இயல்புக்கு மாற்றமாக ஒரு அத்தாட்சி மிக்க இறைத்தூதரை அனுப்புவோம் என்ற இறைவனின் "ஏற்பாடு" அல்லது "திட்டம்" யூதர்களால் பொய்யாக்கப்பட்டது இல்லையா?
ஆனால், இயேசுவின் வருகையின் நோக்கத்தைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்று பாருங்கள்.
1. ஏதோன் தோட்டத்தில் ஆதாம் பாவம் செய்ததால், தேவனோடுள்ள தன் உறவு முறிந்துவிட்டது.
2. மனிதன் வம்சத்தில் பிறக்கும் ஒரு வித்தினால்( மனிதனால்) உன் தலை நசுக்கப்படும் என்று தேவன் சாத்தனுக்குச் சொல்கிறார்.
3. கன்னியின் வயிற்றில் ஒருவர் பிறந்து, சிலுவையில் உலகத்தின் எல்லாருடைய பாவங்களுக்காக மரிப்பார், பிறகு உயிரோடு எழுந்திருப்பார் என்று தேவன் இயேசுவின் பிறப்பிற்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே தீர்க்கதரிசிகள் மூலமாகச் சொன்னார்.
4. தேவதிட்டத்தின் படியே இயேசு கன்னியின் வயிற்றில் பிறந்தார், சிலுவையில் மரித்தார், உயிரோடு எழுந்தார்.