Friday, March 28, 2008

பிஜேவிற்கு ஈஸா குர்‍ஆன் பதில்: இயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை? பாகம் - 1

Posted on 11:43 PM by justdial

பிஜேவிற்கு ஈஸா குர்‍ஆன் பதில்: இயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை? பாகம் - 1 - New 18-12-2007
பன்மை (Plural) எப்படி பிஜே அவர்களுக்கு ஒருமையாக (Singular) தென்பட்டது?

1. பிஜே அவர்களே சரியாகச் சொல்லுங்கள் "இயேசு ஒரு அற்புதம் மட்டும் தான் செய்தார் " என்று எழுதுகிறீரே? அதை நீங்கள் எந்த வசனத்திலிருந்து எடுத்தீர்கள்?

2. மாற்கு 6:2ம் வசனத்தில் அவரது பலத்த செய்கைகளை(அற்புதங்களை) கண்டு மக்கள் பிரமித்தார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது, அதே போல, மாற்கு 6:5ம் வசனத்தில், "சில நோயாளிகளை சுகமாக்கினார்" என்று சொல்லப்பட்டுள்ளது. "பலத்த செய்கைகள்" என்று பன்மையிலும், "சில" என்று இரண்டிற்கும் அதிகமான எண்ணிக்கையில் சொல்லப்பட்டு இருந்தால், உங்களுக்கு "ஒன்றே ஒன்று மட்டும்" என்று எப்படி இவைகளில் தெரிந்தது?

3. எப்படி இப்படி பைபிள் வசனம் சொல்லாத ஒன்றை கற்பனை செய்துக்கொண்டு எழுதுகிறீர்கள்? கற்பனை அதிகமாக இருந்தால், அதை உங்கள் இஸ்லாமிய கோட்பாடுகளை விவரிக்கும் போது பயன்படுத்திக்கொள்ளுங்கள், அதை ஏன் பைபிளில் பயன்படுத்துகிறீர்கள்?

இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில் (குப்பை சடங்குகளை குப்பையில் போடச்சொன்ன இயேசு) - New 11-12-2007
யூதர்களின் வீணான சடங்குகளினால், அவர்கள் இறைவனின் கட்டளைகளை மீறுகிறார்கள் என்று இயேசு அவர்களை கடிந்துக்கொள்கிறார். இப்படிப்பட்டவர்களின் தொழுகை வீண் என்றுச் சொல்கிறார். இதை தவறாக புரிந்துக்கொண்டார், இஸ்லாம் கல்வி தள கட்டுரையை எழுதிய கலாம் ரசூல் அவர்கள். அதைப் பற்றி மேலும் விவரங்களை இக்கட்டுரையில் காணலாம்.

இஸ்லாம்கல்வி தள கட்டுரையும் 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில் - New 06-12-2007
இஸ்லாம் கல்வி தள கட்டுரை, சில பைபிள் வசனங்களுக்கு புதுப் புது அர்த்தங்களைச் சொல்லியுள்ளது. அவைகள் தவறான புரிந்துக்கொள்ளுதல் என்று இக்கட்டுரை பதில் அளிக்கிறது.

பி.ஜைனுல் ஆபிதீனும் பரிசுத்த ஆவியும் : ஈஸா குர்‍ஆன் பதில் - New 27-11-2007
பிஜே அவர்கள் "இயேசு இறைமகனா?" என்ற புத்தகத்தில், "இயேசு பரிசுத்த ஆவியினால் நிறைந்திருப்பதால் கடவுளாக முடியுமா? " என்ற தலைப்பில், கீழ் கண்ட விவரங்களை அல்லது குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்:

1. ஒருவர் பரிசுத்த ஆவியினால் நிறைந்திருப்பதால், கடவுள் ஆக முடியாது, ஏனென்றால், பலர் பைபிளின் படி பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருக்கிறார்கள்.
2. இயேசுவுக்குள் இருந்த பரிசுத்த ஆவி, பல சந்தர்ப்பங்களில் அவரை விட்டு விலகியிருக்கிறது.
3. இயேசு இறைவன் என்றால்? பின் ஏன் சோதிக்கப்பட்டார்?
4. இயேசு யோவானால் ஞானஸ்நானம் பெறுவதற்கு முன் அவரிடம் பரிசுத்த ஆவி இருக்கவில்லை என்று தெரிகிறது.
5. இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதா, மூன்று தடவை இயேசுவை மறுத்த பேதுரு ஆகியோரும் கூட பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டிருந்தார்களா?

பி.ஜைனுல் ஆபிதீனும், திரித்துவமும் & பவுலும்: பதில் - New 12-11-2007
பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் குற்றச்சாட்டிற்கு, ஈஸா குர்‍ஆனின் பதில்: தமிழ் நாட்டில் மிகவும் புகழ் பெற்ற இஸ்லாமிய அறிஞர் பி.ஜைனுல் ஆபிதீன்(P.J. or பி.ஜே) அவர்கள், "இயேசு இறைமகனா?" என்ற புத்தகம் எழுதினார்கள். அதில் அவர் பைபிளைப் பற்றி பல கருத்துக்களை முன்வைத்துள்ளார்கள். திரித்துவ கொள்கையை உருவாக்கி, கிறிஸ்துவத்திற்குள் பவுல் நிழைந்தார் என்ற பி.ஜேயின் குற்றச்சாட்டிற்கு பதில் இக்கட்டுரையில் காணலாம்.

நாடகம்: முஸ்லீம் அரச சபையில் இயேசுவின் சீடர்கள் பேதுரு, யோவான், லூக்கா மற்றும் பவுல் - பாகம் 1 - New 09-11-2007
இது ஒரு கற்பனை நாடகம். முகமதுவிற்கு பல நூற்றாண்டுகளுக்கு பிறகு, ஒரு முஸ்லீம் நாட்டில் இயேசுவின் சீடர்கள் பேதுரு, யோவான், லூக்கா, மற்றும் பவுல் நற்செய்தி சொல்லும் போது, கைது செய்யப்படுகிறார்கள். முதல் நாள் அரச சபையில் இஸ்லாமிய அரசருக்கு முன்பாக பேதுரு கொண்டுவரப்படுகிறார். அரசருக்கும், பேதுருவிற்கும் இடையே நடக்கும் கற்பனை உரையாடல் தான் இக்கட்டுரையில் இடம் பெறுகிறது.

தமிழ் முஸ்லீம் தளமும், "அல்லேலூயா" வார்த்தையும் - New 29-10-2007
கிறிஸ்தவ எபிரேய சொல்லாகிய "அல்லேலூயா" என்ற வார்த்தைக்கு தமிழ் முஸ்லீம் தளம் சொல்லும் பொருள் எவ்வளவு வேடிக்கையானது என்பதை அறிய இங்கு சொடுக்கவும்.

இயேசு ஒரு இஸ்லாமிய தீர்க்கதரிசி - New 25-10-2007
"இயேசு ஒரு இஸ்லாமிய தீர்க்கதரிசி" இது தான் இஸ்லாமியர்கள் சொல்லும் செய்தி. முகமதுவும் "இயேசுவிற்கு மிகவும் அருகாமையில் இருக்கும் உலக நபர்களில், தான் மட்டும் தான் இயேசுவிற்கு மிகவும் நெருக்கமானவர்" என்கிறார். ஆனால், இந்த கட்டுரையை படிக்கும் நீங்கள் நன்றாக புரிந்துக்கொள்வீர்கள், இயேசுவின் போதனையும், முகமதுவின் போதனையும் ஒன்றல்ல.

இது தான் இஸ்லாம் மற்றும் தமிழ்முஸ்லீம் தளங்களின் கட்டுரைகளும் எங்கள் பதில்களும்

1. இயேசுவின் வரலாறு தொடர் 1 லிருந்து 5 வரை
2. இஸ்மவேலை புகழும் பைபிள்
3. யூதா, தாமார் நிகழ்ச்சி
4. பைபிளில் முகமது?

No Response to "பிஜேவிற்கு ஈஸா குர்‍ஆன் பதில்: இயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை? பாகம் - 1"