Showing posts with label முரண்பாடுகள். Show all posts
Showing posts with label முரண்பாடுகள். Show all posts

Thursday, December 25, 2008

குரான் முரண்பாடுகள்-22

மோசேயின் சகோதரியின் உரையாடல்

 
குர்‍ஆன் 20:40 மற்றும் 28:12 என்ற வசனங்களில் மோசேயின் சகோதரி பார்வோன் குடும்பத்தாரிடம் பேசிய உரையாடல் உள்ளது.
 
 
(பேழை கண்டெடுக்கப்பட்ட பின்) உம் சகோதரி நடந்து வந்து, 'இவரை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒருவரை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா?' என்று கேட்டாள்,….. (குர்‍ஆன் 20:40)

 
….; (அவருடைய சகோதரி வந்து) கூறினாள்; "உங்களுக்காக பொறுப் பேற்று அவரை(ப் பாலூட்டி) வளர்க்கக் கூடிய ஒரு வீட்டினரை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? மேலும் அவர்கள் அவர் நன்மையை நாடுபவராக இருப்பார்கள்." (குர்‍ஆன் 28:12)
 
 
மேலே உள்ள வசனங்களை கவனியுங்கள், எவ்வளவு வித்தியாசமாக இரு வசனங்களும் சொல்கின்றன.
 
 
1. குர்‍ஆன் 20:40ல், "பொறுப்பை ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒருவரை" என்றுச் சொன்ன அதே சகோதரி, குர்‍ஆன் 28:12ல் "ஒரு வீட்டினரை" என்று சொல்கிறார். இதில் எது சரி, எது தவறு? மோசேயின் சகோதரி "ஒருவரை காட்டட்டுமா?" என்றுச் சொன்னாரா அல்லது "ஒரு வீட்டினரைக் காட்டட்டுமா?" என்றுச் சொன்னாரா? பொருளில் அதிகமாக வித்தியாசம் இல்லையானாலும், இஸ்லாமியர்களின் "வேத நிபந்தனையை" குர்‍ஆனுக்கு இட்டால் எப்படி இருக்கும் என்று நாம் சோதிக்கும் போது, இப்படிப்பட்ட முரண்பாடுகள் வெடிக்கின்றன‌

 
2. குர்‍ஆன் 28:12ல் "அவர்கள் அவர் நன்மையை நாடுபவராக இருப்பார்கள்" என்ற அதிகபடியாக சொன்னதாக உள்ளது, ஆனால் இந்த விவரம் குர்‍ஆன் 20:40ல், அதே சகோதரி பேசிய உரையாடலில் இல்லை. அல்லாவின் மாறாத பிழையில்லாத, குர்‍ஆனில் ஏன் இந்த வித்தியாசம்? இஸ்லாமியர்கள் முக்கியமாக ஏகத்துவ தள அறிஞர்கள் விளக்குவார்களா?
 
 
இதே போல அல்லா பேசிய இன்னொரு எடுத்துக்காட்டு, இதில் கூட சில வார்த்தைகள் மாறுபடுகிறது. இந்த வித்தியாசத்தை(Verbal Differences) குர்‍ஆனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த‌ யூசுப் அலி அவர்கள் கூட கவனித்துள்ளார் மற்றும் அதற்கு பின்குறிப்பும் எழுதியுள்ளார்.