1. அல்லாவின் உரையாடல் (குர்ஆன் 20:39 & 28:7)
குர்ஆன் 20:39 மற்றும் 28:7 என்ற வசனங்களில் அல்லா மோசேயின் தாயிடம் பேசிய வார்த்தைகள் கொடுக்கப்பட்டுள்ளது.
(குர்ஆன் 20:39) அவரை (குழந்தையை)ப் பேழையில் வைத்து (அப்பேழையை நீல்) நதியில் போட்டுவிடும்; பின்னர் அந்த நதி அதைக் கரையிலே கொணர்ந்து எறிந்து விடும், அங்கே எனக்கு பகைவனும், அவருக்குப் பகைவனுமாகிய (ஒரு)வன் அவரை எடுத்துக்கொள்வான்"…..
(குர்ஆன் 28:7) நாம் மூஸாவின் தாயாருக்கு; "அவருக்கு (உன் குழந்தைக்குப்) பாலூட்டுவாயாக அவர் மீது (ஏதம் ஆபத்து வரும் என்று) நீ பயப்படுவாயானால், அவரை ஆற்றில் எறிந்து விடு - அப்பால் (அவருக?காக) நீ பயப்படவும் வேண்டாம், துக்கப்படவும் வேண்டாம்; நிச்சயமாக நாம் அவரை உன்னிடம் மீள வைப்போம்; இன்னும், அவரை (நம்) தூதர்களில் ஒருவராக்கி வைப்போம்" என்று வஹீ அறிவித்தோம்.
மேலே உள்ள வசனங்கள் குறிப்பிடுவது அல்லாவின் ஒரே உரையாடல், ஆனால், எவ்வளவு வேறுபாடுகள் பாருங்கள். இவ்வசனங்களைக் காணும்போது கீழ் கண்ட கேள்விகள் எழுகின்றன. ஏன் இந்த வித்தியாசங்கள் என்பதை இஸ்லாமியர்கள் தான் விளக்கவேண்டும்.
1. குர்ஆன் 20:39ம் வசனத்தில் "குழந்தையை பேழையில் வைத்து நதியில் போட்டு விடும்" என்று உள்ளது ஆனால், குர்ஆன் 28:7ல், "நீ பயப்பட்டால் ஆற்றில் போட்டுவிடு" என்று வருகிறது. ஏன் இந்த வித்தியாசம். அதாவது, "நீ பயப்பட்டால்" என்ற வார்த்தையை அல்லா சொன்னாரா இல்லையா? ஒருமுறை சொன்னவர் இன்னொரு முறை ஏன் சொல்லவில்லை?
2. இரண்டு இடங்களிலும் பேசியவர் "அல்லா" தான் என்றுச் சொன்னால், தான் பேசியதை தானே மறந்துவிட்டாரா?3. ஆற்றில் விட்டுவிட்டு, அவரைப் பற்றி "நீ பயப்படவும் வேண்டாம், துக்கப்படவும் வேண்டாம்" என்று குர்ஆன் 28:7ல் அல்லா சொல்கிறார். ஆனால், இந்த விவரத்தை குர்ஆன் 20:38ல் அல்லா சொல்லவில்லை? ஏன் இந்த வித்தியாசம்?
4. குர்ஆன் 20:39ல் "அங்கே எனக்கு பகைவனும், அவருக்குப் பகைவனுமாகிய (ஒரு)வன் அவரை எடுத்துக்கொள்வான்" என்றுச் சொல்கிறார். ஆனால், இந்த விவரம் குர்ஆன் 28:7ல் இல்லை. ஏன் இந்த வித்தியாசம்?
5. குர்ஆன் 28:7ல், "நிச்சயமாக நாம் அவரை உன்னிடம் மீள வைப்போம்; " என்றும், "அவரை (நம்) தூதர்களில் ஒருவராக்கி வைப்போம்" என்றும் சொல்லியுள்ளார். ஆனால், இந்த விவரம் குர்ஆன் 20:39ல் இல்லை? அது ஏன்?
6. உண்மையில் மோசேயின் தாயிடம் குர்ஆன் 20:39ம் வசனத்தில் வருவதைப்போலச் சொனனாரா அல்லது குர்ஆன் 28:7ம் வசனத்தில் வருவதைப்போலச் சொன்னாரா?
இவைகள், எல்லாம் அறிந்த அல்லா பேசிய உரையாடல் பற்றிய குர்ஆன் வித்தியாசங்கள்.