Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Friday, February 13, 2009

காப்பிரைட்:மற்றவர்களின் கட்டுரைகளை பதியும் போது கவனிக்கப்படவேண்டிய மிக முக்கிய எளிமையான விதிமுறை

 காப்பிரைட்:மற்றவர்களின் கட்டுரைகளை பதியும் போது கவனிக்கப்படவேண்டிய மிக முக்கிய எளிமையான விதிமுறை
 

 அபூநூறா தளத்திற்கு பதில் -1 : போலி உமரும் உளறல்களும்
 

 

முன்னுரை:

கடந்த இரண்டாண்டுகளாக தமிழ் இணைய தளங்கள் முக்கியமாக இஸ்லாமிய கிறிஸ்தவ இணைய தளங்கள் அதிகமாக பெருகிக்கொண்டே இருக்கிறது. இதற்கு அனேக காரணங்கள் இருந்தாலும், அவைகளில் மிகவும் முக்கியமான காரணம், "இஸ்லாமை கேள்வி கேட்க" கிறிஸ்தவர்கள் ஆரம்பித்தது தான்.

தன் வழக்கிலே முதல்பேசுகிறவன் நீதிமான்போல் காணப்படுவான்; அவன் அயலானோ வந்து அவனைப் பரிசோதிக்கிறான் (நீதிமொழிகள் 18:17)

இஸ்லாமியர்கள் சொல்லும் அனைத்திற்கும், எழுதும் எல்லாவற்றிற்கும் தஞ்சாவூர் பொம்மைகள் போல தலையாட்டாமல் கிறிஸ்தவர்கள் கேள்விகள் கேட்டு, பதில்கள் சொல்வதினால், தளங்கள் அதிகமாகிக் கொண்டே வருகிறது.

நேர்மையானவர்களின் நேர்மையின்மை:

இஸ்லாமியர்களோ, கிறிஸ்தவர்களோ தளங்கள் ஆரம்பிப்பது தவறில்லை, அவைகளில் தங்கள் கருத்தை, விமர்சனத்தை எழுதுவதும் தவறில்லை(இந்த நாடு, இஸ்லாமிய ஆட்சி நடக்கும் நாடுகள் போல் இல்லாமல், ஜனநாயக நாடாக இருப்பதால், எல்லாருக்கும் சுதந்திரம் உண்டு). ஆனால், நேர்மையான முறையில் செய்கிறார்களா என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்லவேண்டும்.

கிறிஸ்த தளங்கள் தாங்கள் பதிக்கும் கட்டுரைகளின் தொடுப்புக்களை தருகிறார்கள். எந்த தள கட்டுரைக்கு பதில் தருகிறோம் என்பதை தொடுப்புக்களோடு பதிக்கிறார்கள்.

ஆனால், இஸ்லாமியர்கள்...? இஸ்லாமிய அறிஞர்கள்....? உலகத்திலேயே தங்கள் மதம் தான் உண்மையானது, நாங்கள் தான் நேர்மையானவர்கள் என மார்தட்டி ஆவேசமாக எழுதும் அறிஞர்கள் இப்படி நியாயமான முறையில் நடந்துக் கொள்கிறார்களா? என்று கேட்டால், இல்லை என்பது தான் பதில்.

இஸ்லாமிய தளங்களுக்கு வேண்டுகோள்:

ஈஸா குர்‍ஆன் தளத்தில் இரண்டு வகையான கட்டுரைகள் வெளியாகின்றன.

1) நான்(உமர்) எழுதும் கட்டுரைகள்

2) ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்தின் கட்டுரைகள்

இவைகளில், நான் எழுதும் கட்டுரைகளை நீங்கள் உங்கள் தளங்களில் பதிக்கும் போது, அல்லது சில வரிகளை மேற்கோள் காட்டும் போது என் தளத்தின் தொடுப்பை தரவேண்டியது அவசியம். ஆனால் நீங்கள் தருவதில்லை ஏனென்றால், நீங்கள் உங்கள் முஹம்மது நடந்த வழியில் நடப்பவர்கள் என்று சொல்லிக்கொள்கிறீர்கள், அல்லாஹ் காட்டிய வழியில் நடப்பவர்கள் என்றுச் சொல்லிக்கொள்கிறீர்கள், உங்களுக்கு வழிகாட்டியவர்கள் இப்படித் தான் உங்களுக்குச் சொல்லிக்கொடுத்தார்களா என்று எல்லாரும் சந்தேகம் கொள்ளும் அளவிற்கு அநாகரீகமாக தளத்தின் மூல தொடுப்புக்களை தருவதில்லை.

இப்படி நீங்கள் என் தளத்தின் தொடுப்பை பதிப்பதில்லை என்று பல முறை சொல்லியாகிவிட்டது. நீங்கள் திருந்துவதாக தெரியவில்லை. ஆகையால் விட்டுவிட்டேன்.

ஆனால், ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்தின் கட்டுரைகள் பதிப்பு காப்புரிமை(Copy Right) பெற்ற கட்டுரைகள், ஆகையால், அவைகளை பதிக்கும் போது கட்டாயமாக நீங்கள் தொடுப்பை கொடுத்தே ஆகவேண்டும். அப்படி தரவில்லையானால், அது சட்டவிரோத செயலாகும். இஸ்லாமியர்கள் சட்டவிரோத செயல்களில் ஈடுபடாதவர்கள் என்ற உணர்வை மக்களின் மனதில் உண்டாக்கவேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால், ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தள கட்டுரைகளை அல்லது அதன் ஒரு சில வரிகளை பதிக்கும்போது மூல தொடுப்பை தாருங்கள். இதனை செய்ய மறுத்தால், சட்டப்படி என்ன செய்ய வேண்டியதோ அதனை நான் செய்யவேண்டி வரும்.

உங்களுக்கு ஒரு மாதம் அவகாசம் தருகிறேன்(இன்று தேதி 13 பிப்ரவரி). அதற்குள் ஆன்சரிங் இஸ்லாம் தள கட்டுரைகளுக்கு தொடுப்பை கொடுங்கள், இல்லையானால், நான் ஆன்சரிங் இஸ்லாம் தள நிர்வாகத்திற்கு இதனை தெரிவிக்க வேண்டி வரும். இந்த எச்சரிக்கையை ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்தின் கட்டுரையை பதிக்கும் அனைத்து இஸ்லாமிய தளங்களுக்கும் முன்வைக்கிறேன்.

இதனை நீங்கள் வேண்டுகோளாக எடுத்துக்கொள்ளலாம் அல்லது எச்சரிக்கையாகவும் எடுத்துக்கொள்ளலாம். உங்கள் மொழியில் சொல்லவேண்டுமென்றால், ஒரு காபிர் ஒரு இஸ்லாமியரை எச்சரிக்கை செய்யும் அளவிற்கு நீங்கள் தாழ்ந்துப் போக வேண்டாமென்றுச் சொல்கிறேன்.

முக்கியமாக அபூநூறா தள நிர்வாகிகளே,

உங்களுக்குச் சொல்லிக்கொள்கிறேன், "உளறல்பேஜ் (http://ularalpage.blogspot.com/2009/02/blog-post.html)" என்ற பிளாக்கரில் பதித்த கட்டுரை ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் கட்டுரையாகும், அது காப்புரிமை பெற்ற கட்டுரை, எனவே அக்கட்டுரையின் கடைசியில் மூல தொடுப்பாகிய‌ ஆன்சரிங் இஸ்லாம் தள தொடுப்பை தாருங்கள், அல்லது கட்டுரையை எடுத்துவிடுங்கள்.

என் இஸ்லாமிய பதில்/மறுப்பு கட்டுரைகளில் உங்கள் கட்டுரைகளை நான் பயன்படுத்தும் போது, பின்பற்ற வேண்டிய காப்புரிமை விவரங்களை எனக்குச் சொல்லவேண்டுமானாலும் சொல்லுங்கள், நானும் அதற்கு கட்டுப்படுவேன். காப்புரிமை சம்மந்தப்பட்ட விவரங்களுக்கு மட்டுமே கட்டுப்படுவேன். என் கட்டுரைகளில் உங்கள் கட்டுரைகளை மேற்கோள் காட்டி, அதன் தொடுப்பை தராமல் மறந்து இருந்தாலும் தெரிவித்தால், நான் திருத்திக்கொள்வேன்.

இனி, அபூநூறா தளத்தில் பதித்த கட்டுரைப் பற்றி கவனிப்போம்

(http://abu-noora.blogspot.com/2009/02/blog-post.html)

என்னை திட்டி தங்கள் கோபத்தை தீர்த்துக்கொள்ளும் அமைதி மார்க்கத்தார்கள்:

மரியாதை கொடுத்து மரியாதை வாங்கிக்கொள்ளுங்கள் என்று பல முறைச் சொல்லியும், இஸ்லாமியர்கள் திருந்துவதாகத் தெரியவில்லை. நான் அனேக முறை சொல்லி சொல்லி சோர்ந்துவிட்டேன். அபூநூறா தளம் எழுதுவதை கவனியுங்கள்.

அதில் ஒருவகையான மனோவியாதிக்கு அடிமையாகிவிட்ட உமர் என்பவரின் சமீபத்திய உளறல் ஒன்றை படிக்க நேர்ந்தது. (அதைப் படிக்க இதைச் சொடுக்கவும்.)



"உலகின் பல பாகங்களில் இஸ்லாம் வேகமாக பரவுவதை" முஸ்லிம்கள், "இஸ்லாம் தான் சிறந்த மார்க்கம் என்பதற்கான ஆதாரமாகக் காட்டுகிறார்களாம். அது தவறாம்".

ஒரே கேள்வி:

அவ்வாறு முஸ்லிம்கள் எங்கே கூறுகின்றனர்? என்று கேட்டு விட்டாலே கோயபல்ஸ் உமரின் அயோக்கியத்தனம் கழண்டு விழுந்து விடும்.

மனோவியாதி என்றும், அயோக்கியத்தனம் என்றும் இந்த அபூநூறா தளக்காரர் சொல்லியுள்ளார்.

இப்போது இவர்களுக்கு ஒரு கதையைச் சொல்வது தான் சரியானது:

அதாவது ஒரு ஊரில் ஒரு சாது இருந்தாராம், சிலர் அவரை தொடர்ந்து திட்டிக்கொண்டே இருந்தார்களாம். அப்போது அவரது சீடர்கள் "அவர்கள் அப்படி திட்டிக்கொண்டு இருக்கும்போது ஏன் சும்மா இருக்கிறீர்கள்?" என்று கேட்டார்களாம். அதற்கு அந்த சாது, "உங்களுக்கு பிடிக்காத ஒரு பொருளை யாராவது உங்களுக்கு கொடுத்தால் என்ன செய்வீர்கள்?" என்று கேட்டாராம். அதற்கு அவர்கள், "கொடுத்த நபரிடமே திருப்பி கொடுத்துவிடுவோம்" என்றார்களாம். அப்போது, அந்த சாது அதைத் தான் நாம் இப்போது செய்துக்கொண்டு இருக்கிறேன், எனக்கு தேவையில்லாத பொருளை எனக்கு வேண்டாம் என்றுச் சொல்லி அவர்களிடமே கொடுத்துவிடுகிறேன் என்றாராம்.

இந்த கதையில் வருவது போல, நான் செய்யமாட்டேன். நான் இவர்கள் தருபவற்றை அப்படியே இவர்களின் நபியிடம் கொடுத்துவிட விரும்புகிறேன். அவரிடம் கொடுத்து, இதோ பாருங்க இஸ்லாமிய நபி அவர்களே, உங்கள் சீடர்கள் இவைகளை என்னிடம் கொடுத்தார்கள், அவைகள் எனக்கு தேவையில்லாதது, எனவே, உங்களிடம் தருகிறேன், நீங்களாவது வைத்துக்கொள்ளுங்கள், அல்லது வேறு என்ன செய்யமுடியுமோ அதை செய்யுங்கள் என்று சொல்லி கொடுத்துவிடுகிறேன்.

ஆகையால், இனி எந்த இஸ்லாமியராவது என்னை "மனோவியாதிக்காரன்" என்றுச் சொன்னால், அது அவர்களின் நபிக்கு அவர்கள் சொல்வதாக ஆகிவிடும், எனவே எச்சரிக்கையாக இருங்கள் இஸ்லாமியர்களே! என்னை அயோக்கியன் என்றுச் சொன்னால், அது அவர்களது நபிக்கு அவர்களே தருவதாக அர்த்தமாகி விடும், எனவே எச்சரிக்கையாக இருங்கள்
.

இஸ்லாமியர்கள் அடிக்கடி சொல்லும் வாதங்கள்:

இஸ்லாமியர்கள் ஒரு சில வாதங்களை திரும்ப திரும்ப கிளிப்பிள்ளையைப் போல சொல்லிக்கொண்டே இருப்பவர்கள். அவைகளில் சில வாதங்கள் கீழ் கண்டவிதமாக இருக்கும்.

1) இஸ்லாம் தான் உயர்ந்தது, சிறந்தது, இதனை விமர்சிப்பவர்கள் எப்போதும் வெற்றியடைய மாட்டார்கள்.

2) உலகத்தின் பல நாடுகளில் இஸ்லாம் தான் வேகமாக வளரும் மதமாக உள்ளது, இதற்கு இஸ்லாமின் கோட்பாடுகள் தான் காரணம், இஸ்லாம் சத்தியமார்க்கம் என்பதை இதனால் அறியலாம்..

3) இஸ்லாமுக்கு மக்கள் அலையலையாக வருகிறார்கள். இஸ்லாம் தான் பெண்களுக்கு உரிமைகளை அதிகமாக தருகிறது.

4) தலைசிறந்த தலைவர்கள் 100 பேர்களில் முஹம்மது தான் முதலில் இருக்கிறார் (The 100: A Ranking of the Most Influential Persons in History- http://en.wikipedia.org/wiki/The_100)

இப்படி சொல்லிக்கொண்டு போகலாம். இவைகளை கண்டிப்பாக நாம் அடிக்கடி நம்முடைய இஸ்லாமிய நண்பர்கள் மூலமாக கேட்டிருப்போம்.

ஆனால், அபூநூறா தளத்தின் கட்டுரையில் இப்படியாக எழுதப்பட்டுள்ளது.

வேகமாக வளர்ந்தால் அது உண்மையானதாக இருப்பதாக பொருள் என்று முஸ்லிம்கள் கூறாத ஒன்றை தானே உருவாக்கி, அதற்குத் தானே பதில் கூறி திருப்திபட்டுக் கொள்ளும் இவரைக் கண்டுகொள்ளாமல் விடுவது தான் சிறந்தது என்றாலும் இல்லாத ஒரு குற்றச்சாட்டை "பொய்களின் கூடாரமான" கிறிஸ்தவத்தின் தூதர்கள் பரப்பும் பொழுது "அவ்வாறு இல்லை" என்று கூற வேண்டிய கடமை முஸ்லிம்களுக்கு உருவாகிறது.

இஸ்லாம் வேகமாக வளருகிறது, இது எதை காட்டுகிறது, இஸ்லாம் தான் உண்மையான மார்க்கம் என்பதைக் காட்டுகிறது என்று எந்த இஸ்லாமியரும் சொல்வதில்லையாம்.

ஒரு வேளை இந்த கட்டுரையை படிப்பவர்கள் இஸ்லாமியரல்லாதவராக இருப்பீர்களானால், நீங்கள் உங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது, உங்கள் இஸ்லாமிய நண்பரிமிருந்து கேட்பீர்கள், அல்லது கேள்விப்பட்டு இருப்பீர்கள்.

ஒரு வேளை இதை படிப்பவர்கள் இஸ்லாமியராக இருப்பீர்களானால், நீங்கள் சாதாரணமாக இணையத்தை பயன்படுத்துபவராக இருப்பீர்களானால், இப்படி சொல்லியிருப்பீர்கள் அல்லது உங்களிடம் மற்ற இஸ்லாமியர்கள் சொல்வதை கேட்டிருப்பீர்கள்.

ஆனால், அபூநூறா தளம் சொல்கிறது, இப்படி இஸ்லாமியர்கள் சொல்வதில்லையாம்.

உளறல்களிலெல்லாம் மிகப்பெரிய உளறல்:

மேலே உள்ளது போல, "இஸ்லாமியர்கள் சொல்லமாட்டார்கள் என்று" மறுத்துவிட்டு, தன் கட்டுரையிலேயே இன்னொரு இடத்தில் அருமை சகோதரர் அபூநூறா அவர்கள் கீழ் கண்டவாறு எழுதுகிறார்கள்:

ஆக உலகில் யாரேனும் ஒருவர் அல்லது ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் ஒரே குரலில் 'இஸ்லாம் வேகமாக வளருகின்றது' என்று சொல்வார்களாயின் அது தங்களுக்குக் கிடைத்த மகிழ்ச்சியான செய்தியை உணர்ச்சி பூர்வமாக வெளிப்படுத்துவதேயன்றி வேறில்லை.

அருமையான சகோதரரே, அந்த மகிழ்ச்சி பெருவெள்ளத்தில் மூழ்கிவிட்டு, இஸ்லாமியர்கள் சொல்லும் விவரங்கள் தான் என் கட்டுரையில் தரப்பட்டு இருந்தது.

கட்டுரையின் ஆரம்பத்தில், இப்படி எந்த இஸ்லாமியரும் சொல்வதில்லை என்று சொல்லிவிட்டு, பிறகு உலக இஸ்லாமியர்கள் இப்படி சொல்வார்களானால், அது உணர்ச்சிப் பெருக்கு என்கிறார்.

இதனை எங்கே சென்று முறையிடுவது?

இதை என்னவென்றுச் சொல்வது?

உளறல் என்பதா அல்லது "உளறல்களின் சிகரம்" என்றுச் சொல்வதா?


இதை வாசிக்கும் வாசகர்களே சிந்திக்கட்டும்.

ஆக, இப்போது எல்லாருக்கும் புரிந்திருக்கும் யார் உளறுகிறார்கள் அல்லது யார் உளறுகிறோம் என்பதை அறியாமலேயே உளறுகிறார்கள் என்று?

வேகமாக வளருகிறது என்பதைப் பற்றி இஸ்லாமிய தளத்திலிருந்து சில வரிகள்:

இஸ்லாம் இணைய பேரவையின் கட்டுரை:

....உண்மையில் இன்று உலகத்தில் வேகமாக வளரும் மார்க்கம் இஸ்லாம் என்பதை நிதர்சனாமாக நிருபித்துவருகிறது.

சர்வதேச அளவில் இஸ்லாம் மக்கள் உள்ளத்தில் எந்தளவு ஆன்மீக மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதற்கு உலகின் முதன்மை நாடாகத் திகழும் அமெரிக்காவில் இருந்து கிடைக்கும் இஸ்லாம் பற்றிய செய்திகளே, இஸ்லாம் ஒரு சத்தியமார்க்கம் என்பதற்கு சரியான எடுத்துகாட்டாகும். உலக மக்களிடையே ஏற்பட்டிருக்கும் ஆன்மீக வெற்றிடத்தை நிரப்பி இன்று அமெரிக்காவில் மிக வேகமாகப் பரவும் மதமாக இஸ்லாம் திகழ்ந்து கொண்டிருக்கின்றது எனலாம்....

Source: http://www.tmpolitics.net/iip/Articles/sathiyam.htm
Formats mine

மேலே அடிக் கோடிட்ட வரிகளைப் பாருங்கள்.

"இஸ்லாம் ஒரு சத்தியமார்க்கம் என்பதற்கு சரியான எடுத்துகாட்டாகும்."

எது சரியான எடுத்துக்காட்டு என்று இஸ்லாம் இணைய பேரவைச் சொல்கிறது?

அமெரிக்காவில் இஸ்லாம் வேகமாக வளருவது தான் இஸ்லாம் உண்மையான மார்க்கம் என்பதை எடுத்துக்காட்டுகிறதாம். இப்படி இஸ்லாமியர்கள் சொல்கிறார்கள் என்று தானே நான் எழுதினேன்( http://www.geocities.com/isa_koran/tamilpages/Authors/abumiriam/moreisbetter.html ).

என்ன அபூநூறா அவர்களே, இஸ்லாம் இணைய பேரவைத் தள அறிஞர்களும் என்னைப் போல "மனோ வியாதியால்" பாதிக்கப்பட்டவர்கள் என்று சொல்ல வருகிறீர்களா?

அவர்களே உங்களை நியாயம் தீர்க்கட்டும்.

உளறல் தள நிர்வாகி அவர்களுக்கு உமரின் வேண்டுகோள்கள்:

நான் எழுதியது உளறல் என்றுச் சொல்லி, ஒரு தளத்தை ஆரம்பித்து, அதில் என் கட்டுரையை பதித்துள்ளீர்கள், மிக்க நன்றி. ஆனால் மூல தொடுப்பு கொடுக்கும் படி நான் இக்கட்டுரையின் ஆரம்பத்தில் உங்களை கேட்டுள்ளேன்(அல்லது) எச்சரிக்கை செய்துள்ளேன். நீங்கள் கட்டுரையின் மூலத்தை(ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தொடுப்பை) தருவீர்கள் என்று நம்புகிறேன்.

முன்னுரையாக‌ ஒரு வரியும் சொந்தமாக கொடுக்காமல் நான் எழுதிய கட்டுரையை அப்படியே பதித்துள்ளீர்கள், அதே போல என் மற்ற கட்டுரைகளையும் (மன்னிக்கவும், உளறல்களையும்) பதிக்கும் தைரியம் உங்களுக்கு இருக்கின்றதா?

அதாவது, குர்‍ஆன் சம்மந்தப்பட்டு, உங்கள் நபி சம்மந்தப்பட்டு அனேக கட்டுரைகள் என் ஈஸா குர்‍ஆன்(http://www.geocities.com/isa_koran) தளத்திலும், ஆன்சரிங் இஸ்லாம் தமிழ்(http://www.answering-islam.org/tamil)தளத்திலும் இருக்கின்றனவே, அவைகளை பதிப்பீர்களா?

அப்படி பதிக்கமாட்டேன் என்று நீங்கள் அடம் பிடித்தால், இந்த ஒரு கட்டுரைத் தவிர மற்ற அனைத்து கட்டுரைகளும் "உமரின் உளறல்கள் அல்ல, அவைகள் இஸ்லாமின் உண்மை முகங்கள்" என்று எல்லாரும் முடிவு செய்துக்கொள்ளலாமா?

அதாவது, "உளறல் பக்கம்" என்றுச் சொல்லி, ஒரு கட்டுரையை மட்டுமே பதித்துள்ளீர்கள், இதுவரை இந்த ஒரு கட்டுரையை மட்டுமே "உளறல்" என்று நீங்கள் கருதுகிறீர்களா?

அல்லது எங்களுடைய அனைத்து கட்டுரைகளும்(முஹம்மதுவின் கொலைகள், குர்‍ஆனில் உள்ள எழுத்துபிழைகள், முரண்பாடுகள், etc…) உளறல்கள் என்று கருதுகிறீர்களா?

அப்படி என் எல்லா கட்டுரையும் உளறல் என்று நீங்கள் சொன்னால், அவைகளை உங்கள் (மன்னிக்கவும் என் உளறல் பக்கம்) தளத்தில் எப்போது பதிக்கப்போகிறீர்கள்?

ஈஸா குர்‍ஆனின் அனைத்து கட்டுரைகளை நீங்கள் அந்த தளத்தில் பதிக்க நான் அனுமதி அளிக்கிறேன். அவைகளுக்கு நீங்கள் உங்கள் வழக்கப்படி பயந்துப்போய் தொடுப்புக்களை கொடுக்காமல் இருந்தாலும் பரவாயில்லை. ஆனால், ஆன்சரிங் இஸ்லாம் கட்டுரைகளுக்கு மட்டும் மூல தொடுப்பை கொடுத்துவிடுங்கள்.

எப்படி வசதி?

எனக்கு ஒரு விவரம் தெரிந்தாக வேண்டும், நீங்கள் என் இந்த ஒரு கட்டுரையை மட்டும் உளறல் என்று கருதுகிறீர்களா அல்லது என் எல்லா கட்டுரைகளையும் உளறல்கள் என்று கருதுகிறீர்களா?

நான் எழுதுவது எல்லாம் உளறல் என்றுச் சொன்னால், அந்த எல்லா உளறல்களை எப்போது பதிப்பீர்கள்?

ஒரு நகைச்சுவை நியாபகத்திற்கு வருகிறது

நான் ஒரு முறை படித்த ஒரு நகைச்சுவை நியாபகத்திற்கு வருகிறது, அதனை கீழே தருகிறேன், படிக்கவும்:

There was a Christian lady who lived next door to an atheist. Every day, when the lady prayed, the atheist guy could hear her. He thought to himself, "She sure is crazy, praying all the time like that. Doesn't she know there isn't a God?"

Many times while she was praying, he would go to her house and harass her, saying "Lady, why do you pray all the time? Don't you know there is no God?" But she kept on praying.

One day, she ran out of groceries. As usual, she was praying to the Lord explaining her situation and thanking Him for what He was gonna do. As usual, the atheist heard her praying and thought to himself, "Humph! I'll fix her."

He went to the grocery store, bought a whole bunch of groceries, took them to her house, dropped them off on the front porch, rang the door bell and then hid in the bushes to see what she would do. When she opened the door and saw the groceries, she began to praise the Lord with all her heart, jumping, singing and shouting everywhere! The atheist then jumped out of the bushes and told her, "You ol' crazy lady, God didn't buy you those groceries, I bought those groceries!" At hearing this, she broke out and started running down the street, shouting and praising the Lord.

When he finally caught her, he asked what her problem was. She said, "
I knew the Lord would provide me with some groceries, but I didn't know he was gonna make the devil pay for them!" Source: http://www.basicjokes.com/djoke.php?id=2446

முடிவுரை:

அன்பான சகோதரரே (நீங்கள் கிறிஸ்தவம் பார்வை தள அறிஞர் அபூ அப்திர்ரஹ்மான் என்று நான் கருதுகிறேன்)

உங்களுக்கு உங்கள் இஸ்லாம் தான் உண்மையான மார்க்கம் என்ற நம்பிக்கை இருந்தால்,

நான் எழுதுகின்ற கட்டுரைகள் உளறல்கள் என்று கருதினால்,

என் அனைத்து கட்டுரைகளையும் பதியுங்கள். இப்போது பதித்தீர்களே, அது போல, அதாவது கட்டுரையை அப்படியே காபி பேஸ்ட் செய்துவிடுங்கள். நான் பதிக்கமாட்டேன் என்றுச் சொன்னால், மற்ற கட்டுரைகளை நீங்கள் உளறல்கள் அல்ல என்று ஒப்புக்கொண்டீர்கள் என்று பொருளாகிவிடும்.

References:

1) http://www.geocities.com/isa_koran/tamilpages/Authors/abumiriam/moreisbetter.html
2) http://ularalpage.blogspot.com/2009/02/blog-post.html
3) http://abunoora.com/




Isa Koran Home Page
 
 
setstats1 http://www.geocities.com/isa_koran/tamilpages/Rebuttals/AbuNoora/AbuNoora-Umar1.html

Thursday, January 29, 2009

புதுவிதமான யானைக் கதை



 

நண்பர் உமர் அவர்கள் இந்த கட்டுரை எழுதக்காரணமாக இருந்தது ஏகத்துவம் என்ற இணையத்தில் வந்த கட்டுரையாகும்.அதை அறிந்துகொள்ள http://www.tamilchristians.com/modules.php?name=Forums&file=viewtopic&p=27916#27916 
 
 
 
உமர் அவர்களில் பதில் கட்டுரை
 
என்னுடைய இந்த பதிவு, பல கட்டுரைகளை படித்து சேகரிக்கப்பட்ட விவரங்களாகும். இங்கு முன் வைக்கப்படும் தொடுப்புக்களுக்குச் சென்று மேலும் விவரங்களை தெரிந்துக் கொள்ளும் படி கேட்டுக் கொள்கிறேன்.

1. குர்‍ஆன் 105ம் அதிகாரம் "யானை".

 
Quote:
(நபியே!) யானை(ப் படை)க் காரர்களை உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா? (105:1) அவர்களுடைய சூழ்ச்சியை அவன் பாழாக்கி விடவில்லையா? (105:2) மேலும், அவர்கள் மீது பறவைகளைக் கூட்டங் கூட்டமாக அவன் அனுப்பினான். (105:3) சுடப்பட்ட சிறு கற்களை அவர்கள் மீது அவை எறிந்தன. (105:4) அதனால், அவர்களை மென்று தின்னப்பட்ட வைக்கோலைப் போல் அவன் ஆக்கி விட்டான். (105:5).


சிறு குறிப்பு: யெமன் என்ற நாட்டில் (எத்தியோப்பியா) ஒரு பெரிய சர்ச் அதாவது கிறிஸ்தவ சபையை ஒரு அரசன் அப்ரஹா கட்டினானாம், எல்லாரும் அவ்விடம் வந்து தொழுதுக் கொள்ள கட்டாயப்படுத்தினானாம், இன்னும் அனேக செயல்களைச் செய்தானாம். மக்காவிலிருந்து ஒரு மனிதன், அந்த சர்சை அசுசிப்படுத்தி, கெடுத்துவிட்டானாம், அதற்காக காபாவை அழிப்பதற்காக, யெமன் என்ற நாட்டிலிருந்து, அப்ரஹா என்பவர் பல யானைகளோடு, 60,000 ஆயிரம் இராணுவத்தோடு மக்காவிற்கு வந்தாராம், அப்போது காபாவை காப்பாற்ற அல்லாஹ், பறவைகளை அனுப்பி, சூடான கற்களை அவர்கள் மீது எரிந்து கொன்றாராம்.(http://www.al-islam.org/lifeprophet/4.htm)




2. கிறிஸ்தவர் கேட்டார் என்று முன்வைக்கப்பட்ட கேள்வி:

 
Quote:
கேள்வி: 1400 ஆண்டுகளுக்கு முன்பு அரேபியாவில் யானைகள் ஏதும் இல்லை என்று கிறிஸ்தவர்கள் கூறுகிறார்கள். எத்தியோபாவிலும் கூட யானைகள் ஏதும் இல்லை என்று கூறுகிறார்கள். இப்படியிருக்கும் நிலையில் அவர் கூற முயற்சிப்பது 'அலம் தர கைஃப பஅல ரப்புக பி அஸ்ஹாபில் ஃபீல்' என்ற குர்ஆன் வசனத்தை பொய் என்று கூற முயல்கிறார். ஏன் என்றால் அந்த நாட்களில் யானை இருந்தது என்று கூறுவதற்கு ஆதாரம் இல்லை என்று கூறுகிறார்.


இந்த கேள்வியை சிறிது மாற்றி கேட்டு இருக்கவேண்டும். யானைகள் அக்காலத்தில் உலகில் எங்கும் இல்லை என்பது சரியாகாது, இந்நாடுகளில் (எத்தியோப்பியாவில்) மனிதர்கள் யானைகளை பயன்படுத்தினார்களா? அல்லது குறைந்த பட்சம் போரிலாவது பயன்படுத்தினார்களா? என்று கேட்டு இருக்கவேண்டும்.


3. முஹம்மதுவின் காலத்தில் எத்தியோப்பியாவில் யானைகளை போரில் பயன்படுத்தினார்களா?


யானைகள் ஆப்ரிக்காவில் இருந்திருக்கும், ஆனால் மனிதன் தன் தேவைக்கு பயன்படுத்தினானா? என்பது தான் கேள்வி?

முஹம்மதுவின் காலத்தில் எத்தியோப்பியாவில்(ஆப்ரிக்காவில்) யானைகளை மனிதன் பயிற்சி கொடுத்து பயன்படுத்தவில்லை என்று எத்தியோப்பிய பல்கலைக் கழக பேராசியர்கள் கூறியுள்ளார்கள்.



 
Quote:
The Problem

There is only one problem. Elephants in Africa, including Ethiopia, were never domesticated and used by humans. By "Never", I mean throughout history. I came to know this fact through talking with three Ethiopian university professors. True, elephants were and still are domesticated and used for labor in Southeast Asia, but never in Africa.

Source: http://www.islam-watch.org/Kammuna/Quran-Sura-Alfeel-A-Myth.htm



4. குர்‍ஆன் சொல்வது போல, யானைகளோடு அப்ரஹா மன்னார் வந்ததாக நினைத்தாலும் கீழ் கண்ட பிரச்சனைகள் புதிதாக உருவாகின்றன.

4.1 யெமன் நாட்டிலிருந்து மெக்காவிற்கு இடையே உள்ள தூரம் : 500 மைல்கள்


குர்‍ஆன் சொல்வது போல, யானைகளோடு அப்ரஹா அரசர் வந்தார் என்ற விவரம் மற்றும் அல்லா பறவைகள் மூலமாக அவர்களை விரட்டியடித்தார் என்பதை ஏற்றுக்கொண்டால், பல பிரச்சனைகள் வருகின்றன. யெமன் நாட்டிலிருந்து மெக்காவிற்கு நேர்க்கோட்டில் தூரத்தை கணக்கெடுத்தால் 500 மைல்கள் இருக்கின்றன, அதாவது, 800 கிலோமீட்டர் தூரம் உள்ளது. காடு மலைகள், போன்றவற்றிலும் நடந்து நேரடியாக வந்தால் தான் இவ்வளவு தூரம் இருக்கும், ஆனால், தடைகளை சுற்றி வரவேண்டுமானால் இன்னும் தூரம் அதிகமாகும்.



Miles: 507.97
Kilometers: 817.47
Source: http://www.mapcrow.info/Distance_between_Sanaa_YM_and_Mecca_SA.html



இதனை கவனத்தில் கொண்டு அடுத்த விவரத்தை படிக்கவும்.

4.2 எத்தனை யானைகளோடு, இராணுவத்தோடு மெக்காவிற்கு வந்தார்?


அப்ரஹா மன்னர் 9 அல்லது 13 யானைகளோடும், 60,000
இராணுவத்தோடும் மக்காவிற்கு வந்தாராம்.


 
Quote:
So, in 570 or 571 A. D., he took 60,000 troops and 13 elephants (according to another tradition, 9 elephants) and set off for Makkah.

Source : Syed Maududi's Commentary for Surah #105

http://www.islamicity.com/Mosque/QURAN/maududi/mau105.html


இந்த விவரத்தையும், கவனத்தில் கொண்டு அடுத்த விவரத்தை படிக்கவும்.


4.3 யானைகளின் தேவைகளாகிய உணவு, தண்ணீர், பயணிக்கும் தன்மைகள் பற்றிய குறிப்பு:


இப்போது யானைகள் பற்றிய விவரங்களை கவனிப்போம்.


ஒரு ஆரோக்கியமான யானை தினமும்:


189 லிட்டர் (50 gallons) தண்ணீர் குடிக்கும். (http://www.jstor.org/pss/294124 )


• உணவு கிடைக்காத பட்சத்தில், உணவிற்காக ஒரு நாளுக்கு 50 மைல்கள் ஒரு யானை பயணிக்குமாம். (http://www.sandiegozoo.org/wordpress/default/how-far-do-elephants-walk-in-one-day/)


• 300 லிருந்து 350 Pound(159 Kilograms) அளவுள்ள உணவை ஒரு யானை ஒரு நாளுக்கு உண்ணுமாம்.( http://www.jstor.org/pss/294124)


• யானைகள் ஒரு நாளில் 16 மணி நேரம் சாப்பிடுவதற்கு செலவிடுமாம்.( http://en.wikipedia.org/wiki/Elephant)

யானைகளின் உடலில் வியர்வை சுரப்பிகள் இருப்பதில்லை, எனவே, தங்கள் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க, அவைகள் சேறு மற்றும் தண்ணீர் உள்ள இடங்களில் அதிக நேரம் செலவழித்து, சேற்றை வாறி தங்கள் உடல்களில் போட்டுக் கொள்கின்றன.





4.4 யெமனிலிருந்து மெக்காவிற்கு வர ஒரு யானையின் தேவை:


யெமனிலிருந்து மெக்காவிற்கு நேர்க்கோட்டிலேயே பயணம் செய்ததாக நாம் கற்பனை செய்துக் கொண்டாலும், 500 மைல்கள் கடக்கவேண்டும், அப்படியானால்:


ஒரு நாளுக்கு 50 மைல்கள் ஒரு யானை பயணித்தால், 500 மைல்களை
கடக்க 10 நாட்கள் ஆகும். அதாவது :


தண்ணீர்: 189* 10 = 1890 லிட்டர் தேவை

உணவு: 159 * 10 = 1590 பவுண்ட்கள் தேவை


[16 மணி நேரம் உணவிற்காக மட்டும் யானை செல்வழித்தால், இவ்வளவு
தூரம் (50 Miles) செல்லமுடியாது, அதே நேரத்தில் தன்னை குளிர்ச்சியாக்கிக் கொள்ள பாலைவனத்தில் யானைக்கு வசதி இருக்காது. இதனால், தொடர்ந்து போகமுடியாமல், 500 மைல்கள் கடக்க 10 நாட்கள் அல்ல அதற்கும் அதிகமாகவே தேவைப்படும். அதுவும் விமானம் போல, நேர்க்கோட்டில் பயணித்தால் தான், மேடு பள்ளங்களை சுற்றிச் செல்லவேண்டுமானால், பாலைவன மணலில் செல்லவேண்டுமானால், இன்னும் கால தாமதம் ஆகும். அந்த அரசனோடு வந்த இராணுவனும் யானைகளைப் போல வேகமாக ஒரு நாளுக்கு 50 மைல்கள் நடக்கமுடியாது]


ஒரு யானைக்கே இவ்வளவு தண்ணீர், உணவுகள்(இலைகள் etc..) தேவைப்படுமானால்,

9 or 13 யானைகளுக்கு எவ்வளவு தேவைப்படும்? ஒரு பேச்சுக்கு 10 யானைகள் என்றே வைத்துக் கொண்டாலும்,

தண்ணீர் : 1890 * 10 = 18, 900 லிட்டர் தேவை

உணவு: 1590 * 10 = 15, 900 பவுண்ட்கள் தேவை



இவ்வளவு உணவுப்பொருட்களை வைத்துக் கொண்டு போருக்கு வரமுடியுமா? இது சாத்தியமா? வாசகர்கள் சிந்திக்கட்டும்.





4.5 60,000 இராணுவத்தோடு வந்தாராம்:

யானைகள் மட்டுமல்ல, 60, 000 (அறுபது ஆயிரம்) இராணுவத்தோடு வந்தாராம்? இத்தனை பேருக்கு உணவு எப்படி பாலை வனத்தில் கிடைக்கும், இவர்களுக்கு தண்ணீர் எப்படி கிடைக்கும்? மட்டுமல்ல், பாலைவன வெயிலில் யானைகளானாலும் சரி, மனிதர்களானாலும் சரி, தினமும் அதே வேகத்தில் நடக்கமுடியாது?


இவைகள் தான் குர்‍ஆன் 105ம் அதிகாரத்தில் சொல்லப்பட்ட விவரங்களின் சாத்தியக் கூறுகள்.



4.6 யானைகளைக் கொண்டு நடத்தப்பட்ட போர்களின் பட்டியல்:

• ….
• ….
• 190 BC, Battle of Magnesia
• 167 BC-160 BC, Revolt of the Maccabees
• 164 BC, Battle of Beth-zur
• 153 BC, Roman siege of Numantia (Spain)
• 149 BC-146 BC, Siege of Carthage
• 108 BC, Battle of Muthul
• 46 BC, Battle of Thapsus
• AD 451, Battle of Vartanantz
• 636, Battle of al-Qādisiyyah
• 738, Battle of Rajasthan
• 1214, capture of Cremona by Frederick II, Holy Roman Emperor
• 1659, Battle of Khajwa
• 1526, First Battle of Panipat
• 1556, Second Battle of Panipat
• 1761, Third Battle of Panipat


Source : http://en.wikipedia.org/wiki/List_of_battles_involving_war_elephants




இந்த மேலே உள்ள பட்டியலில், கி.பி. 570 நடந்த யானைப்போர் தென்படுகிறதா பாருங்கள். அடுத்த முறை, கண்டிப்பாக குர்‍ஆன் 105ம் அதிகாரத்தின் யானைப்போரும் கட்டாயமாக சேர்த்துவிடுவார்கள்.

எத்தியோப்பியா அரசர் இருந்தது உண்மைத் தான், ஆனால், யானைகளோடு வந்தாரா? என்பது தான் இப்போது சந்தேகம். மேலே உள்ள அனேக பிரச்சனைகள் விடையளிக்கப்பட்டால் தான் சந்தேகங்கள் தீரும்.

இங்கு ஒரு விவரம் குறிப்பிடவேண்டும், அல்லா 360 விக்கிரகங்கள் உள்ள காபாவை, குரைஷி மக்களுக்காக ஏன் காப்பற்றவேண்டும்? அதுவும் வேதம் அளிக்கபப்ட்டவர்களை (கிறிஸ்தவர்களை) அழித்து, விக்கிரகங்களை வணங்கும் குரைஷிகளை காப்பாற்ற வேண்டிய‌ அவசியமென்ன? அப்ரஹா மன்னன் மக்காவை நெருங்கும் போது, காபாவை காப்பற்றும் படி, அல்லாவிடம் வேண்டிக் கொண்டார்களாம் மக்கா மனிதர்கள். மக்காவில் இருந்த அந்த 360 கற்களில் ஒரு கல் கண்டிப்பாக அல்லாவாக இருந்திருப்பார் இல்லையா?


அந்த ஆண்டில் தான் முஹம்மது(A.D 570) பிறந்தாராம், ஒரு சிலர் கூறுகிறார்கள், அந்த அரசன் போர் தொடுத்த ஆண்டு கி.பி. 552ம் ஆண்டு ஆகும். 552ம் ஆண்டு முஹம்மது பிறந்திருந்தால், தனக்கு 70 வயதான போது தான் அவர் ஆயிஷாவை(6 வயது சிறுமியை திருமணம்) செய்திருக்கவேண்டும், 50 வயதாகும் போதல்ல, இது இன்னும் பெரிய சிக்கலை உண்டாக்குகிறாது (Prophet of Doom, Page 112, and 113)

இப்படி பல கேள்விகள் எழுகின்றன.


இது மட்டுமல்ல, இஸ்லாமியர்கள் குர்‍ஆனில் விஞ்ஞானத்தை கண்டுபிடிக்க மிகவும் அதிகமாக உழைக்கிறார்கள், அதனால், தான் இப்படியான எழுதுகிறார் ஒரு இஸ்லாமிய அறிஞர்:


 
Quote:

திருக்குர்ஆனின் இந்த 105வது அத்தியாயத்தில் அறிவியல் உண்மையும் உள்ளடங்கி இருக்கிறது என்பது தான் அந்த சான்று. அதாவது, அதிகமாக வெப்பம் ஏற்றப்பட்ட சிறிய ஆயுதங்கள் மூலம் மிகப் பெரிய சேதத்தை ஏற்படுத்த முடியும் என்பதற்கு இது முன்னோடியாக அமைந்துள்ளது. ஏனெனில் இந்நிகழ்ச்சியை வெறும் அற்புதமாக மட்டும் இறைவன் குறிப்பிடவில்லை. நீர் சிந்திக்கவில்லையா? என்றும் இந்த அத்தியாயத்தின் துவக்கத்தில் குறிப்பிடுவதால் மனிதன் சிந்தித்துப் பார்த்து இது போன்ற ஆயுதங்களைக் கண்டு பிடிக்க முடியும் என்ற கருத்தும் இதனுள் அடங்கியிருக்கிறது. (திருக்குர்ஆன் 105:5)





இதை எழுதியவர், நம் அருமை இஸ்லாமிய அறிஞர், பிஜே அவர்கள் தான், அவரது குர்‍ஆன் மொழிபெயர்ப்பில் இப்படி எழுதியுள்ளார்.

இந்த யானை விவரம் பற்றி இப்போதைக்கு இவ்வளவு விவரங்கள் தான்.

ஆக, யானைகளை எத்தியோப்பியாவில் போரில் அக்காலத்தில் பயன்படுத்தினார்களா என்பதை முதலில் விளக்கப்படவேண்டும், இரண்டாவது, அப்படி பயன்படுத்தினாலும், அவ்வளவு தூரம், அத்தனை பேர்களோடு பாலைவனத்தில் வருவது என்பது முடியாத காரியம். அப்படி வந்தார்கள் என்றுச் சொன்னால், எப்படி வந்தார்கள், மற்றும் மேலே நாம் கண்ட கேள்விகளுக்கு பதில்கள் தரப்படவேண்டும்.

References:
http://www.answering-islam.org/Responses/Saifullah/rahman_av.htm#elephants
http://www.elephant.se/elephant_foot_and_nail_problems.php
http://www.jstor.org/pss/294124
http://www.sandiegozoo.org/wordpress/default/how-far-do-elephants-walk-in-one-day/
http://en.wikipedia.org/wiki/Elephant
http://www.onlinepj.com/vilakkam/vilakkam8.htm
http://www.mapcrow.info/Distance_between_Sanaa_YM_and_Mecca_SA.html
http://en.wikipedia.org/wiki/List_of_battles_involving_war_elephants

இத்தொடுப்புக்களில் சென்று படிக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்.
 

Wednesday, October 29, 2008

இயேசுவும்,ஜிஹாதும்

 

இன்று வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 14, 2001). செப்டம்பர் 11 ஆம் தேதி நிகழ்வின் தடயங்கள் சில இஸ்லாமிய அடிப்படைவாதக் கும்பலை நோக்கிக் காட்டுகின்ற‌ன‌… 

நம் இஸ்லாமிய நண்பர்களுக்கு ஓர் பகிரங்க மடல்

Open Letter to Our Muslim Friends:

செப்டம்பர் பதினோறாம் தேதியின் அக்கிரம நிகழ்வுகள் குறித்து உங்களில் பெரும்பான்மையானவர்கள் இல்லாவிடினும் பலர் பயமும் அதிர்ச்சியும் அடைந்திருக்கின்றீர்கள் என நான் அறிவேன். சரித்திரத்தில், 15 ஆம் நூற்றாண்டில் ஸ்பெயினில் இயேசுவின் பெயரால் நடந்த மத வெறி நிகழ்வுகளுக்காக‌வும் அது போன்ற ஏனைய பைத்தியக்காரத் தனங்களுக்காகவும் நான் கிறிஸ்தவன் என்ற முறையில் சங்கடப்படுவதைப் போன்று, நீங்கள் முஸ்லீம்கள் என்ற முறையில் இஸ்லாமிய தீவிரவாதிகளின் இத்தகைய நடவடிக்கைக்காக மிகவும் சங்கடத்திற்கு உள்ளாகி இருக்கிறீர்கள் என‌ நான் எண்ணுகிறேன். 


உங்களில் ப‌ல‌ர் அமைதி விரும்பும் ம‌க்க‌ளாக இருக்கிறீர்கள். அமைதிக்காக‌வும் ந‌ம்பிக்கைக்காக‌வும் இதற்கிடையே உங்கள் மத நம்பிக்கையின் வெற்றிக்காகவுமான ம‌ன‌ப்போராட்ட‌த்தினால் அழுத்த‌த்திற்குள்ளாகி எக்கார‌ண‌த்தை முன்னிட்டும் நீங்களும் மற்ற‌வர்களும் ஒரு உட‌ன்பாடுக்கு வர இயலாத‌ நிலையில் இருக்கின்றீர்க‌ள். ஒரு வ‌ச‌தியான‌ நிலையில் உள்ள‌ ஒரு கிறிஸ்த‌வ‌ன் அல்ல‌து ஒரு பெய‌ர் கிறிஸ்த‌வ‌ன் இயேசுவின்பால் மேலோட்டமான பற்றுதலுடன் ப‌ல‌வீன‌மாக இருக்கின்றானோ அதில் உங்க‌ளில் ப‌ல‌ர் உங்க‌ளின் ந‌பிக்காக‌வும் புனித‌ நூலுக்காக‌வும் மிகுந்த‌ வைராக்கியமாகவும் பலசாலியாகவும் உள்ளீர்க‌ள்.

இந்த வாரம் நடந்த இஸ்லாமிய வன்முறைச் சம்பவம் போன்ற‌ நிகழ்வுகளுக்காக‌ நீங்கள் அடிக்கடி சங்கடப்படுவது போன்றே, கிறிஸ்தவர்களாகிய நாங்கள், எங்கள் தரப்பில் வன்முறை நடந்தபோது நாங்களும் சங்கடப்பட்டோம்.

ஆயினும் இவைகளில் அடிப்படையான ஒரு வித்தியாசத்தை நீங்கள் காணலாம். இந்த வித்தியாசம் நமது நம்பிக்கையிலும் அதனை ஸ்தாபித்தவர்களின் இருதயங்களிளும் உள்ள வித்தியாசத்தையே வெளிப்படுத்துகிறது.

இன்றைய கிறிஸ்தவர்கள் சரித்திரத்தின் வன்முறை நிகழ்வுகளுக்கும், அக்கிரமங்களுக்கும், கிறிஸ்தவ சபைகளின் அல்லது கிறிஸ்தவ சபைகளின் ஆதரவுடன் பெற்ற முறையற்ற வெற்றிகளுக்காகவும் மிகவும் சங்கடப்படுகிறார்கள். ஏனெனில் இவை இயேசுவின் முன்னுதாரணமான வாழ்க்கைக்கும் அவரது போதனைகளுக்கும் எதிரானவை என்பதை அவர்கள் அறிந்துள்ளனர். எங்கள் சங்கடம் என்னவென்றால் நாங்கள் "வெறும் மனிதர்க"ளாகவே நடந்து, இதயமற்றவர்கள் போல் தரம் தாழ்ந்து, ஜீவனுள்ள தேவனுக்குக் கீழ்ப்படியத் தவறினோம் என்பதே.

பைபிள் காட்டும் ந‌ம‌து இயேசு வ‌ன்முறைக்கு எச்ச‌ந்தர்ப்ப‌த்திலும் ஒப்புதல் அ‌ளிக்க‌வில்லை. ஒரு கோப‌முற்ற முதல் நூற்றாண்டு அதிகார வர்க்கத்தின் சிறு மதவெறிக்கும்ப‌லிடம் எதிர்ப‌ட்ட‌போது கூட‌ அவ‌ர‌து அணுகுமுறை ப‌ணிவாக‌வே இருந்த‌து. பொய்யான‌ குற்ற‌ச்சாட்டுக‌ள் அவ‌ருக்கு எதிராக‌ சும‌த்த‌ப்ப‌ட்ட‌போதும், "அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியைப் போல", அவர் வாயைத் திற‌க்க‌வில்லை. கொடும் ம‌ர‌ணத்தைச் சந்தித்த‌போதும் கூட‌ அவ‌ர‌து முடிவைத் தம் ப‌ர‌லோகத் தந்தையிடமே ஒப்புக்கொடுத்தார்.

மரணத்தை அவர் கொல்லுதலினால் அல்ல‌, மாறாக மரணத்தை ஏற்றுக் கொண்டு ஜெயித்தார் (He conquered death—not by killing it—but by dying Himself.) தீமையை நன்மையினால் மேற்கொண்டார். வெறுப்புக்கு எதிரான அவரது புனிதப் போரை(Jihad) அன்பினைக் கொண்டு நடத்தினார். அதிகார வெறி மற்றும் துஷ்பிரயோகம் ஆகியவற்றிற்கு எதிரான‌ அவரது ஜிஹாத், அவர் நம்மிடையே ஒரு பாடுபடும் ஊழியக்காரனாக வாழ்ந்தே காட்டப்பட்டது. பரலோகத்தினின்று கொண்டு வந்த அழகினால் நமது அவலட்சனங்களைப் போக்கினார். அவரது உடல் சிலுவையில் ஆணிகளால் அறையப்பட்டு சதை கிழிக்கப்படும் போதும் கூட, "பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே", எனத் தம்மை துன்புறுத்தியவர்களுக்காக ஜெபித்தார்.

"அவர் இப்படிப் பேசுகையில், பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ் வந்தான்; அவனோடே கூடப் பிரதான ஆசாரியரும் ஜனத்தின் மூப்பரும் அனுப்பின திரளான ஜனங்கள் பட்டயங்களையும், தடிகளையும் பிடித்துக்கொண்டு வந்தார்கள். அவரைக் காட்டிக்கொடுக்கிறவன்: நான் எவனை முத்தஞ்செய்வேனோ அவன்தான், அவனைப் பிடித்துக்கொள்ளுங்கள் என்று அவர்களுக்கு அடையாளம் சொல்லியிருந்தான். உடனே, அவன் இயேசுவினிடத்தில் வந்து: ரபீ, வாழ்க என்று சொல்லி, அவரை முத்தஞ்செய்தான். இயேசு அவனை நோக்கி: சிநேகிதனே என்னத்திற்காக வந்திருக்கிறாய் என்றார். அப்பொழுது அவர்கள் கிட்ட வந்து, இயேசுவின் மேல் கைபோட்டு, அவரைப் பிடித்தார்கள். அப்பொழுது இயேசுவோடிருந்தவர்களில் ஒருவன் கைநீட்டித் தன் பட்டயத்தை உருவி, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனைக் காதற வெட்டினான். அப்பொழுது, இயேசு அவனை நோக்கி: உன் பட்டயத்தை திரும்ப அதின் உறையிலே போடு; பட்டயத்தை எடுக்கிற யாவரும் பட்டயத்தால் மடிந்து போவார்கள். நான் இப்பொழுது என் பிதாவை வேண்டிக்கொண்டால், அவர் பன்னிரண்டு லேகியோனுக்கு அதிகமான தூதரை என்னிடத்தில் அனுப்பமாட்டாரென்று நினைக்கிறாயா? அப்படிச் செய்வேனானால், இவ்விதமாய்ச் சம்பவிக்கவேண்டும் என்கிற வேதவாக்கியங்கள் எப்படி நிறைவேறும் என்றார்."

முன்பு வாழ்ந்த அனேகம் மதத் தலைவர்கள் மற்றும் ஸ்தாபகர்களைப் போலல்லாது அவரைக் காட்டிக் கொடுத்தவனைக் கூட அவர் "சினேகிதனே" என அழைக்கிறார். மற்றும் தன்னை பின்பற்றினவர்களை நோக்கி தம் வாள்களைக் கீழே போட்டு தேவ சித்தத்திற்கு ஒப்புக் கொடுக்கும்படிக் கட்டளையிடுகிறார்.

தமது காயங்களை அவர் மறைத்துக் கொள்ளாமல் அவற்றைத் தழுவிக் கொண்டார். மரித்தோரினின்று தேவன் அவரை எழுப்பிய போதும் உயிர்த்தெழுந்த‌ அழியாத‌ அவ‌ர‌து புதிய உடம்பில் அவ‌ர் தெரிந்து ஏற்றுக் கொண்ட பலவீனத்திற்கும் வேதனைக்கும் அடையாளமான காயங்களையும் கைகளில் ஆணியின் சுவடுகளையும் சுமந்தார்


அவரின் ஒப்பற்ற அன்பு வாழ்க்கையில் அவரைப் பின்பற்றினவர்களிடம், அவரவர் தங்களை வெறுத்து தங்கள் சிலுவையைச் சுமந்துச் செல்லப் பணித்தார், மற்றவர்களின் சிலுவையை அல்ல. கவனிக்கவும்; அடுத்தவர்களை அல்ல, அவரவர் தம்மை வெறுத்து தமது சிலுவையை சுமக்க வேண்டுமென்றார். அடுத்தவர்களின் நலனுக்காக தான் எப்படி உயிரைக் கொடுத்தாரோ அது போல வாழ வேண்டுமென்றார்.

கிறிஸ்தவர்களுக்கு, பகைமை மற்றும் அத்துமீறிய வன்முறை என்பன மிகக் கொடுமையான பாவங்களாகும். ஏனெனில் அவை கிறிஸ்துவின் "எளிய, அமைதலுள்ள பண்புடன்" வாழாத‌ இதயங்களினின்று மட்டுமே புறப்படுகின்றன. இத்தகைய இதயங்கள் சுயந‌லம், வெறி, சுரண்டுதல் மற்றும் மற்றவர் மீது கடினம் காட்டுதல் போன்ற குணங்கள் உடையவை. இயேசு அவருடைய முழு வாழ்க்கையையுமே அடுத்தவர்களுக்காகவே கொடுத்தார்; ஆனால் வன்முறை அடுத்தவரிடமிருந்து எடுத்துக் கொள்வதில் தான் ஆரம்பிக்கிறது.

"உங்களுக்குள்ளே யுத்தங்களும் சண்டைகளும் எதினாலே வருகிறது; உங்கள் அவயவங்களில் போர் செய்கிற இச்சைகளினாலல்லவா? நீங்கள் இச்சித்தும் உங்களுக்குக் கிடைக்க வில்லை; நீங்கள் கொ லைசெய்தும், பொறாமையுள்ளவர்களாயிருந்தும், அடையக் கூடாமற் போகிறீர்கள்; நீங்கள் சண்டையும் யுத்தமும் பண்ணியும், நீங்கள் விண்ணப்பம் பண்ணாமலிருக்கிறதினாலே, உங்களுக்குச் சித்திக்கிறதில்லை. நீங்கள் விண்ணப்பம் பண்ணியும், உங்கள் இச்சைகளை நிறைவேற்றும்படி செலவழிக்க வேண்டுமென்று தகாதவிதமாய் விண்ணப்பம் பண்ணுகிறபடியால், பெற்றுக் கொள்ளாமலிருக்கிறீர்கள்." (இஞ்ஜில், யாக்கோபு அதிகாரம் 4)

உங்களில் சிலராவது இந்நேரம் இயேசுவின் இப்படிப்பட்ட எடுத்துக்காட்டான வாழ்க்கைக்கும் மற்றும் அவரை பின் பற்றுகிற சிலரின் வாழ்க்கைக்கும் உள்ள‌ அடிப்படை வித்தியாசத்தைப் புரிந்துகொண்டு இருப்பீர்கள். நாங்கள் எங்களது தவறுகளால் அவர் போன்று வாழாமல் சரித்திரத்தில் அவரைப்போன்று அன்பு காட்டாமல் அவரினின்று மாறுபட்டு இருக்கிறோம். நாம் நம் வாழ்க்கையினால் அவரை தவறாக காட்டுகிறோம். ஆனால் அவரது இத‌யத்தின் உண்மையான காட்சி புதிய ஏற்பாட்டில் உள்ள நிகழ்வுகளில் காணலாம். அதாவது அவரின் அன்பான வார்த்தைகளில், இரக்கமுள்ள செய்கைகளில், மற்றும் உலகின் பாவங்களுக்காக மரித்தலில் காணப்படுகிறது. பிதாவின் முன்பாக அவரது சிலுவை மரணமாகிய ஜீவாதார பலி, அதாவது நமது பாவங்களைத் தம்மீது சுமரப்பண்ணி நமக்காய் மரித்தது எல்லா மனிதருக்காகவும் தான். அவர் மரித்தது எனக்காகவும், உங்களுக்காகவும், பேதுரு, பவுல், முகமது, ஆபிரகாம், சாராள், ஆகார் மற்றும் இன்னும் பிறக்கப் போகிறவர்ககாகவும் தான்.

இப்பொழுது நீங்கள் இயேசுவின் செய்திக்கும் உங்கள் நம்பிக்கையின் ஒரு சில அம்சங்களுக்கும் உள்ள குறிப்பிடத்தக்க வித்தியாசத்தை புரிந்து கொண்டிருப்பீர்கள். உங்கள் நம்பிக்கையில் அனேகம் சீரிய உண்மைகள் இருப்பினும், அதில் வருந்தத்தக்க‌ ஒரு உணர்வோட்டம் இத்தகைய அன்பின், பணிவின் மற்றும் அமைதியின் வழிக்கெதிராக உள்ளது. இத்தகைய உணர்வோட்டம் தான் கொடிய மனிதர் கையில் அகப்பட்டு உங்களைப் போன்ற மக்களின் இதயத்தை உறுத்தும் ஒரு சோக சம்பவமாக, இவ்வாரத்தில் நடந்ததைப் போன்று உருமாறுகிறது.

நபிகளின் சில போதனைகளினின்று வேறுபட்டு எங்களின் சினம் கொண்ட மனங்களுக்கு எதிராக கீழ்கண்ட வசனம் போதிக்கிறது:

"எனக்குச் செவிகொடுக்கிற உங்களுக்கு நான் சொல்லுகிறேன்: உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள். உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காக ஜெபம் பண்ணுங்கள்." லூக்கா 6:27,28

இயேசுவிடம் அவரது சொல்லிலும் செயலிலும் ஒரு முழுமையான ஒருங்கிணைப்பு மட்டுமே இருந்தது. அவர் அன்பையே போதித்தார், ஒருபோதும் பகைவர்களை வன்முறை உணர்வோடு சாடியதில்லை. அனைத்து நம்பிக்கைகளிலும் உள்ள மனிதர்களாகிய நாம் அவர் வாழ்ந்து காட்டியது போல் வாழத் தவறிவிட்டோம்.

உங்கள் மனதில் உள்ள இத்தகைய சஞ்ச‌லத்தை எதிர்கொண்டு சரித்திரத்தில் இயேசுவைப் பின் பற்றுபவர்களை அல்லாமல் இயேசுவையே நோக்கி ஒரு புதிய கண்ணோட்டத்துடன் பாருங்கள் என உங்களை நான் ஊக்குவிக்கிறேன். வாழ்வுக்கும் விடுதலைக்குமான அவரது அறைகூவல் ஏன் வன்முறையும் வெற்றியும் பொதியப்பெற்ற‌ வார்த்தைகளால் அல்லாமல் பின் வருவன போன்ற வார்த்தைகளால் அமையப் பெற்றது என நீங்களே அறிந்து கொள்ளுங்கள்

"வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாயிருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக் கொண்டு, என்னிடத்தில் கற்றுக் கொள்ளுங்கள். அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். என் நுகம் மெதுவாயும் என் சுமை இலகுவாயும் இருக்கிறது" (மத்தேயு 11:28 – 30).

 

இப்படிக்கு

க்ளன் எம் மில்லர்
(Glenn M. Miller, www.Christian-thinktank.com)

[The author of this article, Glenn M. Miller, hereby grants permission to copy this article freely, provided that the material is not modified in any form (other than translation into another language); that the material is distributed without cost, and that the ThinkTank web site identification remains with the material. We further ask that the source is acknowledged as: Source: www.answering-islam.org/glenn.html]

ஆங்கில மூலம்: http://www.answering-islam.org/glenn.html

Sunday, October 26, 2008

நான், மாறியவன் , என்னுடைய மாற்றம் ஒரு மதமாற்றம் இல்லை, ஒரு இதய மாற்றம்

நான், மாறியவன் , என்னுடைய மாற்றம் ஒரு மதமாற்றம் இல்லை, ஒரு இதய மாற்றம்

ஆனந்த் மகாதேவனின்
        கருத்து

                           நான், மாறியவன்

             என்னுடைய மாற்றம் ஒரு மதமாற்றம் இல்லை, ஒரு இதய மாற்றம்

Illustration by Sorit
நான் ஒரு பிராமணணாக பிறந்தேன். நான் ஒரு புரோகிதரின் பேரனாக இருந்தேன் அவரை மிகவும் நேசித்தேன். நான் நன்றாக படித்தவன். என்னுடைய தற்போதைய பணி நான் எப்படி அறிவுள்ளவன் என்பதை குறிக்கிறது. நான் போதுமான வசதியுடையவன்  என்னுடைய வருமானம் என்னை சமுதாயத்தின் உயர் நடுத்தர மக்கள் வகையில் வைத்துள்ளது. அது என்னை உயர்ந்த ஜாதியான பணக்காரனாக மாற்றும் என்று அநுமானிக்கிறேன். வேறு விதத்தில் சொல்ல வேண்டுமென்றால் நான் ஏதோ தாழ்த்தப்பட்ட பழங்குடியோ அல்லது வறுமையில் வாடும் பரிதாபமான ஏழையோ இல்லை. இருந்த போதிலும் நான் இயேசு கிறிஸ்துவை பின்பற்றுவதை தெரிந்து கொண்டேன்.

 உலகம் என்னை நான் கிறிஸ்தவத்திற்கு மதம்மாறியவன் என்று சொல்லும். ஆனால் எனக்கு அதில் எந்த பிரச்சினையும் கிடையாது. இயேசு கிறிஸ்து மூலமாக கடவுள் மீதான என்னுடைய நம்பிக்கையை ஒரு மதம் என்பதை விட ஒரு உறவாகத்தான் பார்க்கிறேன். என்னை யாரும் பணம் கொடுத்தோ அல்லது கட்டாயமாகவோ அல்லது ஏமாற்றியோ மதம் மாற்றவில்லை என்று பதிவுகளுக்காக நான் தைரியமாக கூறமுடியும்.

  நான் ஒரு இந்தியன் என்று சொல்லும் தேசிய அடையாளத்தினிமித்தம் நான் மிகவும் பெருமைப் படுகிறேன். மேலும் என்னுடைய கலாச்சாரத்தின் படி நான் ஒரு இந்துவாக அடையாளம் காட்டப்டுவதில் மிகுந்த சமாதானம் உடையவனாக இருக்கிறேன்.  என்னுடைய பெற்றோர்கள் எனக்கு வைத்த பெயரையுடையவனாகத் தான் இருக்கிறேன். என்னுடைய நம்பிக்கையில் பங்கு வைக்கும் என் மனைவியும் தன்னுடைய இந்து பெயரோடு தான் இருக்கிறார்கள். எனக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள் அவர்கள் இருவருக்கும் நல்ல அருமையான் இந்து பெயர்களைத் தான் வைத்துள்ளோம். ஒரு வேளை இந்த பகுதியை வாசிக்கும் என்னுடைய சக பணியாளர்கள் மற்றும் மிகவும் பழக்கமானவர்களுக்கு  இது கொஞ்சம் ஆச்சரியமாக இருக்கலாம். அவர்களுக்கு என்னுடைய நம்பிக்கைப் பற்றி அறிகுறிகள் கிடையாது பொதுவாக நான் யாரிடம் அதை அறிவிக்கப் போகிறதில்லை. ஆனால் ஒரு வேளை யாராவது என்னிடம் என் வாழ்க்கையில் எப்போதும் நிரம்பியிருக்கும் மகிழ்ச்சிக்கும் நம்பிக்கைக்கும் என்ன காரணம் என்று கேட்டால் நான் மிகவும் சந்தோஷத்தோடு அவர்களிடம் அதை பகிhந்து கொள்ளுவேன்.
 
 நான் இந்த பகுதியை எழுதுவது ஒரு முக்கியமான குறிப்பை வலியுறுத்துவதற்குத்தான் - என்னுடைய மாற்றம் என்பது மதத்தை மாற்றியது அல்ல ஆனால் ஒரு இதய மாற்றம் என்பதாகும். இதை தெளிவாக விளக்குவதற்கு நான் மற்ற பிரமாண சிறுவர்களைப் போல் சென்னையில் சிறுவனாக இருந்த நாட்களுக்கு செல்ல வேண்டும்.  ஒரு சிறந்த புரோகிதராக இருந்த என்னுடைய தாத்தா என்னை எப்பொழுதும் கவரக் கூடியவராக இருந்தார். நான் அவர் மீது முழு அன்பு கொண்டாடினேன் நடக்கப் பழகுபவனாக எப்பொழுதும் அவருடன் ஒட்டியிருந்தேன். அவரும் என்னை வெகுவாக நேசித்தார். என்னுடைய எந்த விருப்பத்தையும் அவர் நிறைவேற்றாமலிருந்ததில்லை. ஆனால் என்னுடைய ஆரம்ப காலங்களில் அவர் தீவிதமாக ஈடுபட்ட வந்த மதத்தோடுகூட என்னை தொடர்புபடுத்திக் கொள்ள முடியவில்லை. பிறகு, என்னுடைய பள்ளி நாட்களில் நான் அவரோடு கூட என்னுடைய கோடை விடுமுறை செலவிட்டேன். அவருடன் காவேரியில் இறங்கி ஆசாரங்களை அனுசரித்து வந்தது போன்ற பல நினைவுகள் இன்றும் என் மனதில் மறையாமல் இருக்கிறது. நான் அநேக ஸ்லோகங்களை கற்றேன் இன்றும் அவற்றில் சில எனக்கு ஞாபகம் இருக்கிறது. ஆனால் அவற்றில் எதையும் நான் புரிந்து கொள்ளவில்லை எதுவும் என்னை கடவோளோடு இணைக்கவில்லை.

 நான் 19 வயதாக இருந்தபோது, நான் சேர்ந்து கிரிக்கெட் விளையாடும் என்னுடைய கிறிஸ்தவ நண்பன் அவனது வீட்டில் நடக்கும் ஜெபத்திற்கு அழைத்தான். ஒரு வேளை அவன் வீட்டின் ஏதாவது பார்ட்டிக்கு அல்லது  நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தாலும் நான் போயிருப்பேன். அவனது வீட்டில் அவனும் அவன் சகோதரியும் எனக்காக ஜெபித்தார்கள். அது ஒரு எளிய ஆனால் மகிழ்ச்சியான உரையாடல் கடவுளுடன்,  ஐந்து நிமிடம் தான் நீடித்தது. அதன் முழுவரிகளும் எனக்கு நினைவிலில்லை ஆனால் அவர்கள் என்னுடைய வாழ்க்கை, எதிர்காலம், தொழில் மற்றும் குடும்பத்திற்காக ஜெபித்தார்கள். அது ஒரு சாதாரண நிகழ்வுதான்- எந்த அற்புதமோ தேவ தூதர்களோ வரவில்லை. அவர்கள் செய்ததெல்லாம் தங்களுடைய ஊக்கமான கண்ணீரின் ஜெபத்தை சர்வ வல்லமையுள்ள இறைவனிடமும் அவருடைய குமாரன் இயேசு கிறிஸ்துவிடம் ஏறெடுத்தார்கள். அவர்கள் ஆமென் என்று சொன்னபோது, இயேசுவை பின்பற்ற வேண்டும் என்ற ஆவல் என் உள்ளத்தில் ஏற்பட்டதை உணர்ந்தேன்.

 இது கடவுளடனான ஒரு விசுவாச சந்திப்பு இதை புரிந்து கொள்வதற்கோ, காரணப்படுத்துவதற்கோ அல்லது விவரிப்பதற்கோ நான் முயற்சி செய்வதில்லை. நான் இதை அப்படியே ஏற்றுக்கொண்டேன் இது என்னுடைய விசுவாசம் நான் நம்புவதற்காக தெரிந்து கொண்டேன். அந்த மாலை வேளையில் நான் என்னுடைய மதத்தை மாற்றவில்லை, அதற்கு பின்னும் இல்லை. இந்து என்னுடைய அடையாளம் ஆகும் மதம் இல்லை, இன்று வரை அப்படித்தான்.

 அந்த மாலை வேளையில் நான் பெற்றுக் கொண்ட கிறிஸ்தவம் ஒரு மதம் அல்ல. மாறாக அது இயேசுவுடனான ஒரு தீவிர உறவாகும். கடந்த 15 வருடங்களாக நான் இந்த இயேசுவை இன்னும் நெருக்கமாக அறிந்து கொண்டேன். அவர் தான் பாவமற்ற பரிசுத்த தேவ குமாரன் என்பதை அறிவேன். என்னுடைய தொழில், வாழ்க்கை, கனவுகள், வெற்றி தோல்விகள் இன்னும் என் உறவுகளைப் பற்றி ஒவ்வொரு நாளும் நான் பேசக்கூடிய ஜெபிக்ககூடிய என்னுடை மிகச் சிறந்த நண்பர் என்று அறிவேன்.

 ஒரு வேளை நான் ஒரு நல்ல புத்தகத்தை படித்தாலோ, நல்ல ஒரு சினிமாவைப் பார்த்தாலோ, அல்லது ஒரு நல்ல ஹோட்டலில் சுவையான உணவை உண்டாலோ என் எல்லா நண்பர்களுக்கும் அதைப் பற்றிச் சொல்லுவேன். இயேசுவில் நான் ஒரு மிகச் சிறந்த ஆச்சரியமான நண்பனை, வழிநடத்துபவரை, தலைவரை, இரட்சகரை மற்றும் தெய்வத்தை கண்டிருக்கிறேன். நான் எப்படி அவரைப் பற்றி என்னுடைய எல்லா நண்பர்களுக்கும் சொல்லாமல் இருக்கமுடியும்? ஒரு வேளை யாராவது கவனித்து, இயேசுவில் விசுவாசம் வைக்க கடந்து வந்தால் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன். உலகம் இதை மதமாற்றம் என்று சொல்லும் ஆனால் நான் என்னுடையதைப் போல இதை ஒரு இதய மாற்றம் என்றுதான் கூறுவேன்.

 ஆனால் நான் சொல்லுவதையெல்லாம் கேட்கும் படி யாரையும் நான் கட்டாயப்படுத்தவோ நிர்பந்திக்கவோமாட்டேன். அப்படி செய்வது என்னுடைய விசுவாசத்திற்கு அர்த்தமற்றதாகும். ஆனால்  எந்த வஞ்சனையும், கட்டாயமும், லஞ்சமும் இல்லாமல் என்னுடைய விசுவாசத்தை பிரசங்கிப்பதற்கும்,  கடைபிடிப்பதற்கும் எனக்கு சட்டப் பூர்வமாக அதிகாரமுண்டு. இப்படிப்பட்ட அடிப்படை மனித உரிமைகள் கூட ஒவ்வொரு நாளும் மிக கொடுமையான முறையில் இந்த சிறந்த இந்திய நாட்டில் மீறப்படுவதென்பது மிகவும் வேதனையளிக்ககூடியதாயுள்ளது.

 (ஆனந்த் மகாதேவன் பதிப்பாசிரியர், அவுட் லுக்) 
 
 

Thursday, June 12, 2008

பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?

    


பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?

ஆசிரியர்: சாமுவேல் கிரீன்

COMPARING THE BIBLE AND THE QUR'AN
(How to do it Accurately)
By Samuel Green



கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் சில விவரங்களைப் பற்றி விவாதிக்கும் போது, சில நேரங்களில் பைபிளையும் குர்ஆனையும் ஒன்றையொன்று ஒப்பிடுகிறார்கள். அவர்கள் பெரும்பான்மையாக கீழ் கண்ட விதங்களில் (தலைப்புக்களில்) அவைகளை ஒப்பிடுகிறார்கள்.

வேதங்கள் எப்படி பாதுகாக்கப்பட்டது (Preservation of text )

வேதங்களின் அதிகாரபூர்வமான தொகுப்புக்கள் (Formation of canon )

இயேசு, பெண்கள், போர்கள் போன்ற தலைப்புகள் குறித்து வேதங்கள் என்ன போதிக்கின்றன (Teaching about Jesus, women, warfare, etc. )

விஞ்ஞான பிழையின்மை (அ) ஆதாரம் (Scientific accuracy )

முரண்பாடுகள் (Contradictions)



நானும் இப்படிப்பட்ட ஒப்பிட்டு முறையைத் தான் கடந்த காலத்தில் செய்துவந்தேன்.  உண்மையில் இது ஒரு பிழையுள்ள மற்றும் நம்மை தவறான வழியில் நடத்தக்கூடிய "ஒரு ஒப்பிட்டு முறையாகும்". இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன.

காரணம் 1: பைபிள் மற்றும் குர்‍ஆன் வசனங்களின் சூழ்நிநிலைல (Reason 1. The Context of the Bible and Qur'an)

குர்ஆன் முகமதுவின் வாழ்க்கையைச் சுற்றியுள்ள விவரங்களையும் மற்றும் வெளிப்பாடுகளையும் சொல்கிறது. முகமது, தன் வாழ்க்கையில் நிகழ்ந்த பல சூழ்நிலைகளுக்கு பதிலாக குர்‍ஆன் வசனங்களைச் சொன்னார் அல்லது அவருக்கு வசனங்கள் வெளிப்பட்டது. ஆனால், அந்த சூழ்நிலைகள் (அ) சந்தர்பங்கள் என்ன? போன்ற விவரங்கள் குர்‍ஆனில் எழுதப்படவில்லை. அதாவது, குர்‍ஆன் தன் சொந்த வசனங்கள் வெளிப்பட்ட சூழ்நிலையையும்(Context), கால வரிசை விவரங்களையும்(Chronology) கொண்டு இருக்கவில்லை. குர்‍ஆனை சரியாக புரிந்துக்கொள்வதற்கு, அதன் வசனங்கள் வெளிப்பட்ட சூழ்நிலையையும்(Context), காலவரிசை விவரங்களையும்(Chronology) தெரிந்துக்கொள்வது மிக மிக அவசியமாக உள்ளது. ஆனால், இந்த சூழ்நிலையையும், காலவரிசை முறையையும் நாம் தெரிந்துக்கொள்ளவேண்டுமானால், குர்‍ஆனுக்கு வெளியே உள்ள "இஸ்லாமிய பாரம்பரிய" நூல்களாகிய "ஹதீஸ்களையும், சீராவையும் (Hadith or Sira literature)" நாம் படித்து தெரிந்துக்கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட நூல்கள் நமக்கு குர்‍ஆன் வசனங்கள் வெளிப்பட்ட சூழ்நிலையை சொல்கின்றன. இஸ்லாமிய அறிஞர் Habib Ur Rahman Azami (ஹபீப் உர் ரஹ்மான் அஜாமி) "குர்‍ஆன் ஹதீஸ்கள் மீதும் சீராவின் மீதும் ஆதாரப்பட்டுள்ளது " என்று மிகவும் தெளிவாகச் சொல்லியுள்ளார்.

ஹதீஸ்கள் பயனற்றவை என்றும், அதிகார பூர்வமற்றது என்றும் அவைகளை ஒதுக்கிவிட்டால், குர்‍ஆனில் உள்ள பெரும்பான்மையான வசனங்களின் பொருளும், அவைகளை புரிந்துக்கொள்வதும் முடியாமல் போய்விடும். (Habib Ur Rahman Azami, The Sunnah in Islam, pp. 29-31.)

(I)t is almost impossible to understand or explain the meaning of a large number of Qur'anic verses if the Traditions are rejected as useless and inauthentic. (Habib Ur Rahman Azami, The Sunnah in Islam, pp. 29-31.)


ஆனால், பைபிள் வித்தியாசமானது. பைபிள் தன் வசனங்களை புரிந்துக்கொள்ள தேவையான சூழ்நிலையையும்(Context), காலவரிசை விவரங்களையும்(Chronology) தன்னுள் கொண்டுள்ளது. பைபிளின் வெளிப்பாடுகள் உலகம் உண்டானது எப்படி என்ற விவரங்களோடு ஆரம்பிக்கிறது, அதன் பிறகு நடந்த நிகழ்வுகளை சொல்லிக்கொண்டு வந்து கடைசியில், உயிர்த்தெழுதல் காலத்தைப் பற்றி சொல்லி விட்டு, சரியாக முடிவடைகிறது. பைபிள் பல கட்டளைகளை கொடுக்கும் போது அல்லது நற்செய்தியை அறிவிக்கும் போது, அவ்வசனங்கள் எந்த சூழ்நிலையில்(Context) வெளிப்பட்டது என்ற விவரங்களை மிகவும் தெளிவாகச் சொல்கிறது. ஆகவே, நீங்கள் பைபிளை புரிந்துக்கொள்ள வேண்டுமானால், உங்களுக்கு தேவை பைபிள் மட்டும் தான்.

இறைவனுடைய வார்த்தைகள் எப்படி இருக்கவேண்டுமோ அது போல, பைபிள் தன் சுயதேவையை தானே பூர்த்திசெய்துக்கொள்ளும் தகுதியுடையதாக உள்ளது. எனவே, பைபிளை குர்‍ஆனோடு மட்டும் ஒப்பிட்டு பார்ப்பது பிழையுள்ளதாகும் மற்றும் அது தவறான முடிவுக்கு கொண்டுபோகும்.
(The Bible is self-sufficient, as the word of God should be. Therefore to compare the Bible to the Qur'an alone is misleading and inaccurate.)

காரணம் 2: பழக்கங்கள் மற்றும் நம்பிக்கைகள் (Practices and Beliefs)

இஸ்லாமின் பெரும்பான்மையான அடிப்படை கோட்பாடுகள், நம்பிக்கைகள் பற்றிய விவரங்கள் குர்ஆனில் இல்லை.

"முகமது சொன்னது, செய்தது" என்று சொல்லக்கூடிய "சுன்னா-Sunnah" என்பது குர்‍ஆனுக்கு துணையாக உள்ள அடுத்தபடியான நூல்கள் ஆகும். உண்மையைச் சொல்லவேண்டுமானால் சில சந்தர்பங்களில் இந்த "சுன்னா" குர்‍ஆனை விட அதிக முக்கியத்துவம் பெறுகிறது அல்லது "சுன்னா" வின் கை குர்‍ஆனைவிட ஒரு படி மேலே நிற்கிறது.

உதாரணத்திற்கு ஒரு எடுத்துக்காட்டை இங்கு சொல்லட்டும், அதாவது குர்‍ஆன் தினமும் மூன்று முறை நமாஜ் செய்யவேண்டும்(24:58 and 11:114) என்று சொல்லும் போது, சுன்னா "ஐந்து முறை" தினமும் நமாஜ் செய்யவேண்டும் என்று சொல்கிறது (முஸ்லீம்கள் இன்று பின்பற்றுவது "சுன்னா" நிர்ணயித்த தினமும் 5 முறை நமாஜ் செய்வதைத்தான், குர்‍ஆன் சொல்வதை அல்ல‌ ).



இன்னும் சில சந்தர்பங்களில் இஸ்லாமின் ஆரம்ப கால பழக்கவழக்கங்களை பார்க்கும் போது, சில பழக்கங்கள், "சுன்னா" விற்கு முரண்பட்டவையாக கூட இருந்தது. உண்மையைச் சொல்லவேண்டுமானால், குர்‍ஆன் வெளிப்படையாக எல்லா கட்டளைகளையும் சொல்லவில்லை , இஸ்லாமின் அடிப்படை கட்டளைகளையாவது குர்‍ஆன் முழுமையாக சொல்வதில்லை. அதாவது, குர்‍ஆன் "நமாஜ் (தொழுகை)" செய்யவேண்டும் என்று கட்டளையிடுகிறது, ஆனால், எப்படி செய்யவேண்டும்? என்று சொல்வதில்லை. எப்படி நமாஜ் செய்யவேண்டும்? என்ற வழிமுறை முழுக்க முழுக்க "சுன்னா"வின் மீது ஆதாரப்பட்டுள்ளது. (Cyril Glass鬠"Sunnah", The Concise Encyclopedia of Islam, pp. 381-382.)

குர்ஆன் தினமும் தொழவேண்டிய தொழுகையாகிய "நமாஜ்" என்ற சலாவை(Salah) கடமையாக்கி அதை கட்டளையிட்டுள்ளது, மற்றும் அதை எப்படி செய்யவேண்டும் என்ற சில விவரங்களை (like Qiyam, Ruku`, Sujud and Qira'ah) குர்ஆன் சொல்கிறது. ஆனால், நமாஜை சரியான முறையில் எப்படி செய்யவேண்டும் என்பதையும், இந்த நமாஜ் சம்மந்தப்பட்ட இதர செயல்பாடுகள் எந்த வரிசையில் செய்யவேண்டும் என்பதைப் பற்றிய விவரங்கள் குர்ஆனில் சொல்லப்படவில்லை. அதே போல, ஹஜ்(Hajj) என்னப்பட்ட "மக்காவிற்குச் செல்லும் புனித யாத்திரை" என்பது ஒரு மதசம்மந்தப்பட்ட கடமை என்று குர்ஆன் சொல்கிறது. ஆனால், ஹஜ் என்பதை எந்த ஒழுங்கில்(Method) செய்யவேண்டும்? ஹஜ் செய்யும் போது என்னென்ன சாம்பிரதாயங்களை(Formalities) எப்படி செய்யவேண்டும்? போன்ற விவரங்களை குர்ஆன் விவரிப்பதில்லை. ஹஜ்ஜை எப்படி செய்யவேண்டும் என்று சரியான வழிமுறையை நபியே செய்துகாட்டியுள்ளார். (Habib Ur Rahman Azami, pp. 10-11.)

குர்ஆன் மற்றும் சுன்னா(Sunnah) என்ற இரண்டின் உதவியுடன் மட்டுமே இஸ்லாம் சட்டம்(Islamic Shariah) முழுமைபெறும். (Habib Ur Rahman Azami, p. 5.)
எப்படி தொழவேண்டும்? எப்போது தொழவேண்டும்? மற்றும் என்ன சொல்லி தொழவேண்டும்? ஹஜ் கடமையை நிறைவேற்றும் போது அதை எப்படி செய்யவேண்டும்? சுன்னத்து(circumcision) எப்படி செய்யவேண்டும்? போன்ற, இஸ்லாமிய அடிப்படை கோட்பாடுகள் பெரும்பான்மையாக முகமதுவின் செயல்பாடுகளிலிருந்து(சுன்னா) வருகிறது . இஸ்லாமுக்கு சுன்னா(Sunnah) என்பது மிக முக்கியமானது, ஆனால், சுன்னா என்பது குர்ஆனிலிருந்து வரவில்லை, அதற்கு பதிலாக அது ஹதீஸ்களிலிருந்தும், சீராவிலிருந்தும் வருகிறது. மறுபடியும் நாம் கவனிக்கும் பொது, பைபிள் கோட்பாடுகள் இப்படி இல்லை. ஒரு கிறிஸ்தவனுக்கு தேவையான எல்லாவற்றையும் பைபிள் தன்னகத்தே கொண்டுள்ளது. இறைவன் நம்மை இரட்சிப்பதற்காக என்ன செய்தார்? மற்றும் இதனால் தன் பெயர் எப்படி கனப்படுத்தப்படும் மற்றும் நாம் எப்படி வாழவேண்டும்? போன்றவற்றை பைபிள் தெளிவாகச் சொல்கிறது. பைபிள் நம்முடைய ஞானத்திற்கும் விடுதலைக்கும் ஆதாரமாக உள்ளது. எனவே, பைபிளை குர்‍ஆனோடு மட்டும் ஒப்பிட்டு பார்ப்பது பிழையுள்ளதாகும் (inaccurate) மற்றும் அது தவறான முடிவுக்கு(misleading) கொண்டுபோகும்.


மிகச் சரியான ஒப்பிடும் முறை ( A More Accurate Comparison )

இப்போது ஒன்று மட்டும் தெளிவாக புரிந்துவிட்டது, அதாவது பைபிளை குர்ஆனோடு ஒப்பிடுவது என்பது சரியான ஒப்பிடுதல் அல்ல. ஏனென்றால், பைபிள் கிறிஸ்தவத்தின் அஸ்திபாரம் ஆகும். ஆனால், குர்ஆன் இஸ்லாமின் அஸ்திபாரம் அல்ல. மாறாக, குர்ஆன், ஹதீஸ்கள், மற்றும் சீரா இவை மூன்றும் இஸ்லாமின் அஸ்திபாரமாக உள்ளது. நீங்கள் கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய புத்தகங்களை நேர்மையாகவும், சரியான முறையிலும் ஒப்பிட்டு பார்க்கவேண்டும் என்று விரும்பினால், நீங்கள் இவ்விரு மார்க்கங்களின் முக்கியமான புத்தகங்களை ஒப்பிட்டுப்பார்க்கவேண்டும்.
( If you want an honest and accurate comparison between the books of Christianity and Islam then you must compare the essential books of both religions.)

ஹதீஸ்கள் பற்றிய சில விவரங்கள்: "ஹதீஸ் - hadith" என்ற வார்த்தையின் அர்த்தம் "ஒரு பொருளின் விவரம் அல்லது செய்தி (an account or news about something) " என்பதாகும். ஒரு ஹதீஸின் அளவு ஒரு வாக்கியமாகவோ அல்லது ஒரு பக்கம் அளவிற்கோ இருக்கும். இஸ்லாமைப் பொருத்தவரை முகமது என்ன சொன்னாரோ மற்றும் அவர் என்ன செய்தாரோ அது தான் ஹதீஸ்களின் முக்கிய கருப்பொருளாக உள்ளது. இதைத் தான் "சுன்னா" என்றுச் சொல்வார்கள், ஆக, ஹதீஸ்களில் இருப்பது "சுன்னா" ஆகும். ஹதீஸ்கள் பலவகையில் மிகப்பெரிய தொகுப்புகளாக உள்ளது. முக்கியமான ஹதீஸ் தொகுப்புக்கள் என்ன என்று பேராசிரியர். மசுத்-உல்-ஹசன் அவர்கள் விளக்குகிறார்.

முசன்னப் ("Musannaf"[1]) முறைப்படி அங்கீகரிக்கப்பட்ட ஹதீஸ்களின் தொகுப்புக்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

அல்-புகாரி (கி.பி. 870 ) [7658 ஹதீஸ்களின் தொகுப்பு]

முஸ்லீம் (கி.பி. 875 ) [7748 ஹதீஸ்களின் தொகுப்பு]

அபு தாவுத் (கி.பி. 875 ) [5276 ஹதீஸ்களின் தொகுப்பு]

அல்-திர்மிதி (கி.பி. 892) [4415 ஹதீஸ்களின் தொகுப்பு]

அல்-நசய் (கி.பி. 915) [5776 ஹதீஸ்களின் தொகுப்பு]

இபின் மஜா (கி.பி. 886) [4485 ஹதீஸ்களின் தொகுப்பு]


... அல்-புகாரி மற்றும் முஸ்லீம் ஹதீஸ் தொகுப்புக்கள் மிகவும் உயர்ந்ததாகவும் உண்மையானதாகவும் மதிக்கப்படுகிறது, எனவே இவை இரண்டும் "அல்-சஹிஹை - Al-Sahihain" ஆதாரப்பூர்வமான மற்றும் அதிகாரபூர்வமான ஹதீஸ்கள் என்று அழைக்கப்படுகிறது.

Al-Bukhari

The collection of hadith  by Imam Bukhari. 9 volumes in the  English/Arabic translation.

Muslim

The collection of hadith  by Imam Muslim. 8 volumes in the  English/Arabic translation.



மஸ்நத் - "Musnad"[2] முறைப்படி மிகவும் புகழ்பெற்ற ஹதீஸ் "அஹமத் இபின் ஹன்பல் " (கி.பி. 855 )தொகுத்த ஹதீஸ் தொகுப்பாகும்.

ஷியா முஸ்லீம் பிரிவினரின் ஹதீஸ் தொகுப்புக்களில், முகமது நபி என்ன சொன்னாரோ அல்லது செய்தாரோ போன்ற செய்திகளை மட்டும் அது உள்ளடக்கிக் கொண்டு இருப்பதோடு மட்டுமல்லாமல், ஷியா இமாம்கள்(அறிஞர்கள்)சொன்னதும் செய்ததும் அது உள்ளடக்கியுள்ளது.

ஷியா முஸ்லீம் பிரிவினரின் ஹதீஸ் தொகுப்புக்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.



முஹம்மத் இபின் யாகுப் அல்-குல்லுனி (கி.பி. 939)

முஹம்மத் அல்-ஹும்மி (கி.பி. 991)

தஹிர் அல்-ஷரிப் அல்-முர்தஜா (கி.பி. 1004)

முஹம்மத் அல்-துசி (கி.பி. 1067) (Prof. Masud-ul-Hasan, History of Islam, vol. 1, p. 613.)

"முவட்டா மாலிக் - Muwatta of Malik" என்ற பெயரில் ஒரு முக்கியமான ஹதீஸ் தொகுப்பும் உள்ளது.

சீராவைப் பற்றிய சில விவரங்களைத் தெரிந்துக்கொள்ளலாம். "சீரா"க்கள் என்பது முகமதுவின் வாழ்க்கையைப் பற்றிய சரிதைகள் ஆகும். இவைகள் முகமதுவின் வாழ்க்கையின் சூழ்நிலையையும், கால வரிசை முறையையும் தெரிவிக்கின்றன. இந்த சூழ்நிலையும், கால வரிசை முறையும் தான் குர்ஆன் வசனங்களின் சூழ்நிலையும்(Context), காலவரிசையு(Chronology)மாக இருக்கிறது. பழமைவாய்ந்த இரண்டு சீராக்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

முஹம்மத் இபின் இஷாக் (கி.பி. 773) Via இபின் ஹிஸம் (கி.பி. 840) recension, சீரத் ரசூல் அல்லாஹ் (English translation 798 pages[3].)

முஹம்மத் இபின் சைத் (கி.பி. 852), கிதாப் அல்-தபாகத் அல்-கபீர் (English translation, 1097 pages[4].)

( Muhammad ibn Ishaq (d. 773 C.E.) via ibn Hisham's (d. 840 C.E.) recension, Sirat Rasul Allah. (English translation 798 pages[3].)

Muhammad ibn Sa'd (d. 852 C.E.), Kitab al-Tabaqat al-Kabir, (English translation, 1097 pages[4].))

Ibn Ishaq

Ibn Ishaq, Sirat Rasul Allah  translated as 'The Life of Muhammad'

Ibn Sa'd

Ibn Sa'ad, Kitab Al-Tabaqat Al-Kabir


இக்கட்டுரையை படிக்கும் நீங்கள், இஸ்லாம் மார்க்கத்திற்கு குர்ஆன் மட்டுமல்லாமல், இன்னும் பல முக்கியமான புத்தகங்கள் இருப்பதை கவனிக்கமுடியும். இந்த இதர புத்தகங்களின் அளவை பார்க்கும் போது அவைகள் குர்ஆனை விட மிகவும் பெரியதாக காணப்படுகிறது.

புகாரி மற்றும் முஸ்லீம் ஹதீஸ்களில் உள்ள வசனங்களின் எண்ணிக்கை குர்ஆனின் மொத்த வசனங்களாகிய 6236 வசனங்களை விட அதிகமாக உள்ளது. ஒரு முன்னாள் இஸ்லாமிய அறிஞர் ஒரு முறை எனக்கு கீழ்கண்டவாறுச் சொன்னார், அதாவது, "இஸ்லாமில் 10% குர்ஆன் மற்றும் 90% ஹதீஸ்கள் (ஹதீஸ் மற்றும் சீரா)" என்றார். குர் ஆன் என்பது ஒரு "வரை படத்தின்" நான்கு பக்கங்களிலும் போடப்பட்டு இருக்கும் சட்டங்கள்(Frame) போன்றது. குர்ஆன் சில எல்லைகளை குறித்துக் கொடுக்கும், ஆனால் அந்த படத்தில் வரையப்பட்டிருக்கும் விவரங்கள் அனைத்தும் ஹதீஸ்கள் மூலமாக கொடுக்கப்படுகிறது. ( The Quran is like the frame of a picture. It sets some boundaries, but the details of the picture are provided by the traditions. )

சில செயல்முறை விளக்கங்கள்: (Some Application)

1. பைபிளை குர்ஆனோடு ஒப்பிடும் இஸ்லாமிய அறிஞர்கள் மற்றும் தலைவர்கள் நேர்மையுள்ளவர்களாக நடந்துக்கொண்டு மக்களை ஏமாற்றுவதை இனி நிறுத்திவிடவேண்டும். அவர்கள் இனி "குர்ஆன் தனக்குள் தானே முழுமையானது அல்ல" என்று மக்களுக்கு போதிக்கவேண்டும். இனி பைபிளோடு குர்ஆனை மட்டும் ஒப்பிடுவதோடு மட்டுமல்லாமல், இஸ்லாமில் உள்ள முக்கியமானதாக கருதப்படும் இதர அனைத்து புத்தகங்களையும் ஒப்பிடுங்கள். ஒரு இஸ்லாமிய அறிஞர் இப்படி நேர்மையற்ற முறையில் பைபிளோடு குர்ஆனை மட்டும் ஒப்பிட்டு வாதாடுவதை, இக்கட்டுரையை படிக்கும் நீங்கள் கவனிக்க நேர்ந்தால், உடனே தைரியம் கொண்டு அவர் செய்துக்கொண்டு இருக்கும் இந்த தவறை அவருக்கு எடுத்துக்கூறுங்கள்.

2. "பைபிளோடு குர்ஆனை மட்டும் ஒப்பிடுவது சரியானது" தான் என்று கிறிஸ்தவர்கள் நினைத்துக்கொண்டு ஏமாந்துப் போகாதீர்கள். இதைப் பற்றி எச்சரிக்கையாக இருங்கள். கிறிஸ்தவம் என்பது பைபிள் ஒன்றின் மீது மட்டும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. ஆனால், இஸ்லாம் குர்ஆன் மீது மட்டுமல்ல, அதோடு கூட ஹதீஸ்கள் மீதும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. ஒரு முஸ்லீம் "இரண்டு புத்தகங்களையும்" ஒப்பிடுங்கள் என்று உங்களிடம் கூறினால், உடனே நீங்கள் "நேர்மையான முறையில்" ஒப்பிடவேண்டுமானால், குர்ஆனோடு கூட ஹதீஸ்களையும், சீராவையும் பைபிளோடு ஒப்பிடவேண்டும் என்று அழுத்திச்சொல்லுங்கள்.

3. ஒரு வேளை இக்கட்டுரையை படிக்கும் நீங்கள் ஒரு "கிறிஸ்தவரல்லாதவராகவோ" அல்லது ஒரு "முஸ்லீமாகவோ" இருப்பீர்களானால்,"உண்மையில் குர்ஆனும் பைபிளும் ஒரே வகையான புத்தகங்கள் இல்லை" என்பதை நினைவில் கொள்ளவும். குர்ஆன் என்ன வசனங்கள் சொல்கிறதோ அந்த வசனங்கள் வெளிப்பட்ட சந்தர்ப்பத்தை(சூழ்நிலையை - Context )அது சொல்வதில்லை அல்லது இஸ்லாமில் பின்பற்றப்படும் பல கோட்பாடுகளைப் பற்றிய சூழ்நிலையை குர்ஆன் சொல்வதில்லை. இவைகள் வேறு புத்தகங்களிலிருந்து வருகிறது. ஆனால், ஒரு கிறிஸ்தவனுக்கு தேவையான நம்பிக்கை மற்றும் அவன் பின்பற்றவேண்டிய எல்லா கோட்பாடுகளையும் பைபிள் தன்னிடம் கொண்டுள்ளது.

4. நாங்கள் "இயேசுவை உங்கள் உள்ளத்தில் ஏற்றுக்கொள்ளுங்கள்" என்று உங்களுக்கு அழைப்பு விடுக்கும் போது, பைபிள் ஒன்றை மட்டும் நீங்கள் நம்பினால் போதும் என்றுச் சொல்கிறோம்.

5. ஒரு சாதாரண கிறிஸ்தவன் "பைபிள் முழுவதையும் படித்து அதன் கோட்பாடுகளை நன்றாக புரிந்துக்கொள்ள" அவனால் முடியும், ஆனால், ஒரு சாதாரண முஸ்லீம் குர்ஆனையும் மற்றும் இஸ்லாமில் உள்ள எல்லா புத்தகங்களையும் படித்து புரிந்துக்கொள்வது என்பது மிகவும் கடினமான வேலையாகும். ஏனென்றால், இஸ்லாமிய அடிப்படை கோட்பாடுகள் அடங்கிய புத்தகங்கள் அதிக அளவில் உள்ளது, மட்டுமல்லாமல் அவைகள் எல்லாம் இன்னும் மொழிபெயர்க்கப்படவில்லை. உண்மையைச் சொல்லவேண்டுமானால், முகமதுவின் வாழ்க்கையை முதன் முதலில் சரிதையாக எழுதிய, இபின் இஷாக் அவர்களின் புத்தகமாகிய "சூரத் ரசூல் அல்லா - Ibn Ishaq's, Sirat Rasul Allah" என்ற புத்தகத்தை பெரும்பான்மையான முஸ்லீம்கள் படிப்பதில்லை.

பின் குறிப்புகள் :


[1] Where the hadiths are ordered according to topic.
[2] Where the hadiths are ordered according to narrator.
[3] Ibn Ishaq, Sirat Rasul Allah, translated as, The Life of Muhammad, (tr. A. Guillaume), Karachi: Oxford University Press, 1998.
[4] Ibn Sa'ad, Kitab Al-Tabaqat Al-Kabir, (tr. S Moinul Haq) New Delhi: Kitab Bhavan, 2 volumes, no date.

References

Habib Ur Rahman Azami, The Sunnah in Islam, U.K.: UK Islamic Academy, 1995.
Prof. Masud-ul-Hasan, History of Islam, Delhi: Adam Publishers & Distributors, 2002.
Cyril Glassé, The Concise Encyclopedia of Islam, San Francisco: Harper & Row, 1989.

Copyright © 2007 Samuel Green.

மூலம்: http://answering-islam.org/Green/compare.htm

ஆசிரியர் சாமுவேல் கிரீன் அவர்களோடு தொடர்பு கொள்ள: மெயில் விலாசம்
ஆசிரியருடைய இதர கட்டுரைகள் ஆங்கிலத்தில் படிக்க : இங்கே சொடுக்கவும்.