸ்தவர்கள். கிறிஸ்தவர்களுக்கு சந்தேகங்கள் இல்லையா? மாற்று மதத்தவர்கள் கிறிஸ்தவ கேள்விகளை கேட்கமாட்டார்களா? என்ற கேள்விகள் எல்லாருக்கும் எழும்பும்.
இஸ்லாம் கல்விக்கு(எம்.எம். அக்பர் அவர்களுக்கு) ஈஸா குர்ஆன் மறுப்பு - New 06/03/2008 என்ன கேள்வி இது? மக்காவில் உள்ள காபாவில் மட்டுமல்ல, உலகத்தில் எந்த நாட்டிலும் சரி, கள்ள வியாபாரம், அநியாய வியாபாரத்தை செய்ய இஸ்லாம் அனுமதிப்பதில்லை என்று நீங்கள் சொல்வீர்கள். நீங்கள் சொல்வது உண்மை தான் இதை மனதில் வைத்துக்கொண்டு மேலும் படியுங்கள்.
காபாவில் ஹஜ் சமயத்தில் கீழ் கண்டவாறு கள்ள(அநியாய) வியாபாரம் நடந்தால்?
No Response to "கிறிஸ்தவ பாதிரியார்கள் ஹஜ் செய்தார்கள்: உண்மையா பொய்யா?"
Post a Comment